Abbott WorkMate Claris 2D மூலம் டேர்டன்ஸ் மருத்துவமனையில் இருதய சிகிச்சையை மேம்படுத்தும் DIMO Healthcare

Share with your friend

இலங்கையில் முதலாவது Electrophysiology (EP) (மின் உடலியக்கவியல்) முறையை செயற்படுத்தியுள்ள டேர்டன்ஸ் மருத்துவமனை, DIMO Healthcare மூலம் அதன் EP கட்டமைப்பை நவீன Abbott WorkMate Claris 2D கட்டமைப்பாக மேம்படுத்தியுள்ளது. ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை எளிதில் அடையாளம் காணவும், அவற்றிற்கு பொருத்தமான விரைவான சிகிச்சையை WorkMate Claris 2D தொகுதி மூலம் வழங்கவும் சிறந்த ஆதரவை இது வழங்குகிறது.

இந்த அதிநவீன தொகுதியானது, பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சையை உறுதி செய்வதோடு, இதய பராமரிப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது. அத்துடன், நீண்டகால நன்மைகளுடன் தரமான நோயாளர் பராமரிப்பையும் வழங்குவதோடு, நோயாளிக்கான நிலைபேறான பராமரிப்புக்கு இது முன்னுரிமை அளிக்கிறது.

வலையமைப்பு மூலம் நேரடியாக புகைப்படங்களைப் பாதுகாப்பாகப் பகிரும் வகையில் Abbott WorkMate Claris 2D தொகுதியில் காணப்படும் தனித்துவமான விசேட திறனானது, இதில் காணப்படும் மிக முக்கிய அம்சமாகும். இதன் மூலம் மருத்துவர்களிடையே உலகளாவிய ரீதியில் நேரடி ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படுவதோடு, ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை தடையின்றி பெறுவதன் மூலம் துல்லியமான சிகிச்சையில் ஈடுபடுபடுத்துவதன் மூலம், சிகிச்சையின் துல்லியத் தன்மையை அதிகரிக்க முடிகிறது.

உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற மருத்துவ உபகரண உற்பத்தி வர்த்தகநாமங்கள் Abbott, Siemens Healthineers, Carl Zeiss ஆகியவற்றின் இலங்கைக்கான பிரதிநிதி எனும் வகையில் DIMO Healthcare நிறுவனம் கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் நம்பகத்தன்மை மற்றும் சுகாதாரத் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதில் நிறுவனம்  கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியன, டேர்டன்ஸ் மருத்துவமனையானது தமது புதிய EP தொகுதியை நிறுவுவதற்காக DIMO Healthcare நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு வழிவகுத்துள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த டேர்டன்ஸ் மருத்துவமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் மருத்துவ சேவைகள் பணிப்பாளருமான வைத்தியர் லசந்த கருணாசேகர, “Abbott WorkMate Claris 2D தொகுதியின் நிறுவலானது, நோயாளிகளுக்கு மிகவும் புத்தாக்கமான மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பில் எமது மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த அதிநவீன தொழில்நுட்பம் எமது நோயாளிகளின் இதயத் துடிப்பு முறைகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை துல்லியமாகக் கண்டறிந்து அவர்களுக்கு அவசியமான உரிய சிகிச்சையை விரைவாக வழங்க உதவும்.” என்றார்.

இது குறித்து DIMO Healthcare பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “DIMO Healthcare மூலம் இலங்கைக்கு மிக உயர்ந்த மருத்துவ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதே எமது குறிக்கோளாகும். டேர்டன்ஸ் மருத்துவமனையில் Abbott WorkMate Claris 2D தொகுதியை நிறுவுவதன் மூலம், சிறந்த நோயாளர் பராமரிப்பை வழங்குவதற்குத் தேவையான வளங்களை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது. இத்தகைய அணுகுமுறைகள் மூலம், ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்புவதும், எமது சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதுமே எமது முதன்மையான நோக்கமாகும்.” என்றார்.

WorkMate Claris 2D தொகுதிக்கு உரித்தான விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவையை DIMO Healthcare வழங்குகின்றது. இதில் தொகுதியின் நிறுவலுக்கான உதவி, மருத்துவ ஊழியர்களுக்கான விசேட பயிற்சி மற்றும் தொகுதியின் தடையற்ற பயன்பாட்டை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவு ஆகியன உள்ளடங்குகின்றன. இது தொடர்பான விரைவான பராமரிப்புக்காக ஒரு பிரத்தியேக சேவைக் குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, இது உயர்தர இருதய பராமரிப்பை வழங்குவதற்கான திறனை மேலும் மேம்படுத்துகிறது.


Share with your friend