தெற்காசியாவின் ஆற்றல்மிக்க நாட்டின் சந்தைகளில் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கான தேடல் ஆரம்பம்
- விருது நிகழ்வின் ஐந்தாவது பதிப்புக்கு தகுதியான இலங்கை நிறுவனங்கள் செப்டெம்பர் 02 வரை விண்ணப்பிக்கலாம்
- PropertyGuru Asia Property Awards (இந்தியா) 3ஆவது பதிப்புடன் இணைந்தவாறு ஒக்டோபரில் பிரத்தியேக கொண்டாட்டம்
PropertyGuru Asia Property Awards (Sri Lanka) நிகழ்வு, தெற்காசியாவின் மிகவும் ஆற்றல்மிக்க நாட்டின் சந்தையில் சிறந்த சொத்து மேம்பாட்டாளர்கள் (property developers) மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாடுகளுக்கான (real estate developments) பல்வேறு பிரிவுகளின் கீழ் 2022 இல் விருதுகளை வழங்கவுள்ளது.
முன்னணி சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru (NYSE: PGRU) ஏற்பாடு செய்துள்ள 5ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards (இலங்கை) எதிர்வரும் ஒக்டோபர் 14, 2022 (வெள்ளிக்கிழமை), பிரத்தியேக கண்காட்சி மற்றும் விருது வழங்கல் மற்றும் PropertyGuru Asia Property Awards (இந்தியா) மூன்றாம் பதிப்பு கொண்டாட்டட்டட்டத்துடன் இணைந்தவாறு இடம்பெறவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்காக இலங்கையிலிருந்து தகுதியான நிறுவனங்கள், 57 பிரிவுகளில் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். நாட்டின் சிறந்த மேம்பாட்டாளர்களுக்கான ஒன்பது பிரிவுகள், அத்துடன் ESG, நிலைபேறான வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கான விசேட அங்கீகாரங்கள் மற்றும் வணிகத் திட்டங்களுக்கான பல்வேறு கௌரவிப்புகள் இதில் உள்ளடங்குகின்றன. இருப்பிடம், விலைப் பிரிவு, நிறைவடைந்துள்ள நிலை, இணைப்பு, பிராண்ட், முக்கிய இடம், செல்லப்பிராணி நட்பு, சூழல் நட்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட பல்வேறு பிரிவுகளில், குடியிருப்பு மேம்பாடுகளில் முன்மாதிரியான சாதனைகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இது தவிர இலங்கையில் சிறந்த குடியிருப்புத் திட்டங்களைக் கௌரவிப்பதோடு, இப்பட்டியலில் சிறந்த மாலைதீவு வீடுகளுக்கான மதிப்புமிக்க பட்டங்களும் அடங்கும். அதாவது சிறந்த குடியிருப்பு மேம்பாடு (மாலைதீவுகள்) மற்றும் சிறந்த குடியிருப்பு மேம்பாடு (மாலே) ஆகியவற்றை இதில் குறிப்பிடலாம்.
2022 பதிப்பிற்கான முக்கிய திகதிகள்; செப்டம்பர் 02, 2022: விண்ணப்ப இறுதித் திகதி, செப்டம்பர் 19–22, 2022: தள ஆய்வுகள், செப்டம்பர் 26, 2022: இறுதி நடுவர் முடிவுகள், ஒக்டோபர் 14, 2022: நிகழ்வின் இரவு விருந்து மற்றும் விருது வழங்கும் விழா, டிசம்பர் 09, 2022: பிராந்திய ரீதியான இறுதி நிகழ்வு.
தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் இறுக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சுயாதீன நடுவர்கள் குழுவால் பட்டியலிடப்படும். பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்: https://www.asiapropertyawards.com/en/nominations
விருதுகள் நிகழ்வானது, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான நற்பெயரை பேணியவாறு, தொழில்ரீதியாக இயங்குகின்றதும் முற்றிலும் வெளிப்படையான தீர்ப்பு வழங்கல் முறையையும் முழுமையாகப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வருட விருதுகள் HLB இனால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. இது சுதந்திரமான ஆலோசனை மற்றும் கணக்கியல் நிறுவனங்களின் புகழ் பெற்ற உலகளாவிய வலையமைப்பாகும்.
2022 PropertyGuru Asia Property Awards (Sri Lanka) யின் நாட்டின் முக்கிய வெற்றியாளர்கள், தாய்லாந்தின் பெங்கொக்கில் டிசம்பர் 09 ஆம் திகதி இடம்பெறும் 17ஆவது PropertyGuru Asia Property Awards இறுதிப் போட்டியில் சர்வதேச விருதுகளுக்காக போட்டியிட தகுதி பெறுவர்.
Home Lands Skyline (Pvt) Ltd ஆனது, 4ஆவது PropertyGuru Asia Property Awards (Sri Lanka) 2021 இல், சிறந்த மேம்பாட்டாளர் உள்ளிட்ட ஏழு விருதுகளுடன் ஆதிக்கம் செலுத்தியது. 16ஆவது PropertyGuru Asia Property Awards இறுதிப் போட்டியில், ஏனைய விருதுகளுடன், சிறந்த மேம்பாட்டாளர் (ஆசியா) என்ற பட்டத்திற்காக, பிராந்தியம் முழுவதும் உள்ள ஏனைய சகாக்களுடன் அந்நிறுவனம் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, PropertyGuru Asia Property Awards, சொத்து மேம்பாடு, கட்டுமானம், கட்டடக்கலை, உள்ளக வடிவமைப்பு, நிலைபேறான கட்டட நடைமுறைகளை உள்ளடக்கிய தொழில்துறையில் உயர்தர பணிகளுக்கு வெகுமதி அளிக்கிறது. அவுஸ்திரேலியா, சீனா, ஹொங்கொங், மக்காவ், ஜப்பான் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள ஆற்றல்மிக்க சொத்துச் சந்தைகளை உள்ளடக்கிய வகையில், இந்த தொடர் நிகழ்வானது பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றது.
PropertyGuru Asia Property Awards மெய்நிகர் நிகழ்வுத் தொடர், கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்லைன் மூலம் ஆரம்பிக்கப்பட்டதோடு, 2021 இலும் அது இடம்பெற்றது. பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பான இது, இன்றுவரை சுமார் 1 மில்லியன் பார்வையிடலை அடைந்துள்ளது.
5ஆவது PropertyGuru Asia Property Awards (இலங்கை) யினது உத்தியோகபூர்வ கேபிள் டிவி கூட்டாளராக History Channel விளங்குகின்றது. உத்தியோகபூர்வ பத்திரிகை: PropertyGuru Property Report; உத்தியோகபூர்வ மக்கள் தொடர்பாடல் கூட்டாளர்: PR Wire; உத்தியோகபூர்வ ESG பங்குதாரர்: Baan Dek Foundation; உத்தியோகபூர்வ மேற்பார்வையாளர்: HLB ஆகியன விளங்குகின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: awards@propertyguru.com இற்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளம்: AsiaPropertyAwards.com இற்கு செல்லவும்.