AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படைப்புகளை அங்கீகரித்தல் மற்றும் ஊடக கல்வியறிவு திட்டங்களை அறிமுகப்படுத்தும் TikTok

Share with your friend

புத்தாக்கமான வடிவமைப்பின் மூலம் எப்போதும் புத்தம் புதிய அனுபவத்தைச் சேர்க்கும் திறன் கொண்ட TikTok, AI தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. படைப்புகள் வெவ்வேறு தளங்களின் கீழ், குறிப்பாக உருவாக்கும் இடம் (Content Provenance) மற்றும் நம்பகத்தன்மை (Authenticity) ஆகியவற்றின் கீழ் AI ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை தானாகவே அடையாளம் காண, உள்ளடக்க நற்சான்றிதழ்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் வீடியோ உருவாக்கும் தளமாகவும் TikTok மாறியுள்ளது.

AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் சாத்தியமான சவால்களை உணர்ந்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க ஒரு வலுவான மாதிரியை உருவாக்குதல், TikTok இன் திட்டம் தானாகவே அனைத்து AI தாக்கம் கொண்ட உள்ளடக்கத்தையும் லேபிளிடுகிறது. கடந்த ஆண்டில், 37 மில்லியனுக்கும் அதிகமான வடிவமைப்பாளர்கள் லேபிளிங் மூலம் பயனடைந்துள்ளனர், அந்த வடிவமைப்புகளின் தோற்றம் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதலை வழங்குகிறது.

தனது படைப்புகளின் வெளிப்படைத் தன்மையை விரிவுபடுத்தி, அதன் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அங்கீகாரத்தை மிக விரைவாக விரிவுபடுத்தியுள்ள TikTok, அந்த உள்ளடக்கங்களின் metadataவை பதிவிறக்கம் செய்தாலும் அங்கேயே இருக்கச் செய்திருப்பது சிறப்பு. இதன் மூலம், பாவனையாளர்களுக்கும் பிற தளங்களுக்கும் உள்ளடக்க உருவாக்கத்தின் சரியான தன்மையை உறுதிப்படுத்த தேவையான டிஜிட்டல் தரநிலையை TikTok உருவாக்கியது.

TikTok, MediaWise மற்றும் WITNESS உடன் கூடிய தொடர் கல்வித் திட்டங்களையும் ஊடக எழுத்தறிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கே, TikTok ஆனது, AI ஆல் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் தவறான உள்ளடக்கத்தை வேறுபடுத்தி, ஒன்லைன் தகவல்களை பகுப்பாய்வு செய்ய பாவனையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், உலகளாவிய ஊடக கல்வியறிவை வளர்க்கும் நோக்கத்துடன் தொகுக்கப்பட்ட 12 வீடியோ பாடங்களின் தொடரை TikTok வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த Adobe இன் பொது ஆலோசகர் மற்றும் தலைமை அதிகாரி, “உலகளவில் ஏராளமான படைப்பாளிகள் மற்றும் பாவனையாளர்கள் இருப்பதால், உள்ளடக்க ஆதாரம் (Content Provenance) மற்றும் நம்பகத்தன்மை (Authenticity) மற்றும் CAI ஆகிய இரண்டிற்கும் TikTok இன் தலையீடு முக்கியமானது. இந்த கூட்டாண்மை மூலம் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

MediaWiseன் பணிப்பாளர் திரு. அலெக்ஸ் மகாதேவன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “2019 ஆம் ஆண்டில் TikTok இல் எங்கள் Teen Fact-Checking Networkஐ அறிமுகப்படுத்திய பிறகு, நாங்கள் அதன் சார்பாக தலையிட குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டோம். இந்த சமீபத்திய திட்டத்தின் மூலம் போலி உள்ளடக்கத்தைக் கண்டறிய இன்னும் அதிக வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.

Adobe-ன் தலைமையிலான Content Authenticity Initiative (CAI) இல் சேர்வதன் மூலம், TikTok அதன் உள்ளடக்கத்தின் துல்லியத்தை மேம்படுத்தவும், துல்லியமான தரநிலைகளை ஏற்றுக்கொள்வதில் முன்னணியில் உள்ளது. இந்த கூட்டு முயற்சி TikTokல் தானாகவே அடையாளம் காணப்பட்ட AIGC இன் அளவை அதிகரிக்கும், இது மேம்பட்ட பயனர் அனுபவத்திற்கும் நம்பிக்கைக்கும் வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply