இலங்கையின் முன்னணி கேமரா சில்லறை விற்பனை நிறுவனமான CameraLK மட்டக்களப்பில் தனது புதிய காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இது கிழக்கு மாகாணத்திற்கு உலகத் தரம் வாய்ந்த புகைப்பட மற்றும் வீடியோ உபகரணங்களைக் கொண்டுவருகிறது. இந்த விரிவாக்கம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களை அடைவதற்கான CameraLKஇன் தொலைநோக்கை காட்டுகிறது.



திறப்பு விழாவில் Sony Sri Lankaஇன் நாட்டிற்கான பொறுப்பாளர் தாமஸ் சிம், CameraLK நிர்வாக இயக்குநர் அனுஷ்கா குணசிங்க மற்றும் பல ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
எண் 496, ஞானசூரியம் சத்துக்கம், மட்டக்களப்பு இல் அமைந்துள்ள இந்த புதிய பல பிராண்டு காட்சியறை நகரத்தில் இதுவே முதல் முறையாகும். விசாலமான உட்புற அமைப்புடன் உயர்தர DSLR கேமராக்கள் மற்றும் மேம்பட்ட கண்ணாடி இல்லாத அமைப்புகள் முதல் ட்ரோன்கள் வரை, சிறிய பாயிண்ட்-அண்ட்-ஷூட் மாதிரிகள் மற்றும் விரிவான அளவிலான பாகங்கள் வரை சமீபத்திய மற்றும் பிரீமியம் தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் அணுக முடியும். CameraLK இன் தனித்துவமான சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் சிறந்த உலகளாவிய பிராண்டுகளின் புதிய தயாரிப்புகளை சிறந்த விலையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் CameraLK மட்டக்களப்பில் ஒரு சிறப்பு புகைப்படப் பட்டறையை நடத்தியது. இந்த நிகழ்வில் புகைப்படத்தை ஆர்வலர்களை ஒன்றிணைத்து ஊக்கமளிக்கும் உரைகள், தொழில்முறை பயிற்சிகள், மற்றும் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் ஆகியன இடம்பெற்றன. பட்டறை நடைபெற்ற இடம் ரசிகர்களால் நிரம்பி மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் மட்டக்களப்பு சமூகத்தின் உற்சாகம் மற்றும் உறுதியான ஆதரவை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.
திறப்பு விழாவில் பேசிய CameraLK இன் நிர்வாக இயக்குனர் அனுஷ்கா குணசிங்க “மட்டக்களப்பில் எங்கள் கதவுகளைத் திறந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள துடிப்பான சமூகத்திற்கு சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறப்பான சேவை மற்றும் நிபுணத்துவத்தின் ஆதரவுடன் உலகத்தரம் வாய்ந்த இமேஜிங் தொழில்நுட்பத்தை இலங்கையில் உள்ள அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் நோக்கத்திற்கு இந்த காட்சியறை ஒரு சான்றாகும்” என்று கூறினார்.2010ல் நிறுவப்பட்ட CameraLK துரிதமாக வளர்ச்சி பெற்று இப்போது தெற்காசியாவின் மிகப்பெரிய கேமரா விற்பனை மற்றும் ஆன்லைன் ஸ்டோராக மாறியுள்ளது. புகைப்பட நிபுணர்களின் ஆழ்ந்த அறிவு, சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த விலைகள் என்பவற்றுக்காக புகழ் பெற்ற CameraLK, Sony, Canon, Nikon, Sigma, Tamron, Tokina, DJI, GoPro, Profotto, Wescott உள்ளிட்ட முன்னணி உற்பத்தியாளர்களின் 5,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மற்றும் தற்போது மட்டக்களப்பில் உள்ள கிளைகள் மற்றும் www.cameralk.com என்ற ஆன்லைன் தளத்துடன் CameraLK நிறுவனம் இலங்கையின் புகைப்பட ஆர்வலர்களுக்கான பிரதான இடமாக தொடர்ந்து திகழ்கிறது.