CBL Nutriline சோளம் மற்றும் பல்தானிய சிப்ஸ் – நகரத்தில் புதிய காலை உணவு

Share with your friend

மிகவும் சுவையுள்ள, சிறுவர்களால் அதிகம் விரும்பப்படும், சிறந்த தரம் மற்றும் சர்வதேச தரநிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உட்டச்சத்து மிக்க மாற்று உணவுப் பொருளாகத் திகழும், சத்துள்ள பல்தானிய உணவு சீரியல்களை வழங்குவதில் முன்னணியாளரான CBL Nutriline, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான காலை உணவான CBL Nutriline சோளம்  மற்றும் பல்தானிய சிப்ஸ் ஐ புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

முழுக் குடும்பத்தினதும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CBL Nutriline சோளம்  மற்றும் பல்தானிய சிப்ஸ் ஆனது நூறுவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோளம், அரிசி, கௌப்பி மற்றும் பச்சைப் பயறு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். தனித்துவமான சிப்ஸை பால் அல்லது யோக்கட், நட்ஸ் அல்லது பழங்களுடன் இணைத்து ஆகாரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும். 

இந்தப் புதிய CBL Nutriline சீரியலானது காலை உணவை எதிர்பார்ப்பான உணவாக மாற்றுவதை நோக்காகக் கொண்டதாகும். முழுக் குடும்பத்துக்கும் தேவையான ஊட்டச்சத்தை வழங்கக் கூடிய விட்டமின் ஏ. டி3, இரும்புச் சத்து, கல்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கிய விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்களுடன் இந்த சீரியல் வலுவூட்டப்பட்டுள்ளது. இலங்கையின் பெருமை மிக்க தயாரிப்பான இந்த சீரியல் அனைத்து நுகர்வோராலும் அணுகக் கூடியதாக 150 கிராம் பக்கற் 360 ரூபா என்ற விலையில் கிடைக்கிறது.

Convenience Foods (Lanka) PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலங்க.த சொய்சா குறிப்பிடுகையில், “இந்தப் புதிய சீரியலானது சத்து மற்றும் சுவை நிறைந்த காலை உணவுப் பட்டியலில் மற்றுமொரு இணைப்பாக அமையும். இலங்கை நுகர்வோரின் இரசனைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள CBL Nutriline சோளம்  மற்றும் பல்தானிய சிப்ஸ், ஊட்டச்சத்து மற்றும் சுவை என்பவற்றில் சமரசம் செய்யாது நியாயமான விலையில் அனைவராலும் விரும்பக் கூடிய காலை உணவாகும்” என்றார். 

“காலை உணவு வகையின் முன்னோடிகளில் ஒருவராக, நுகர்வோர் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சத்தான தேர்வுகளை ஊக்குவிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஒரு ஆரோக்கியமான தொடக்கத்திற்கான நுகர்வோர் விருப்பத்தை அங்கீகரித்து, புதிய நார்ச்சத்து நிறைந்த மற்றும் சுவையான CBL Nutriline சோளம்  மற்றும் பல்தானிய சிப்ஸ்களை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், தற்பொழுது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் நுகர்வோருக்கு மலிவு விலையில் பல்தானியங்களுடன் கூடிய சத்தான விருப்பத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்” என CBL Foods Cluster இன் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஜயங்க பெரேரா தெரிவித்தார்.

CBL Nutriline தயாரிப்புக்கள் செயற்கையான நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தல்கள் இன்றி உற்பத்தி செய்யப்படுகின்றன. சிறுவர்களுக்கான ஆரோக்கியமான காலை உணவு சீரியல்கள் Choco Chips, Choco Blobs, Choco Grains, Honey Bee, Lemon Crunch மற்றும் Grain berry ஆகிய ஆறு வித்தியாசமான சுவைகளில் கிடைக்கின்றன. சிறந்த நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில் CBL Nutriline ஆனது சர்வதேச தர நிலைகளுக்கு அமைய OHSAS 18001 மற்றும் OHSAS 18001 ஆகிய சான்றிதழ்களின் கீழ் உற்பத்தி செய்யப்படுகிறது. கட்டுப்பாடுகள் அல்லது விலையுயர்ந்த தேர்வு காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் கிடைக்காத நிலையில், CBL Nutriline உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானியமாக, விவசாயத் துறையை ஆதரிக்கிறது மற்றும் நுகர்வோருக்கு ஒரு சிறந்த மாற்றீட்டை வழங்குகிறது.

CBL Nutriline வர்த்தக நாமமானது CBL குழுமத்தின் உறுப்பு நிறுவனமான Convenience Foods (Lanka) PLC நிறுவனத்தின் தயாரிப்பாகும். CBL குழுமம் நுகர்வோர் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளின் பரந்த  உற்பத்திகளைக் கொண்டிருப்பதுடன், விவசாயிகளின் பெறுமதிச் சங்கிலியின் ஊக்கியாகவும் அமைகிறது.


Share with your friend