2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.9 பில்லியன் ரூபா PAT ஐ பதிவு செய்துள்ளது HNB

Share with your friend

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்ட ஒரு கொந்தளிப்பான ஆண்டைத் தொடர்ந்து, HNB PLC 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு பலம்மிக்க ஆரம்பத்தை உருவாக்கியது, இதன்காரணமாக ஆண்டுக்கு 80% வீதம் அதிகரித்து, 10.7 பில்லியன் ரூபாவைப் பதிவு செய்தது, அதே நேரத்தில் வரிக்கு பிந்தைய இலாபமாக (PAT) 6.9 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன் முதல் காலாண்டில் 42% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதன்படி குழு முறையே 11.3 பில்லியன் ரூபா மற்றும் 7.3 பில்லியன் ரூபாவாக ஒருங்கிணைக்கப்பட்ட வரிக்கு முந்தைய இலபம் (PBT) மற்றும் வரிக்கு பிந்தைய இலாபம் (PAT) அமைந்திருந்தது.

முதல் காலாண்டின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த HNB PLC இன் தலைவர் அருணி குணதிலக்க, “கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சீர்குலைவுகளில் இருந்து நாடு மீள முடியாமல் இருக்கின்ற போதிலும், 2023 இன் முதல் மூன்று மாதங்களில் வங்கி ஒரு உறுதியான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. எங்களின் உறுதியான கவனம், விவேகமான முடிவெடுத்தல் மற்றும் மாற்றங்களை எதிர்கொள்ள சுறுசுறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம். நாட்டின் பாரி பொருளாதார முன்னணியில் உள்ள நேர்மறையான முன்னேற்றங்கள் ஊக்கமளிப்பதாக உள்ளது, மேலும் எங்கள் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதிலும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதிலும் எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.” என தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிக வட்டி விகிதங்கள், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 31.6 பில்லியன் ரூபா நிகர வட்டி வருவாயைப் பதிவு செய்ய வங்கிக்கு உதவியது, இது 87% ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. எமது டிஜிட்டல் சேவை பக்கமாக பலர் ஈர்த்துக் கொள்ளப்பட்டதன் மூலம் அதிக கார்ட் விநியோகத்தால், நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 31% வீதம் அதிகரித்து 4.2 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட நேர்மறையான சிந்தைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி பணப்புழக்கம், அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளில் ஒரு பகுதி தளர்வுக்கு வழிவகுத்தது. இது இலங்கை ரூபாயின் பெறுமதியை ஓரளவுக்கு அதிகரிக்க வழிவகுத்தது. மார்ச் 2023 வரையிலான 3 மாதங்களில் 10% சதவீத அதிகரிப்பைக் கொண்டிருந்தது. இதன் விளைவாக நிகர அந்நிய செலாவணி இழப்புகள் காரணமாக காலாண்டில் வங்கி சுமார் 2 பில்லியன் ரூபா நிகர மறுமதிப்பீட்டு இழப்பை பதிவு செய்தது.

செயல்பாட்டு வருவாயில் பாதிப்புகள் இருந்தபோதிலும், மார்ச் 2023 இன் முடிவில், நிகர நிலை III கடன் விகிதம் 3.8% மற்றும் நிலை III வழங்கல் பாதுகாப்பு 55.5% ஆக, தொழில்துறையில் சிறந்த சொத்துத் தர நிலைகளில் ஒன்றை வங்கியால் பராமரிக்க முடிந்தது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பின்னடைவுகளின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஏற்பாடுகளைச் செய்த வங்கி, காலாண்டில் 11.4 பில்லியன் ரூபா மொத்த இழப்பு ஏற்பட்டதை சுட்டிக்காட்டியது. இது கடன்கள் மற்றும் முற்பணங்கள் மற்றும் 6.7 பில்லியன் ரூபா ஏனைய குறிப்பிட்ட காலத்திற்கான நிதிநிலை அறிக்கை (off-balance sheet) வெளிப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு நாணய மதிப்பிலான அரசாங்கப் பத்திரங்களில் 4.7 பில்லியன் ரூபாவைக் குறைத்தது.

2023 முதல் காலாண்டில் செயற்பாட்டுச் செலவுகள் 26% அதிகரித்தது, 2022 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அதிக பணவீக்கத்தின் தாக்கம் காணப்பட்டது. எவ்வாறாயினும், வருவாயின் வளர்ச்சியானது செலவை விட அதிகமாக உள்ளது, இது 2023 முதல் காலாண்டில் 26% செலவு-வருவாய் விகிதமாக பரிவர்த்தனையானது.

HNB PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனாதன் அலஸ் குறிப்பிடுகையில், “முன்னெப்போதுமில்லாத வகையில் சவால்களில் சிக்கித் தவிக்கும் வங்கித் துறையானது, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் HNB இன் செயல்திறனைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பாதுகாப்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு மிகவும் தேவையான நம்பகத்தன்மையைக் கொண்டுவரும், இது வெளிநாட்டு மூலதனச் சந்தைகளுக்கான அணுகலை இலங்கை படிப்படியாக மீட்டெடுக்க அனுமதிக்கிறது. முன்னோக்கி நகரும் போது, நிதித்துறையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பை இறுதி செய்ய வேண்டியது அவசியம்.” என தெரிவித்தார்.

டிசம்பர் 2022 முதல், 2023 இன் முதலாம் காலாண்டின் இறுதியில் சொத்து அடிப்படை வளர்ச்சி 1.7 டிரில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அதிக வட்டி விகிதங்கள் மற்றும் ரூபாவின் வலுவான நிலை காரணமாக கடனுக்கான குறைந்த தேவையின் விளைவாக, வங்கியின் மொத்த கடன் புத்தகம் காலாண்டில் 4% வீதத்தால் குறைந்து 1.0 டிரில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. மறுபுறம், வங்கி வைப்புக்கள் அதன் வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்தன, இதன் விளைவாக 29 பில்லியன் ரூபாவாக விரிவடைந்து 1.4 டிரில்லியன் ரூபாவை எட்டியமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend