இலங்கையில் Dulux பெயின்ட் தயாரிப்பாளர்களான AkzoNobel பெயின்ட்ஸ் நிறுவனம், பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட Colour of the Year: Sweet Embrace™ தெரிவை அறிமுகம் செய்துள்ளது. pastel pink வர்ணத்தில், மென்மையான இறகுகள் மற்றும் மாலை முகில்களின் வர்ணத்தை ஒத்ததாக அமைந்துள்ள இந்த ஆண்டின் வர்ணத் தெரிவு, அமைதியான மற்றும் வரவேற்பு மிகுந்த பகுதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சமூக, அலங்கார மற்றும் நுகர்வோர் போக்குகள் தொடர்பான ஆழமான ஆய்வின் பிரகாரம், இந்த வரவேற்பை கொண்டுள்ள வர்ணமானது, நிலையில்லாத உலகில், எம்மை உரித்தாயிருப்பதற்கு செய்ய எதிர்பார்க்கும் நிலையில் இந்த வர்ணம் வரவேற்பை பெற்றதாக அமைந்திருப்பதை கண்டறிந்தோம். வீட்டில் ஆரம்பித்து, எமது தனிப்பட்ட நினைவுகள் மற்றும் உறவுகளை “விசேடமான ஏதேனுமொரு பகுதியில்” கொண்டிருப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
AkzoNobel’இன் உள்ளக பெயின்ட்கள் மற்றும் மேற்பூச்சுகள் நிபுணர்கள் மற்றும் சர்வதேச அலங்கார நிபுணர்கள் ஆகியோர், Sweet Embrace மற்றும் அதன் பிரத்தியேகமான வர்ணத் தெரிவுகள் போன்றன இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவியாக அமைந்திருக்கும் என கருதுவதுடன், எதிர்வரும் ஆண்டில் நாம் எவ்வாறு வசிப்போம் என்பதில் நேர்த்தியான தாக்கத்தை செலுத்துவதாகவும் அமைந்திருக்கும் எனவும் கருதுகின்றனர். AkzoNobel இன் சர்வதேச கலையம்ச நிலையத்தின் ஆக்கபூர்வ பணிப்பாளர் திருமதி. ஹெலீன் வென் ஜென்ட் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த வர்ணத் தெரிவுகள் என்பது நாம் வாழும் காலப்பகுதிக்கமைய எமது சூழலை மாற்றியமைத்துக் கொள்ளவும், எமது வாழிடப்பகுதிகளில் உறுதித் தன்மை மற்றும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.” என்றார்.
2024 ColourFutures™ வர்ணப் போக்கு அறிக்கையின் பிரகாரம், மூன்று மேலதிக வர்ணத் தெரிவுகளான warm, calm மற்றும் uplifting போன்றன Sweet Embrace™இன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, நுகர்வோருக்கு தெரிவு செய்து கொள்வதற்கான நெகிழ்ச்சியை வழங்குவதுடன், தமது பிரத்தியேகமான தோற்றப்பாட்டு பிரதிபலிப்பை கொண்டிருப்பதற்கும் உதவுகின்றது. warm வர்ணத்தினூடாக சௌகரியமான மற்றும் பாதுகாப்பான இல்லம் எனும் உணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், கல், மண் மற்றும் களி ஆகியவற்றின் இணைந்த வர்ணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. calm வர்ணத்தினூடாக இயற்கை பற்றிய சிந்தனைகளையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளதுடன், மரங்கள் மற்றும் கடல் ஆகியவற்றின் மென்மையான பச்சை மற்றும் நீல வர்ணங்களை இணைப்பதாக அமைந்துள்ளது. இறுதியாக, uplifting வர்ணத் தெரிவு என்பது, dreamy lilacs மற்றும் modern yellows ஆகியவற்றின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
AkzoNobel பெயின்ட்ஸ் லங்கா பிரைவட் லிமிடெட் வணிக தலைமை அதிகாரி திரு. அமில இந்திக அறிமுக நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “Sweet Embrace ஐ போன்று எதுவும் வெதுவெதுப்பான சௌகரியமான ஆறுதலை வழங்குவதாக இல்லை. இந்த ஆண்டின் Colour of the Year என்பது சௌகரியம் மற்றும் அமைதியான உணர்வை மாத்திரம் எமது வாடிக்கையாளர்களின் வசிப்பிடப்பகுதிகளுக்கு வழங்காமல், சந்தை அடிப்படையிலான தீர்வுகளையும் நீண்ட கால அடிப்படையிலான பங்காண்மைகளையும் வழங்குவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
எமது Colour of the Year 2024 பற்றிய மேலதிக தகவல்களுக்கு, https://www.dulux.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும். #CF24 #YourSpecialSomewhere #Duluxlk #AkzoNobel #ColourFutures ஆகியவற்றையும் சமூக ஊடகங்களில் பின்தொடரலாம்.