850 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான உரிமை வெளியீட்டினை அறிமுகம் செய்யும் Softlogic Finance PLC

Share with your friend

Softlogic Capital PLC இன் துணை நிறுவனமான Softlogic Finance PLC, அதன் போதுமான மூலதன அளவு விகித (CAR) தேவைகளைப் பின்பற்றுவதற்கும், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் வணிக விரிவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் புதிய மூலதனத்தைத் திரட்டுவதற்காக ரூ. 850 மில்லியனுக்கும் அதிகமான தொகையை திரட்டுவதற்கான உரிமைகள் வெளியீட்டிற்குச் செல்லும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. உரிமை வெளியீடு நிறுவனத்தின் பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு நானூற்று இருபத்தி மூன்று (423) சாதாரண பங்குகளுக்கு தலா ரூ.7.31 என்ற விலையில் நூறு (100) புதிய சாதாரண பங்குகளை செயல்படுத்தும்.

அதன்படி நூற்று பதினாறு மில்லியன் நானூற்று எண்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று (116,483,901) சாதாரண பங்குகளின் உரிமை வெளியீட்டின் மூலம் வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரிக்க நிறுவனம் முன்மொழிவதுடன் ஒரு பங்கிற்கு ரூ. 7.31/- என்ற பெறுமதியில் சாதாரண பங்குகளின் மொத்தத் தொகை எண்ணூற்று ஐம்பத்தொரு மில்லியன் நானூற்று தொண்ணூற்று ஏழாயிரத்து முந்நூற்று பதினாறு (ரூ. 851,497,316/-) ரூபா ஆகும்.

Softlogic Finance PLC இன் செயல்திறன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியான திருமதி Ivon Brohier, உரிமை வெளியீடு குறித்து கருத்து தெரிவிக்கையில், “இரண்டு வருடகாலமாக நிலவிய நோய் பரவல் மற்றும் மோசமான நிதி நெருக்கடி காரணமாக நாடு எதிர்நோக்கி வரும் சவால் நிறைந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வெளியேறும் நிலையில், Softlogic Finance நிறுவனம் வணிகத்தை விரிவுபடுத்துவதிலும், குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்ப மயமாக்களிலும் இணைந்த நிலையில் உள்ளது. தனது தொழில்துறையில் Softlogic குழுமமானது நாட்டின் அழியாத முத்திரையைப் பதித்து, தனித்துவமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய மதிப்பைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம், எமது வாடிக்கையாளர்களின் முன்மொழிவுகளுக்கு அமைய எங்கள் பங்குதாரர்களுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்வதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றுகிறோம்.”

மூலதனம் உட்செலுத்துதல் அடுக்கு 1 (Tier 1) மூலதனத்தை மேம்படுத்தும், அதே வேளையில் விதிமுறைகளால் நிர்ணயிக்கப்பட்ட மூலதனம் போதுமான தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது. நூற்று பதினாறு மில்லியன் நானூற்று எண்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று (116,483,901) புதிய சாதாரண பங்குகள், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) திரி சவி சபையில் பட்டியலிடப்படும்.

Softlogic Holdings PLC என்பது இலங்கையின் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் முற்போக்கான கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படுகிறது, முக்கிய வணிக தொழில்துறை தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளது. ICT, ஹெல்த்கேர், சில்லறை விற்பனை, நிதிச் சேவைகள், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பொழுதுபோக்கு ஆகியன இதில் அடங்கும். Softlogic Finance என்பது 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனமாகும், அத்துடன் 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதிக் குத்தகைச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற விசேட குத்தகை நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share with your friend