Capitol Developers ‘TwinPeaks’ உடன் SLT-MOBITEL கைகோர்த்து ஒப்பற்ற இணைப்புத்திறன் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது 

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தேசத்தின் நிர்மாணத்துறையின் முன்னோடிகளாக Sanken Group இன் அங்கமான Capitol Developers உடன் கைகோர்த்து, அதன் Capitol TwinPeaks சொகுசு கலப்பு அபிவிருத்தித் திட்டத்துக்கு SLT-MOBITEL Fibre மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.

இந்த சேவையை பெற்றுக் கொடுப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் SLT-MOBITEL நுகர்வோர் வியாபார பிரதம வியாபார அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் Capitol Towers Ltd. முகாமைத்துவ பணிப்பாளர் ரோஹண வன்னிகம ஆகியோரிடையே கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் SLT-MOBITEL மற்றும் Capitol Developers ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் அங்கமாக, SLT-MOBITEL இனால் ஒவ்வொரு TwinPeaks தொடர்மனை அலகுக்கும் நவீன ஃபைபர் உட்கட்டமைப்பு இணைப்புத் திறன் வசதி வழங்கப்படுவதுடன், அதனூடாக அதிவேக, தங்கியிருக்கக்கூடிய மற்றும் தடங்கல்களில்லாத இணைய இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும். அதனூடாக வசிப்போருக்கு தமது சகல டிஜிட்டல் தேவைகளையும் இலகுவாக நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும், இந்த கட்டிடத் தொகுதியின் 1ஆம் டவரின் 12 ஆம் மாடியிலுள்ள A3 மாதிரி தொடர்மனையில் ஸ்மார்ட் ஹோம் சேவைகள் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும். இதனூடாக நவீன தொழில்நுட்பத்தினூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் உயர் தரம் ஆகியவற்றை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். SLT-MOBITEL ஸ்மார்ட் ஹோம் தீர்வுகளினூடாக, வசிப்போருக்கு தமது இல்லத்தின் மின் விளக்குகள், பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் களிப்பூட்டும் சாதனங்கள் போன்றவற்றை தமது மொபைலில் ஒரு app இனூடாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

கொழும்பு நகரின் மையத்தில் அமைந்துள்ள Capitol TwinPeaks இல் 50 மாடிகளைக் கொண்ட இரு டவர்கள் காணப்படுவதில் அவற்றில் 475 சொகுசு தொடர்மனைகள் அமைந்துள்ளன. வசிப்போருக்கு பிரத்தியேகமான மற்றும் சௌகரியமான வாழிட அனுபவத்தை வழங்குவதுடன், உயர் சொகுசு நிறைந்த வாழிட அனுபவத்தையும் நவீன சௌகரியத்தையும் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

SLT-MOBITEL நுகர்வோர் வியாபாரங்கள் பிரிவின் பிரதம வணிக அதிகாரி இமந்த விஜேகோன் கருத்துத் தெரிவிக்கையில், “TwinPeaks இல் நவீன SLT-MOBITEL ஃபைபர் மற்றும் ஸ்மார்ட் ஹோம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக Capitol Developers உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, வசிப்போரின் வாழ்க்கை அனுபவத்தை ஒப்பற்ற இணைப்புத்திறனுடன் மேம்படுத்த முடியும் என்பதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளை அவர்களின் வீட்டு வாயிலில் வழங்கி, சௌகரியமான ஸ்மார்ட் ஹோம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றினூடாக தமது அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.” என்றார்.

Capitol Towers Ltd முகாமைத்துவ பணிப்பாளர் ரோஹண வன்னிகம கருத்துத் தெரிவிக்கையில், “Capitol TwinPeaks என்பது சாதாரண வதிவிட செயற்திட்டம் என்பது மாத்திரமன்றி, சொகுசு மற்றும் நவீன வாழிடத்தின் அடையாளமாகவும் அமைந்துள்ளது. வசதிப்போருக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. நவீன இணைப்புத்திறன் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவைகளை ஒன்றிணைப்பதனூடாக, தொழில்நுட்ப மேம்படுத்தல்களில் Capitol TwinPeaks முன்னிலையில் திகழ்வதை நாம் உறுதி செய்கின்றோம். SLT-MOBITEL உடனான கைகோர்ப்பினூடாக, வசிப்போருக்கு வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதுடன், அவர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையிலான அம்சங்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் முடியும்.” என்றார்.

SLT-MOBITEL மற்றும் Capitol Developers ஆகியவற்றுக்கிடையிலான பங்காண்மையினூடாக கொழும்பு நகரில் சொகுசான வசிப்பிட முறைமையில் புதிய நியமங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. தொழில்நுட்பத்தின் வலிமையை பயன்படுத்தி, வசிப்போரினால் சௌகரியம், வசதி மற்றும் நகரின் அழகிய அம்சங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தும் மைல்கல்லாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள Capitol TwinPeaks இனால் வசிப்போருக்கு பிரத்தியேகமான, நவீன அம்சங்கள் பொருந்திய மற்றும் பாதுகாப்பான வாழிடப்பகுதி போன்றன வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு குடியிருப்பு அலகும் சௌகரியம், இரம்மியமான சூழல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றன. தரம் மற்றும் அலங்காரச் சிறப்புக்காக புகழ்பெற்ற Sanken Construction மற்றும் வடிவமைப்பாளர் P&T Group சிங்கப்பூர் ஆகியவற்றுக்கிடையிலான கைகோர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
C:\Users\011376\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\capitol.jpg

படம்:

SLT-MOBITEL இன் பிரதம வணிக அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் Capitol Towers Ltd முகாமைத்துவ பணிப்பாளர் ரோஹண வன்னிகம ஆகியோர் உடன்படிக்கையை பரிமாறிக் கொள்கின்றனர்.


Share with your friend