AIB தனது இரண்டாவது வருடாந்தப் பட்டமளிப்பை 2023 இல் நடத்துகின்றது

Share with your friend

பசிபிக் பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திடுகின்றது

AIB Sri Lanka என்பது அகாடமி ஆஃப் இன்டர்நேஷனல் பிசினஸ் அண்ட் ஸ்டடி அப்ரோட் (பிரைவேட்) லிமிடெட்டின் வர்த்தக நாமமாகும். AIB Sri Lanka தனது பட்டமளிப்பு விழாவை 26 பெப்ரவரி 2023 அன்று BMICH இல், ஐம்பத்து மூன்றுக்கும் (53)  மேற்பட்ட விருது பெறுபவர்களுடனும் நூற்று அறுபது (160) விருந்தினர்களின் பங்குபற்றலுடனும் நடத்தியது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் டாக்டர். பிரவீன் மகேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். டாக்டர். பிரவீன் மகேந்திரன், ABE (UK) வின் பிராந்தியப் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார். ABE (UK) என்பது UK-வின் மிகப் பழமை வாய்ந்த தொழில்முறை விருது வழங்கும் அமைப்பாகும். AIB என்பது ABE (UK) தகுதிகளை வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட மையமாகும். டாக்டர். பிரவீன் மகேந்திரா அவையினரிடம் உரையாற்றும் போது, புதிய தலைமுறை பட்டப்படிப்புகளின் முக்கிய அடையாளங்களை அடையாளம் காட்டினார். போட்டி மனப்பான்மையும் திறன்களும் சிறந்த முடிவுகளை வழங்கக்கூடியனவாகும். இந்தச் செயன்முறையில் AIB மற்றும் ABE இன் நிகழ்ச்சித்திட்டங்கள் எவ்வாறு உதவக்கூடும் என்பது பற்றியும் பேசப்பட்டது.

இந்நிகழ்வில் BNI முன்னோடி பிரிவின் உப தலைவர் திரு. டிலான் பொன்சேகா பிரமுகராகக் கலந்து கொண்டார். திரு. டிலான் அவர்கள், BNI இன் நேர்மறையான பண்புகளையும், மேலும் BNI உறுப்பினர் வரிசையில் சேர்வதன் மூலம் மாணவர்கள் தொழில் முனைவோர் குறித்து மற்றும் வணிக அனுபவத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தார். AIB, BNI இன் பிரதான உறுப்பினராக இருந்து வருகிறது, 2022 முதல் அதன் மாணவர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

AIB இன் மற்றொரு மைல்கல், பசிபிக் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகும். பசிபிக் பல்கலைக்கழகம் AIB ஊடாகத் தரமான DBA, MBA மற்றும் BBA கற்கை நெறிகளை வழங்கியுள்ளது. பசிபிக் பல்கலைக்கழகத்தின் முதல்வரான பேராசிரியர். லியாம், AIB வழங்கும் கற்கை நெறிகள் தரமானவையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கற்பித்தல் தரம், மற்றும் மாணவர் ஆதரவுச் சேவைகள் என்பன aib எவ்வாறு செயற்படுகிறது என்பதன் அடையாளமாகும், அது சிறப்பாகச் செயற்பட்டு அதன் மாணவர்கள், பங்குதாரர்கள் மற்றும் பரந்த சமூகத்திற்குச் சிறந்த முடிவுகளைத் தொடர்ந்து வழங்கும். 

முகாமைத்துவக் கற்கை நெறிகள், கிராஃபிக் வடிவமைப்பு, தகவல்கள் எழுதுதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் IELTS, PTE போன்ற ஆங்கில மொழிக் கற்கை நெறிகளுக்கு AIB மாணவர்களைப் பரவலாக ஏற்றுக்கொள்கின்றது. இந்த நிறுவனம் கூகுள் மதிப்பாய்வுகளில் 5க்கு 4.9 நட்சத்திர மதிப்பாய்வைக் கொண்டுள்ளது.

AIB Sri Lanka-வின் பணிப்பாளர் திரு கிறிஷ்ஷண்கர் ஜனதானன், சிறந்த தரம் மற்றும் வளர்ச்சியை வழங்குவதன் மூலம் நிறுவனத்திற்குத் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். AIB Sri Lanka என்பது கல்வித் துறையை மையமாகக் கொண்ட ஒரு மையமாக மட்டுமல்லாமல், மனித வளச் சேவைகள் மற்றும் டிஜிட்டல் ஏஜென்சி சேவைகளில் அதன் முயற்சிகளை நோக்காகக் கொண்டுள்ளது. திட்டத்தின் பல வழிகள் மாணவர் ஆதரவின் வளர்ச்சிக்கு, மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீரான தரத்துக்கு வழிவகுத்திருக்கின்றன..


Share with your friend