முன்னணி பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகைகள் நிறுவனமும், இலங்கையில் Dulux பெயின்ட் வகைகள் உற்பத்தியாளருமான AkzoNobel, ஆண்டின் வர்ணம் 2023: Wild Wonder ஐ அறிமுகம் செய்துள்ளது. விளை பயிர்களின் வர்ணத்தின் பிரகாசம் எம்மை இயற்கையுடன் இணைப்பதாக அமைந்துள்ளதுடன், வலு மற்றும் நேர்த்தித் தன்மையை உருவாக்குவதாக அமைந்துள்ளது.
இன்றைய உலகில் ஆதரவு, இணைப்பு, ஊக்குவிப்பு மற்றும் சமநிலையை மக்கள் தேடும் நிலையில், இயற்கை உலகில் காணக்கூடிய அதிசயங்களை அவர்கள் நாடுகின்றனர். உள்ளக பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வர்ண நிபுணத்துவ அணியினாலும், சர்வதேச அலங்கார நிபுணர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வினூடாக, சர்வதேச சமூக, அலங்கார மற்றும் நுகர்வோர் போக்குகளின் மையத்தில் எதிர்பார்ப்பு உள்ளதை கண்டறிந்தனர்.
“இயல்பாக நாம் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் Wild Wonder எம்முடன் தொடர்பை ஏற்படுத்துகின்றது, எம்மை ஊக்குவிப்பது இயற்கையாக அமைந்துள்ளதுடன், எமது வாழ்விலும், இல்லங்களிலும் எம்மை சிறப்பாக உணரச் செய்வதில் இயற்கை முக்கிய பங்காற்றுகின்றது. எனவே, 20 வருடங்களில் முதன் முறையாக, இயற்கையின் அம்சங்களைப் பின்பற்ற எமது முழு வர்ணத் தெரிவுகளும் வலுவூட்டப்பட்டுள்ளன.” என AkzoNobel’இன் Global Aesthetic Center இன் புத்தாக்க பணிப்பாளர் ஹெலீன வன் ஜென்ட் தெரிவித்தார்.
நான்கு Dulux அலங்கார பெயின்ட் வர்ணத் தெரிவுகள் Wild Wonder ஐ அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. (Winter’s Silence, 50YY 49/191): Lush Colors (the forest hues), Buzz Colors (meadow brights), Raw Colors (harvest shades) மற்றும் Flow Colors (seashore tones). தமது இல்லங்களையும் நகர சூழல்களையும் மாற்றியமைக்கும் நுகர்வோருக்கு, சுவர்களுக்கு சிறந்த தோற்றத்தை வழங்கக்கூடிய வர்ணத் தெரிவுகளை வழங்கவதாக இவை அமைந்துள்ளன.
AkzoNobel அலங்கார பெயின்ட் வகைகள், தென் கிழக்காசியா மற்றும் தெற்காசியாவின் முகாமைத்துவ பணிப்பாளர் ஒஸ்கார் வெசென்பீக் கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் உளச் சுகாதாரம் தொடர்பில் பல கரிசனைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இல்லத்தையும், இயற்கையுடன் இணைந்ததாக மாற்றியமைப்பது என்பது காலத்துக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கும். சவால்கள் நிறைந்த காலத்தில் ஆதரவளிக்கும் பகுதியை நாம் கொண்டிருக்க வேண்டும். வெளிப்பகுதியின் அடையாளத்தையும், சூழல் கட்டமைப்பையும், உள்ளுணர்வையும் வழங்குவதாக அமைந்திருக்க வேண்டும். Wild Wonder மற்றும் அதன் வர்ணத் தெரிவுகளினூடாக, நுகர்வோர் மத்தியில் உலகின் அதிசயங்கள் பற்றிய உணர்வு சேர்க்கப்படுவதுடன், தமது இல்லங்களில் இயற்கை வித்தையை சேர்ப்பதாக அமைந்துள்ளன.” என்றார்.
AkzoNobel ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர் வசந்த ஹீனடிகல கருத்துத் தெரிவிக்கையில், “தமது வாழிடப் பகுதிகளை மாற்றியமைப்பதில் நுகர்வோர்கள் கவனம் செலுத்தும் நிலையில், எமது வர்ண நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டல் தொடர்பான உறுதித்தன்மையை அவர்கள் கண்டறிகின்றனர். ஆண்டின் வர்ணம் 2023 என்பதனூடாக, தொழிற்துறை பங்காளர்களுடன் உறுதியான கைகோர்ப்புகளை ஏற்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், ஆக்கத்திறனை ஊக்குவித்து, பிரத்தியேகமான, மனித மையப்படுத்திய தீர்வுகளை வெளிப்படுத்தி, இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
AkzoNobel இன் Global Aesthetic Center க்கு இரு பாரிய மைல்கற்களை வழங்குவதாக 2023 ஆம் ஆண்டு அமைந்திருக்கும். அதன் வர்ணமயமான உள்ளம்சப் போக்கினூடாக, 20 ஆவது வருட பூர்த்தியை கொண்டாட முடியும் என்பதுடன், AkzoNobel இல் போக்கு பகுப்பாய்வு, வர்ண ஆய்வு, வர்ண அலங்காரம் மற்றும் கலையமைப்பு போன்றவற்றை அணியினால் எய்தக்கூடியதாக இருக்கும்.
ஆண்டின் வர்ணம் 2023 பற்றிய மேலதிக தகவல்களுக்கு WWW.dulux.lk இணையத்தளத்தைப் பார்க்கவும் மற்றும் சமூக வலைத்தளங்களில் #CF23 என்பதை தொடரவும்.