Agrotech நிலக்கடலை பிரித்தெடுப்பான் மூலம் பணியை எளிதாக்கும் Hayleys Agriculture

Share with your friend

விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வெளியிடும் நாட்டின் முன்னணி நிறுவனமான Hayleys Agriculture Holdings Ltd, உள்ளூர் விவசாயிகளுக்கு வசதியாகவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவுமாக, நவீன விவசாயத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் திகழ்கின்றது. Hayleys Agriculture நிறுவனமானது, நிலக்கடலை விதைகளை பிரித்தெடுக்க புத்தாக்கமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் Agrotech நிலக்கடலை பிரித்தெடுப்பான் (Groundnut Thresher) கருவியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமது உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில், உள்ளூர் விவசாய சூழலுக்கு ஏற்றவாறு, Hayleys Agriculture Holdings Ltd நிறுவனத்தின் துணை நிறுவனமான Agro Technica Ltd நிறுவனத்தால் இந்த இயந்திரம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்சாரம் மூலம் இயக்கப்படும், Agrotech நிலக்கடலை பிரித்தெடுக்கும் கருவியானது ஒரு மணித்தியாலத்திற்கு 50kg – 60kg உற்பத்தியை பெற உதவுகின்றது. இதேவேளை கைகளால் கதிரடிக்கும் போது ஒரு நாளுக்கு 30kg உற்பத்தியே கிடைக்கின்றது. மிக முக்கியமாக, இந்த இயந்திரம் நிலக்கடலைகளுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது முற்று முழுதாக சேதத்தை ஏற்படுத்தாது என்பதால், இது விவசாயிக்கு சிறந்த முதலீடுகளில் ஒன்றாகும்.

இப்புதிய Agrotech நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம் குறித்து, Hayleys Agriculture Holdings Ltd நிறுவனத்தின் விவசாய உபகரணப் பிரிவின், பொது முகாமையாளர் சுமித் ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் நம்பகமான வர்த்தக நாமமாக Hayleys Agriculture விளங்குகின்றது. சமீபத்திய தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் விவசாய இயந்திரமயமாக்கல் தீர்வுகளை உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கும் அதே நேரத்தில் அவர்களின் இலாபத்தை அதிகரிப்பதே எமது இலக்காகும். அந்த வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம் மற்றுமொரு குறிப்பிடும்படியான தயாரிப்பாகும். இது உள்ளூர் விவசாயத் துறையில் தற்போதுள்ள தேவைகளை நிவர்த்தி செய்கிறது.” என்றார்.

Agrotech நிலக்கடலை பிரித்தெடுக்கும் கருவியினை எடுத்துச் செல்வதும் அதனை இயக்குவதும் எளிதானது என்பது அதன் மிக முக்கியமான அம்சங்களாகும். கைகளால் மேற்கொள்ளும் கதிரடிக்கும் செயன்முறையானது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதால், உற்பத்தி மற்றும் மனித வலுவிற்கு அதிக செலவுக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் இந்த கதிரடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், விவசாயியினால் அதே வேலையை விரைவாகவும் எளிதாகவும் செய்ய முடியும். இது தொழிலாளர் பற்றாக்குறைக்கு சரியான தீர்வாக மாறும் என்பதோடு, இதை விவசாயிகளால் சுயமாக இயக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். Agrotech நிலக்கடலை அறுவடை பிரித்தெடுக்கும் கருவி வழங்கும் அனைத்து நன்மைகளோடும், விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி யாதெனில், இது சிறிய அளவிலிருந்து பாரிய அளவிற்கு அறுவடையை மேற்கொள்ள உதவுவதோடு, அதன் மூலம் உள்ளூர் நிலக்கடலை தேவையை தங்கு தடையின்றி பூர்த்தி செய்யவும் உதவும்.

உலகளாவிய விவசாயமானது, அறுவடைச் செயன்முறையை எளிதாக்குவதற்காக, உயர் தொழில்நுட்பத்தில் இயங்கும் விவசாய இயந்திரங்களை நோக்கி தொடர்ச்சியாக பயணித்து வருகிறது. அந்த வகையில் Hayleys Agriculture ஆனது, இலங்கை விவசாய சமூகத்திற்கு சிறந்த விவசாய தீர்வுகளை வழங்குவதற்கும் உள்ளூர் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கும் உதவியளிக்கிறது.


Share with your friend