2025 ஆகஸ்ட் மாதத்திற்கான ஆடை ஏற்றுமதி தரவு

Share with your friend

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஆடை ஏற்றுமதி வருவாய் 479.14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான வருவாயுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 1.33% வீழ்ச்சியென ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மன்றம் கூறுகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியானது 0.92% சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனுக்கான ஏற்றுமதி வருவாய் நூற்றுக்கு 4.83%இனாலும் மற்றும் 2.6% வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆடை ஏற்றுமதி வருவாயானது குறிப்பிடத்தக்க அதிகாிப்பை காட்டியுள்ளதாகவும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி இந்த காலகட்டத்தில் அந்த வருவாய் 3.39 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே காலப்பகுதியில் 3.16 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமைந்திருந்ததுடன் இது 7.48% அதிகரிப்பாகும்.

இந்த வருவாய் அதிகரிப்பானது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரிட்டனைத் தவிர) ஏற்றுமதி வருவாய் 14.66% அதிகரித்துள்ளது, அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளின் மதிப்பு 2.58% மற்றும் ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் 9.45% கேள்விஅதிகரித்துள்ளது.


Share with your friend