இலங்கையில் உயர்தர அலுமினியப் பொருட்களின் முதன்மையான உற்பத்தியாளரான Alumex PLC நிறுவனம், அண்மையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் மதிப்புமிக்க ‘Lumin Certification Awards 2025’ விருது விழாவை முன்னெடுத்திருந்தது. இந்த மைல்கல் நிகழ்வானது, Lumin சான்றளிக்கப்பட்ட மதிப்புமிக்க அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட 37 அலுமினிய பொருட்கள் உற்பத்தியாளர்களின் சாதனைகளைக் கொண்டாடியதோடு, Lumin நிபுணர்களின் வலையமைப்பை 114 ஆக விரிவுபடுத்தியது. திறமை கொண்டவர்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், முறையான அங்கீகாரம் மூலம் தொழில் தரங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்த விழா எடுத்துக் காட்டியது.

Alumex PLC இனால் ஆரம்பிக்கப்பட்ட Lumin சான்றளிக்கும் திட்டமானது, கட்டுமானம் மற்றும் தொழில்துறை துறைகளில் சிறந்து விளங்குதல், புத்தாக்கம் மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு மூலக்கல்லாகும். Alumex நிறுவனம் இந்த மதிப்புமிக்க நிகழ்வை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இது நிறுவனத்தின் அலுமினிய உற்பத்தியாளர் வலையமைப்பிற்கான அங்கீகாரமாகவும் அதன் கொண்டாட்டமாகவும் அமைகிறது.
இந்த விழாவில் Lumin சான்றளிக்கப்பட்ட அலுமினிய பொருட்களின் தயாரிப்பாளர்கள் பெறக் கூடிய நன்மைகளை எடுத்துக் கூறப்பட்டது. குறிப்பாக மேம்பட்ட வணிக வாய்ப்புகள், பிரத்தியேக பயிற்சிக்கான வளங்கள், விலை மனு கோரலில் போட்டி மிக்க நன்மைகள் மற்றும் போட்டி நிறைந்த சந்தையில் தங்களை தனித்துவமாகக் காட்டக் கூடிய திறன் ஆகியன இவ்வாறான நன்மைகளாகும். மிகவும் திறமையான இந்த வல்லுநர்கள் Lumin பிரீமியம் அலுமினிய பொருட்களை உருவாக்குவதில் ஒப்பிட முடியாத கைவினைத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இது நவீன கட்டடக்கலை விசேடத்துவத்திற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
பயிற்சி மற்றும் மேம்பாடு ஆகிய முக்கிய அம்சங்களே Lumin சான்றிதழ் திட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக Alumex சுட்டிக்காட்டுகின்றது. இலங்கையில் திறமையான அலுமினிய தயாரிப்பாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, Alumex அதன் பயிற்சி அகடெமியினை 25 வருடங்களுக்கு முன்னர் நிறுவியது. அப்போதிருந்து, உயர் மட்டத்திலான அலுமினிய தயாரிப்புகளை வழங்குவதற்கான நிபுணத்துவத்துடன் அலுமினிய தயாரிப்பாளர்களை முன்னிறுத்துவதில் அகடமி முக்கிய பங்கு வகித்து வருகிறது. நிறுவனம் கொண்டுள்ள நேர்மை, தரம், நிலைபேறான தன்மை ஆகிய மதிப்புகளை உள்ளடக்கிய, நம்பகமான கூட்டாளர்களின் வலையமைப்பை உருவாக்குவதற்கான Alumex இன் பயணத்தில் இந்த நிகழ்வு மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கிறது.
Lumin சான்றளிக்கப்பட்ட அலுமினிய உற்பத்தியாளர்கள் வலையமைப்பின் விரிவாக்கமானது, Alumex இன் நீண்டகால உத்தியின் ஒரு முக்கிய அங்கமாகும். Lumin சான்றளிக்கப்பட்ட அலுமினிய தயாரிப்பாளர்களின் புதிய குழுவினர், இலங்கை முழுவதும் பல்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இக்குழுவானது, தேசிய சந்தையில் Lumin இன் இருப்பையும், செல்வாக்கையும் மேலும் உறுதிப்படுத்துகின்றது.
Lumin அலுமினிய வரிசையானது வலுசக்தித் திறன், நீடித்துழைக்கும் தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை குடியிருப்பு, வணிகம், தொழில்துறை சார்ந்த கட்டடங்களுக்கு நீண்டகாலத் தீர்வுகளை வழங்குகின்றன.
Alumex PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் டெடிவெல இது பற்றித் தெரிவிக்கையில், “Lumin சான்றிதழ் வழங்கும் விழாவானது, இலங்கையின் கட்டுமானம் மற்றும் கட்டடக்கலை தொழில்துறைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எமது தயாரிப்பாளர்கள் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தின் கொண்டாட்டமாகும். பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டில் எமது தொடர்ச்சியான முதலீடுகள் மூலம், தரம் மற்றும் நிலைபேறான தன்மையின் மிக உயர்ந்த தரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிபுணர்களின் வலையமைப்பை நாம் உருவாக்குகின்றோம். இந்த முயற்சியானது, எமது அலுமினிய பொருட்களின் உற்பத்தியளர்களை வலுவூட்டுவதோடு, தொழில்துறை தரங்களை உயர்த்தி, பசுமையான, புத்தாக்கமான எதிர்காலதை ஏற்படுத்துவது தொடர்பான எமது பகிரப்பட்ட தூர நோக்கை செயற்படுத்துகிறது.” என்றார்.