CDB SMB Friday இனால் patpat.lkஉடன் இணைந்து இலங்கையின் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டல்

Share with your friend

நாட்டின் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் செயற்பாடுகளின் அங்கமாக, patpat.lk உடன் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) இணைந்து, இலங்கை இராணுவம், விவசாயம் மற்றும் கால்நடை விளைச்சல்களைச் சேர்ந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு பிரத்தியேகமான பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சிப்பட்டறையின் போது, CDB SMB Friday இனால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் பங்குபற்றுநர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், patpat ஊடாக தமது வியாபாரங்களை மேம்படுத்திக் கொள்வது மற்றும் வெவ்வேறு கட்டமைப்புகளில் தமது பிரசன்னத்தை விரிவாக்கம் செய்வது பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

Patpat டிஜிட்டல் சந்தைப்பகுதியில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ‘Viru Liya’ இணையப் பக்கம் இந்த பயிற்சிப்பட்டறையின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக, இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு, சந்தையில் அதிகளவு விரிவாக்கத்தை ஏற்படுத்துவதுடன், கொள்வனவாளர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது.

CDB இன் சந்தைப்படுத்தல் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க இந்தத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “CDB இல், தொழில் முயற்சியாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் காரணமாக இலங்கை இராணுவம், விவசாயம் மற்றும் கால்நடை விளைச்சல்களைச் சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்களை, patpat.lk ஊடாக நாம் ஏற்படுத்தியுள்ள பாரிய சந்தைப்பகுதியின் கொள்வனவாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். Viru Liya இணையப் பக்கம் அவர்களுக்கான மையப்பகுதியாக அமைந்திருக்கும் என்பதுடன், இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், ஒன்றுதிரட்டி, விற்பனைகளை முன்னெடுக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதுடன், உலகுக்கு அறிமுகம் செய்வதாக அமைந்திருக்கும்.” என்றார்.

இந்த நிகழ்வின் போது, பல பெண் தொழில் முயற்சியாளர்களின் தயாரிப்பு விளக்கமளிப்புகளும் இடம்பெற்றன. இதன் போது, தமது முயற்சிகள் பற்றிய தெளிவுபடுத்தல்களை இவர்கள் வழங்கியிருந்தனர். Water Hyacinth தாவரங்களைப் (ஜப்பான் ஜபாரா) பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் உற்பத்தியில் சிறப்பாக செயலாற்றியிருந்த, விருது வென்ற பெண் தொழில் முயற்சியாளரான ஆர்.பி. குசுமாவதி,  பார்வையாளர்கள் மத்தியில் காணப்பட்ட பெண்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் விளக்கங்களை வழங்கியிருந்தார். 

இலங்கை விவசாயம் மற்றும் கால்நடை விளைச்சல்கள் – சேவா வனிதா பிரிவின் தலைவர் சாந்தி அபேசேகர இந்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய தினம் நீங்கள் இங்கு காணும் பெண் தொழில் முயற்சியாளர்கள் நாளாந்தம் கடுமையாக உழைத்து, தமது தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்பதுடன், சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.  இவர்கள் உண்மையான பெண் வீராங்கனைகளாக (viru liyan) அமைதிருப்பதுடன், SMB Friday திட்டம் மற்றும் patpat சந்தைப் பகுதி போன்றவற்றினால் CDB மற்றும் patpat இணைந்து வழங்கும் சிறந்த ஆதரவினூடாக, அவர்களின் முயற்சிகள் கைகூடுவது மேலும் உறுதி செய்யப்படும். எதிர்பார்ப்புகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ள CDB மற்றும் patpat ஆகியவற்றுக்கு எப்போதும் நாம் நன்றி தெரிவிப்பதுடன், எமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை சிறந்த வகையில் பயன்படுத்துவோம்.” என்றார்.

2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட CDB SMB Friday திட்டம், எதிர்ப்புகள் நிறைந்த பெண் சிறு நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு டிஜிட்டல் பிரசன்னத்தை ஏற்படுத்திக் கொடுத்து, தமது வியாபாரங்களை அதனூடாக இணைய மற்றும் சமூக வலைத்தள கட்டமைப்புகளுக்கு வெளிப்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. CDB இனால் அண்மையில் SMB Friday 2.0 அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. கொழும்பு பிராந்தியத்துக்கு அப்பாலான தொழில் முயற்சியாளர்களை அணுகுவதில் இது கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு வலுவூட்டுகின்றது. சமூக வலைத்தளங்களில் அவர்களின் வியாபாரங்களை ஊக்குவிப்பது மாத்திரமன்றி, patpat சந்தைப்பகுதியுடன் இணைந்து டிஜிட்டல் மற்றும் நேரடி சந்தைப்பகுதியை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜயசிங்க மேலும் தெரிவிக்கையில், “SMB Friday திட்டத்தை நாம் ஆரம்பத்தில் அறிமுகம் செய்திருந்த போது, எமது பங்காளர்கள் பற்றிய வீடியோக்கள் சராசரியாக ஒரு வீடியோவுக்கு 35,000 பார்வைகளை கொண்டிருந்ததுடன், எமது சமூக வலைத்தள நாளிகைகள் மற்றும் கூட்டாண்மை இணையத்தளத்தினூடாக அவர்களின் தோற்றப்பாட்டை அதிகரித்துக் கொள்ள உதவியாக அமைந்திருந்தது. சமையல் கலையில் காணப்படும் ஈடுபாட்டின் காரணமாக இரு சகோதரிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ‘Tosakanth’s Roast Paan and The Sugar Shack’, சிறுவர்களுக்கு விளையாடி மகிழக்கூடிய வகையிலமைந்த ‘Creative Play’, பொலிதின் பைகள் பாவனை குறைப்பு மற்றும் மீளப் பயன்பாட்டில் பங்களிப்பு வழங்கும் ‘Cally Reuasble Bags’ மற்றும் வேகமாக மறைந்து வரும் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து வழங்கும் ‘U’r Zest Gami Gedara’ போன்றன பெண்களின் தலைமைத்துவத்தில் இயங்கும் சில வியாபாரத் திட்டங்களாக அமைந்திருப்பதுடன், CDB SMB Friday ஊடாக அதிகளவு வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது patpat சந்தைப்பகுதியையும் உள்ளடக்கியுள்ளமையால், இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த தொழில் முயற்சியாளர்களுக்கு வானமே எல்லையாக அமைந்துள்ளது.” என்றார்.

CDB SMB Friday பற்றிய மேலதிக தகவல்களுக்கும், திட்டத்தில் இணைந்து கொள்வதற்கும், சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் https://www.cdb.lk/cdbsmbfriday/ எனும் இணையப் பக்கத்தை பார்வையிட முடியும்.


Share with your friend