ASUS ஆனது Thincredible Zenbook மடிக்கணினியை மரவை, பீட்சா அல்லது பேனா போன்று மெலிதாக வெளியிடுகின்றது

Share with your friend

தாய்வானியத் தொழில்நுட்ப நிறுவனமான ASUS இன் உள்நாட்டு விற்பனையாளர்களான ASUS ஸ்ரீலங்கா, வியத்தகு புதிய Zenbook S 13 OLED (UX5304), உலகின் மிக மெலிதான 13.3-அங்குல OLED மடிக்கணினியை, நேர்த்தியான 1cm தடிப்பு மற்றும் மிகவும் எடை குறைவான1kg சேஸியுடன், இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவுமே சுற்றுச்சுழலுக்குச் சாதகமான Zenbook ஐ அறிவித்திருக்கின்றது. இந்த Thincredible Zenbook (UX5304), இலங்கையில் ASUS தனது 13th Gen  மடிக்கணினித் தொடரை அறிமுகப்படுத்தியதில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

இத்தகைய மெலிவைப் எட்டுவதற்கு, பல மேம்பட்ட நுட்பங்கள் மற்றும் பொருட்கள் Zenbook S 13 OLED வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன, அவை செயற்திறன், இணைப்பு வசதி (Connectivity) அல்லது பற்றரியின் ஆயுட்காலம் ஆகியவற்றில் குறைவை ஏற்படுத்தாமல், முந்தைய தலைமுறையுடன் (Generation) ஒப்பிடும்போது எடை மற்றும் பரிமாணங்களைக் குறைக்க உதவுகின்றன. இது புத்தம் புதிய பாசால்ட் கிரே (Basalt Gray) அல்லது கிளாசிக் பாண்டர் ப்ளூ (Ponder Blue) ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

Zenbook S 13 OLED ஆனது சுற்றுச்சூழலையும், கார்பன் நடுநிலையையும் உறுதியாக மனதிற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, அதன் உருவாக்கத்தில் மீள்சுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள், FSC கலவை-சான்றளிக்கப்பட்ட பேக்கேஜிங், பசால்ட் கிரே மாடலுக்கான நேர்த்தியான புதிய சுற்றுச்சூழல் நட்பு பிளாஸ்மா பீங்கான் அலுமினியம் மற்றும் ஹாலஜன் அற்ற இலத்திரனியல் பொருட்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன, இவை இந்த Zenbook மாடலை இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் சுற்றுச்சூழல் நட்பான Zenbook மாடலாக மாற்றும்.

Intel Evo™-சான்றளிக்கப்பட்ட Zenbook S 13 OLED, செயற்திறன் மற்றும் பெயர்வுத்திறன் ஆகியவற்றின் சரியான கலவையை வழங்குகின்றது, 13th Gen இன்டெல் கோர் i7 ப்ராசசரை வெப்ப வடிவமைப்புச் சக்திக்கு (TDP) 20 வாட்ஸ் வரை உயர்த்தி 20% வரை மேம்படுத்த முடியும். இது இது நீண்ட கால உயர் திறன் கொண்ட 63 Wh பற்றறியுடன் LPDDR5 RAM இன் 32 GB மூலமும், அல்ட்ராஃபாஸ்ட் 1 TB PCIe 4.0 x4 SSD மூலமும் ஆதரிக்கப்படுகின்றது. ASUS WiFi Master Premium உடன் மேம்படுத்தப்பட்ட WiFi 6E ஆனது வேகமான, நிலையான இணைப்புகளை உறுதி செய்கின்றது. இது மிகவும் கையடக்கமானதாக இருந்தாலும், Zenbook S 13 OLED ஆனது I/O போர்ட்களின் முழுப் பகுதியையும் கொண்டுள்ளது, எனவே பயனர்கள் தங்கள் பயணங்களின் போது டாங்கிள்கள் (Dongle) அல்லது அடாப்டர்களை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. 

இரண்டு அல்ட்ராஃபாஸ்ட் தண்டர்போல்ட்™ 4 USB-C® போர்ட்கள் வேகமான சார்ஜிங் செய்வதற்கும், 4K வெளிப்புற டிஸ்ப்ளேக்கள் மற்றும் 40 Gbps வரையிலான தரவுப் பரிமாற்றங்கள் ஆகியவற்றிற்கும் உதவுகின்றன, மேலும் இதில் USB 3.2 Gen 2 Type-A போர்ட், HDMI® 2.1 போர்ட் மற்றும் 3.5 mm அளவிலான ஆடியோ ஜாக் என்பனவும் காணப்படுகின்றன.

பயணத்தின் போது மேம்படுத்தப்பட்ட வீடியோ கான்பரன்சிங் அனுபவங்களுக்கு, FHD IR கேமராவில் AI-உட்புகுத்தப்பட்ட  விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் AI இரைச்சல்-இரத்துச் செய்யும் தொழில்நுட்பம் ஆகியவை அடங்குகின்றது. இது Windows Hello மூலம் வேகமான மற்றும் பாதுகாப்பான முக உள்நுழைவை ஆதரிக்கின்றது. அதிவேக டால்பி அட்மோஸ்® ஒலியுடன் கூடிய சக்திவாய்ந்த ஹர்மன் கார்டன்-சான்றளிக்கப்பட்ட ஆடியோ சிஸ்டம், 5.25X வரை ஒலியளவை அதிகரிக்க ASUS ஆடியோ பூஸ்டர் தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு ஸ்மார்ட் பெருக்கியைக் கொண்டுள்ளது. ஆழமான, உண்மையான வாழ்க்கைக் காட்சிகளுக்கு, Zenbook S 13 OLED ஆனது 16:10 2.8K (2880 x 1800) ASUS Lumina OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது டால்பி விஷன்(Dolby Vision) சான்றளிக்கப்பட்டது. 

Pantone® சரிபார்க்கப்பட்ட நிறக் கலவை மற்றும் VESA Display HDR™ True Black 500 சான்றளிப்பு, நம்பமுடியாத விவரங்கள் மற்றும் ஆழமான கறுப்பு நிற மட்டங்களை உறுதி செய்கின்றது. டிஸ்ப்ளே TÜV Rheinland மற்றும் SGS ஆல் 70%-குறைந்த நீல-ஒளி உமிழ்வுகளுடன் கண் பராமரிப்புக்குச் சான்றளிக்கப்பட்டது, நீண்ட நேரம் பார்க்கும் அமர்வுகளின் போதும் பயனரின் கண்கள் செளகரியமாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.


Share with your friend