இலங்கையில் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் முன்னோடியாகத் தரப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பத்திற்கான இலங்கை நிறுவனம் (SLIIT) 2025ஆம் ஆண்டுக்கான பிரதான உள்ளேற்புக்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளது. அதிகரித்துவரும் தொழில்துறையின் கேள்வியை நிவர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பரந்துபட்ட இளமானிப் பட்டங்கள் பற்றி அறிந்துகொள்ளுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு, கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட SLIIT கடந்த 25 வருடங்களில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான பலமான மரபைக் கட்டியெழுப்பியுள்ளது. மாலபே, கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு கம்பஸ் வளாகங்கள், மாத்தறை மற்றும் குருநாகலில் இரண்டு மையங்களைக் கொண்டுள்ள SLIIT நாடு முழுவதிலும் பரவலான கல்வியை வழங்கி வருகின்றது.
கல்வியின் சிறப்புத் தொடர்பில் கொண்டுள்ள SLIIT அர்ப்பணிப்பானது உலகளாவிய மற்றும் பிராந்திய தரப்படுத்தல்களில் கிடைத்திருக்கும் ஈர்க்கக்கூடிய அந்தஸ்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி அரசுசாரா உயர்கல்வி நிறுவனம் என்ற இடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனம், டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழங்களுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக AD Scientific Index World Young University / Institution Rankings 2025 இல் முதலாவது இடமும் இதற்குக் கிடைத்துள்ளது. பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் (ACU) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச சங்கம் (IAU) போன்ற பெருமைக்குரிய அமைப்புக்களில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டமை வரை இந்நிறுவனத்தின் உலகளாவிய அங்கீகாரம் விரிந்துசெல்கின்றது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்கம் என்பனவே எதிர்காலம் என்பதை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தகவல் தொழில்நுட்பத்தில் BSc (Hons) பட்டத்தை வழங்கும் நான்கு வருடப் பாடத்திட்டம் உள்ளிட்ட பரந்துபட்ட விடயப்பரப்புக்களை கணினிப் பீடம் கொண்டுள்ளது. இது தவிரவும் மாணவர்கள் மென்பொருள் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, கணினிக் கட்டமைப்பு மற்றும் வலையமைப்புப் பொறியியல், தகவல் விஞ்ஞானம், தகவல் கட்டமைப்புப் பொறியியல், ஈடுபாடுகொண்ட ஊடகம் போன்ற துறைகளில் சிறப்புப் பட்டத்தைப் பெறக்கூடிய தகவல் தொழில்நுட்ப BSc (Hons) பட்டப் பாடநெறிகளையும் தொடரமுடியும். இந்தப் பட்டக்கல்விகள் யாவும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும் அதிகரித்துவரும் தொழில்துறையின் தேவைக்கு இணங்கும்வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
AACSB இன் உறுப்பினரான SLIIT வணிகப் பிரிவானது, நடைமுறைத் திறன்கள், தொழில்துறையின் பொருத்தப்பாடு என்பவற்றை வலிறுத்தும் வகையிலான பாடநெறிகள் மற்றும் ஆற்றல் மிக்க வணிக உலகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்ப்படுத்தும் தொழில்வாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டங்களை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. வணிகப் பகுப்பாய்வு, வணிக முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் நிதியியல், சரக்குப்போக்குவர்தது மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவம், தகவல் கட்டமைப்பு முகாமைத்துவம் மற்றும் தர முகாமைத்துவம் போன்ற விடயப்பரப்புக்களில் மாணவர்களுக்குச் சிறப்புப் பட்டத்தைப் பெறக் கூடிய BBA (Hons)பட்டப் பாடநெறிகளை வணிகப் பிரிவு வழங்கி வருகின்றது. இதற்கு மேலதிகமாக வளர்ச்சியுற்று வரும் பஷன் தொழில்துறைக்கு ஏற்ப மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஐக்கிய இராச்சியத்தின், Manchester Metropolitan பல்கலைக்கழகத்தின் Manchester Fashion நிறுவனத்துடன் இணைந்து BSc (Hons) பஷன் வணிகம் மற்றும் முகாமைத்துவப் பட்டத்தையும் SLIIT வணிகப் பிரிவு வழங்கி வருகின்றது.
