Air Link Sahasra Holdings நிறுவனத்துக்கு ஆண்டின் சிறந்த வெளிநாட்டுத் தொழில்ககள் ஆட்சேர்ப்பு வர்த்தகநாமத்துக்கான Asia Miracle 2025 விருது

Share with your friend

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் மற்றும் கல்வித் துறையில் முன்னோடியாக திகழும் Air Link Sahasra Holdings தனியார் நிறுவனம் Asia Miracle 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வெளிநாட்டுத் தொழில்கள் ஆட்சேர்ப்பு வர்த்தகநாமம் எனும் விருதை வென்றுள்ளது. 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Sahasra Holdings நிறுவனம் பரந்தளவிலான பல்வேறு சேவைகளை வழங்கும் வெளிநாட்டு தொழில்கள் மற்றும் கல்வித் துறையில் புகழ்பெற்றதும் நம்பிக்கைமிக்கதுமானதொரு நிறுவனமாகும். பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் இந் நிறுவனத்தின் ஊடாக பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புகளையும் கல்வி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர். இதன் பிரதான அலுவலகம் கண்டியில் அமைந்துள்ளதோடு இதர கிளை அலுவலகங்கள் காலியிலும் தெஹியத்தகண்டியிலும் அமைந்துள்ளன.

Sahasra Holdings நிறுவனம் இஸ்ரேல், ருமேனியா, ஜோர்தான், கிரீஸ், ஐக்கிய அமீர் இராச்சியம், அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புகிறது. வெளிநாட்டுக் கல்வியுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகளையும் இந் நிறுவனம் வழங்குகிறது. பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தல், ஆலோசனை, வீசா போன்ற விடயங்கள் அவற்றில் சிலவாகும். மேலும் இந் நிறுவனம் சர்வதேச விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் Transit உதவிகள் உள்ளிட்ட சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகளையும் வழங்குகிறது. தொழில் வாய்ப்புகளை தேடுவோர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Sahasra Holdings இணைய வழி தொழில் பட்டியலும் தனித்துவமானதொரு சேவையாகும். தற்பொழுது அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கை 7400 இற்கும் அதிகமாகும். 400,000 இற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்டுள்ள மேற்படி தளமானது 2400 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்வழங்குநர்களுடன் இணைந்து செயற்படுகிறது. Air Link Sahasra Holdings நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முழுமையாக பதிவு செய்யப்பட்டதொரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சகல ஆட்சேர்ப்புகள் மற்றும் இதர நடவடிக்கைகள் தேசிய தொழில் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்குட்பட்டதாக மேற்கொள்ளப்படுகின்றமை அதன் மூலம் உறுதியாகின்றது. 2020 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சிக்கான நிறுவனத்தில்  (OTIT) தம்மை பதிவு செய்து கொள்ளவும் இந் நிறுவனத்தினால் முடிந்துள்ளது. அதன் ஊடாக ஜப்பான் நாட்டில் தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சித் திட்டங்களில் இலங்கை ஊழியர்களை இணைத்துக்கொள்ளவும் பயிற்றுவிப்பதற்குமான அங்கீகாரம் இந் நிறுவனத்துக்கு உண்டு. இதற்கு முன்னரும் இந்நிறுவனத்துக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. உயர்திறன் விருதுகள் (2012 மற்றும் 2018) மற்றும் தங்கப் பதக்க விருதுகளும் (2022) அதில் அடங்கும்.


Share with your friend