Carmart தனியார் நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட Peugeot மோட்டார் வாகனங்கள், அவற்றை ஆடர் செய்த வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டன. பிரெஞ்சு உற்பத்தியின் உயர் திறனின் தனித்துவமான அடையாளமாக விளங்கும் Peugeot மோடடார் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தல், விநியோகித்தல் மற்றும் பழுதுபார்ப்பதற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட முகவராக Carmart தனியார் நிறுவனம் திகழ்கிறது. Peugeot மோட்டார் வாகனங்களுக்கு முதலில் முற்பணத் தொகை செலுத்திய வாடிக்கையாளர்கள் மாத்திரம் கலந்து கொண்ட நிகழ்வான இது மோட்டார் வாகனங்கள் தொடர்பாக ஆர்வங்கொண்டுள்ள பலரும் மிக உற்சாகத்துடன் எதிர்பார்த்த Peugeot 2008, 3008 மற்றும் 5008 ரக SUV வாகனங்களை உத்தியோகபூர்வமாக இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பமாகவும் அமைந்தது. ஆக்கத்திறன், பாதுகாப்பு தொடர்பான புத்தாக்கம் மற்றும் புரட்சிகரமான ஓட்ட இயக்குசக்தி போன்ற காரணிகளின் தொகுப்பான இந்த மோட்டார் வாகனங்களுக்கு பெருமளவு கிராக்கி நிலவுகிறது. அதி நவீன பண்புகள் மற்றும் தொழில்நுட்பத்திலான மேற்படி மோட்டார் வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலான வாகன ஓட்ட அனுபவத்தை வழங்குவதற்கு Peugeot கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Carmart நிறுவனத்தின் உயர் மட்ட முகாமைத்துவத்தின் பங்கேற்புடன் கொழும்பு 80 Club இல் கோலாகலமாக நடைபெற்ற மேற்படி வைபவத்தில் புதிய வாகனங்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். Carmart நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு யசேந்திர அமரசிங்க இங்கு கருத்து தெரிவிக்கையில் “ இது எமக்கும் Peugeot மோட்டார் கார்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் பெருமிதமிக்கதொரு தருணமாகும். உங்கள் மனதில் நீங்கா இடம்பெறும் பல்வேறு அனுபவங்களை கொண்டு வருவதற்கு இந்த வாகனங்களால் முடியும்” என்றார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டித்தன்மைமிக்க இலங்கை வாகன சந்தையில் மேற்படி மோட்டார் வாகன வடிவங்கள் தனித்துவமானதொரு அத்தியாயத்தை பதிவு செய்யுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. Peugeot நிறுவனத்தின் 215 ஆண்டு கால பெருமைமிகு பாரம்பரியம் முன்னெடுக்கப்படுவதோடு 72 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள Carmart நிறுவனம் நாடெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ளது. வாடிக்கையாளரை மையப்படுத்திய மேலான சேவையினை வழங்கும் இந் நிறுவனம் மிகத் திறன்மிக்கதாக Peugeot வர்த்தகநாமத்தை உள்நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பெருமளவு கிராக்கியை கொண்டுள்ள இந்த வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவுகளை இப்பொழுது மேற்கொள்ள முடியும். “எமது காலத்து சிங்கம்” எனும் மாண்பை பெற்றுள்ள Peugeot நம்பிக்கை, உயர் திறன் மற்றும் தனித்துவத்தின் அடையாளமாகும்.