பொறியியல் பீடமானது மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல், சிவில் பொறியில், பொருட்கள் பற்றிய பொறியியல், இயந்திரப் பொறியியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் (மெக்காட்ரொனிக்ஸ்) போன்றவற்றில் BSc Engineering (Hons) பட்டத்தைப் பெறுவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இயந்திரவியல் பொறியியலில் BSc Engineering (Hons) மற்றும் சிவில் பொறியியலில் BSc Engineering (Hons) போன்ற படத்திட்டங்கள் இலங்கை பொறியியல் நிறுவனத்தினால் நிபந்தனையுடனான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பட்டங்கள் கோட்பாட்டு ரீதியான கற்பித்தல், நடைமுறைப் பயிற்சி, நேரடியான அனுபவம் போன்றவற்றை உள்ளடக்கிய கலவையாக அமைந்துள்ளன. ஐக்கிய Manchester Metropolitan பல்கலைக்கழகத்துடன் இணைந்து BSc (Hons) Quantity Surveying பட்டப்பாடத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடமானது உளவியலில் BSc (Hons)இ சட்டமானி (LLB (Hons), ஆங்கிலத்தில் BA (Hons) போன்ற போன்ற நான்கு வருட உள்நாட்டப் பட்டங்களை வழங்குகின்றது. பௌதீக விஞ்ஞானம், உயிரியில் விஞ்ஞானம், ஆங்கிலம், சமூக விஞ்ஞானம் போன்றவற்றில் B.Ed (Hons) பட்டங்கள், உயிரியல்தொழில்நுட்பம் மற்றும் நிதியியல் கணிதம் மற்றும் பிரயோக புள்ளிவிபரவியல் போன்றவற்றில் BSc (Hons) பட்டப் பாடத்திட்டங்கள் என்பனவும் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. அவுஸ்திரேலியாவின் பல்கலைக்கழகத்திற்கான தாதியியல் பட்டப் பாடத்திட்டத்திற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் தாதியியல் உயர்டிப்ளோமா திட்டமும் இங்கு காணப்படுகின்றது. இது இலங்கையின் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தேசிய தொழில்சார் தகைமை தரம் 6 ற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
SLIIT இன் கட்டடக்கலைப் பிரிவின் கட்டடக்கலை BSc (Hons) பட்டத்திட்டத்திற்கு இலங்கை கட்டடக்கலை நிறுவனத்தின் பகுதி 1 அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்ளக வடிவமைப்பில் BA (Hons) பட்டம் உள்ளிட்ட இரு பட்டக்கல்வியையும் வழங்குகின்றது. இந்தத் திட்டங்கள் இணையற்ற வடிவமைப்பு நிபுணத்துவம், தொழில்நுட்ப புலமை மற்றும் நிலையான நடைமுறைகள் பற்றி மாணவர்கள் ஆழமான புரிதலை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றன.
அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்தின் முதலாவது அவுஸ்திரேலிய செயற்கை நுண்ணறிவில் இளமானிப் பட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் ஊடாக SLIIT இன் சர்வதேசப் பாடத்திட்டங்கள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. முழுமையாக இலங்கையில் பூர்த்தி செய்யக்கூடிய முதலாவது பட்டக் கல்வித் திட்டமாக இது அமைகின்றது. அவுஸ்திரேலியாவின் Queensland பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் Curtin பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் Western Australia பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியத்தின் Edinburgh பல்கலைக்கழகம் போன்ற உலகளாவிய தரப்படுத்தலில் முதல் 100ற்குள் தரப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மையின் மூலம் மாணவர்கள் சிறந்த கல்வி மற்றும் மாணவர் வாழ்க்கையின் பயனைப் பெறுகிறார்கள்.
நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உளவியலில் BSc (Hons), சட்டமானி (LLB (Hons), கட்டடவடிவமைப்பில் BSc (Hons), உள்ளகவடிவமைப்பில் BA (Hons), அளவுமதிப்பீட்டில் BSc (Hons), வணிக முகாமைத்துவ முதுமானி போன்ற மூன்று வருடப் பட்டத்திட்டங்களை வழங்கி வருகின்றது. Manchester Metropolitan பல்கலைக்கழகத்தின் ஆயnஉhநளவநச குயளாழைn நிறுவனத்துடன் இணைந்து BSc (Hons) பஷன் வணிகம் மற்றும் முகாமைத்துவப் பட்டத்தையும் மாணவர்கள் தொடரமுடியும்.
சிறப்பை வெளிப்படுத்துவது என்ற விடயத்தில் கல்வியாளர்களுக்கு அப்பால் அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் வரை SLIIT இன் உறுதிப்பாடு விரிந்துசெல்கின்றது. புதிய மாலபே வளாகத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட ‘Library Learning Commons’’ வசதியானது ஆய்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கற்றல் சூழலை வழங்குகின்றது. அத்துடன், அனைத்து வசதிகளுடனும் கூடிய உடற்பயிற்சி கூடம் மற்றும் 20ற்கும் அதிகமான விளையாட்டு வாய்ப்புக்கள் போன்ற பரந்துபட்ட வசதிகளும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. தொழில்நுட்பம், கலை, விளையாட்டு மற்றும் தொழில்முயற்சி போன்றவற்றை இலக்காகக் கொண்ட கழகங்களில் மாணவர்கள் பங்கேற்க முடியும். உளவளஆற்றுப்படுத்தல் மற்றும் நல்வாட்வு, குறுகிய வாகன சேவை, மருத்துவ வசதி, தொழில்வழிகாட்டி உள்ளிட்ட பல்வேறு ஆதரவு சேவைகளையும் SLIIT முன்னெடுக்கின்றது.
25,000ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 40,000ற்கும் அதிகமான பழைய மாணவர்கள் என சிறந்ததொரு சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுடன், 96 வீதமானவர்களுக்குத் தொழில்வாய்ப்புக் கிடைத்திருப்பதால் தொழில்துறைக்குத் தயாரான பட்டதாரிகளை உருவாக்குவதில் SLIIT இன் வினைத்திறனான செயற்பாடு பறைசாற்றப்படுகின்றது. SLIIT இனால் உருவாக்கப்பட்டுள்ள பாரிய மற்றும் பரந்துபட்ட இந்தச் சமூகமானது வாய்புக்களை ஒன்றிணைப்பதற்கும், மாணவர்களின் கல்வி மற்றும் துறைசார் பயணத்துக்கு வலுவான ஆதாரமாகவும் அமைந்துள்ளது. அத்துடன், Student Services Help Desk, மாணவர் கழகம், English Help Desk மற்றும் துறைசார் உளவளஆற்றுப்படுத்தல், வழிகாட்டல் போன்ற துணை சேவைகளையும் SLIIT வழங்குகின்றது.
க.பொ.த உயர்தரம் (இலங்கை) மற்றும் லண்டன் உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் அனைத்துத் துறைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு SLIIT முழுமையான புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. ஏனைய புலமைப்பரிசில் வாய்ப்புக்களுடன் செயற்பாட்டின் அடிப்படையிலான மற்றும் விளையாட்டு அடிப்படையிலான புலமைப்பரிசில்களைப் பெறும் வாய்ப்புக்களும் உள்ளன. எல்லைகளைத் தாண்டி பரிணமிக்கவும், தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தவும் விரும்பும் வருங்கால மாணவர்கள், SLIIT இன் துடிப்பான கற்றல் சமூகத்தைப் பற்றி மேலும் அறிய வருமாறு அழைக்கப்படுகின்றனர். ஆர்வமுள்ள மாணவர்கள்apply.sliit.lkஇணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் அல்லது விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்த விபரங்களை SLIIT இன் கம்பஸ் வளாகத்திற்கு விஜயம் செய்து அல்லது +94 11 7544801 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அல்லது info@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகத் தொடர்பு கொண்டு அல்லது www.sliit.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.