3S வசதிகளுடன் கூடிய BYD-இன் ஏழாவது காட்சியறை இரத்தினபுரியில் திறந்து வைப்பு

Share with your friend

இலங்கையின் மிகவும் பிரபலமான மாற்று புதிய சக்தி வாகன (New Energy Vehicle) வர்த்தகநாமமான BYD நிறுவனம், இலங்கையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து இரத்தினபுரியில் தனது ஏழாவது காட்சியறையை திறந்து வைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் முழுமையான 3S (விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியையும் அறிமுகப்படுத்தவும் BYD நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இப்புதிய விரிவாக்கம், இலங்கை முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர, நிலைபேறான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான BYD மற்றும் JKCG Auto-வின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

படுகெதர பிரதான வீதியில் அமைந்துள்ள BYD இன் இப்புதிய சேவை நிலையம், N M I EV Solutions Pvt Ltd, நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சப்ரகமுவ மாகாணம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இங்கு வந்து சேவைகளைப் பெறலாம்.

இந்த ஒருங்கிணைந்த சேவை நிலையத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை வாங்கவும், வழக்கமான பராமரிப்புக்கான நேரத்தை முன்பதிவு செய்யவும், அசல் வாகன உதிரிப்பாகங்களை பெறவும் ஒரே இடத்தில் வாய்ப்பு கிடைக்கிறது.

இதனிடையே, இரத்தினபுரி காட்சியறையில் SHARK 6, SEALION 6, DOLPHIN, SEALION 5 மற்றும் BYD தொடரில் உள்ள ஏனைய மாதிரிகள் உட்பட புதிய மாற்று புதிய சக்தி வாகனம் மற்றும் plug-in hybrid வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சேவைப் பிரிவில் புதிய மாற்று சக்தி வாகன தொழில்நுட்பத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.

இரத்தினபுரியில் திறக்கப்பட்டுள்ள BYD இன் இப்புதிய 3S வசதிகளுடன் கூடிய காட்சியறை தொடர்பில் John Keells CG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், “இரத்தினபுரியில் எமது ஏழாவது காட்சியறையை திறப்பது, நாடு முழுவதும் உள்ள எங்கள் வலையமைப்பை வலுப்படுத்துவதோடு, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மேலும் நெருக்கமாகவிட்டோம். இலங்கை முழுவதும் மாற்று புதிய சக்தி வாகனசூழலமைப்பை தொடர்ந்து அபிவிருத்தி செய்யும் வேளையில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இலங்கையர்களுக்கு நிலைபேறான போக்குவரத்து ஒரு நடைமுறை சாத்தியமான தேர்வாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். இங்கு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள சேவை மற்றும் உதிரிபாகங்கள் வசதிகள் அந்த தொலைநோக்குப் பார்வையை மேலும் ஆதரிக்கும்.” என்றார்.

இத்திறப்பு விழாவில் உரையாற்றிய N M I EV Solutions Pvt Ltd நிறுவனத்தின் தலைவர் இந்திக ராஜபக்ஷ, மாற்று புதிய சக்தி வாகனங்களை ஏற்றுக்கொள்ளலுக்கு இப்பகுதி தயாராக உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார். “இரத்தினபுரி பல மாகாணங்களை இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இப்பகுதி வழியாக பயணிப்பவர்களுக்கும் இந்த இடம் மிக முக்கியமானது. மாற்று புதிய சக்தி வாகன உரிமையை எளிமையாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். தொழில்நுட்ப திறமையும், உதிரிப்பாகங்கள் கிடைக்கும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் வாகனங்களுக்கும் உயர்தர சேவையையும் விற்பனைக்கு பின் பராமரிப்பையும் உறுதி செய்கிறது.” என்றார்.

தற்போது BYD காட்சியறைகள் மேல், தென், மத்திய, வடமேல், கிழக்கு, சப்ரகமுவ மாகாணங்கள் என பல பகுதிகளில் விரிவடைந்துள்ளது. இந்த வலையமைப்பை ஆதரிக்கும் உட்கட்டமைப்பில் கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கராப்பிட்டிய, மாத்தறை, தங்காலை, புத்தளம், குருநாகல் மற்றும் கண்டி உட்பட மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிறுவப்பட்ட 21 சார்ஜிங் நிலையங்கள் அடங்கும்.

எனவே, ஏழு காட்சியறைகளுடன் தற்போது செயல்பட்டு வரும் BYD மற்றும் JKCG Auto நிறுவனம், நாட்டின் இன்னும் பல பகுதிகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இலங்கை முழுவதும் மாற்று புதிய சக்தி வாகனங்களின் பயன்பாட்டை விரைவாக பரப்புவதற்கான அடிப்படை வசதிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.


Share with your friend