அண்மையில் ChildFund Sri Lanka இந்நாட்டில் ஓர் மாற்றத்தை உருவாக்கும் பணியின் 40 ஆவது ஆண்டின் நிறைவைக் கொண்டாடியது. இம் மைல்கல்லை குறிப்பிடும் முகமாக இந் நிறுவனம் அதன் உள்நாட்டு செயன்முறைகளை வலுவூட்டும் நோக்கிலும், உள்நாட்டின் தலைமைத்துவ மற்றும் சமூகம் சார் முயற்சிகளுக்கான அதன் உறுதிப்பாட்டடை மேலும் வலுவூட்டும் நோக்கிலும் WiDE Lanka (Women and Children Development and Empowerment) இனை அறிமுகப்படுத்தியது.

ஒரு குறுகிய சுற்றுப் பயணத்திற்காக நாட்டிற்கு வந்திருந்த ChildFund International இன் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. இஸாம் கானிம் 40 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து சிறப்பித்தார். தனது சுற்றுப் பயணத்தின் போது அவர் ஊழியர்களையும், பல்வேறு பங்குதாரர்களையும் சந்தித்ததுடன், அமுனுகும்பரயில் அமைந்துள்ள விருந்தோம்பல், உணவு தொழில்நுட்பம் மற்றும் கிராபிக் வடிவமைப்பு ஆகிய துறைகளில் மாற்றுத்திறனாளி இளைஞர்களின் திறன்களை வளர்க்கும் பணியில் செயற்படுகின்ற தொழிற்பயிற்சி மையத்தையும் பார்வையிட்டதுடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் ChildFund Sri Lanka இன் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சமூக மற்றும் உணர்வு ரீதியான கற்றல் (Social and Emotional Learning) கட்டமைப்பின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.
1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ChildFund Sri Lanka ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிப்படையக் கூடிய சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் நிலையான, திட்டவட்டமான மாற்றத்தை சமூகத்திற்கு ஏற்படுத்தக் கூடிய இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் தலைவர்களாக மாறுவதற்கான திறனையும், வாய்ப்பையும் வழங்குகிறது. 12 மாவட்டங்களில் செயற்படும் ChildFund Sri Lanka 200,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு சேவை புரிந்து தரமான கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து என்பவற்றுடன் சேர்த்து துஷ்பிரயோகம் மற்றம் சுரண்டல் என்பவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
கல்வி, பொருளாதார வாய்ப்புகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன மூலம் உரிமை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை முன்னேற்றி இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை வலுவூட்டுவதற்காக WiDe Lanka அர்ப்பணிந்து செயற்படுகிறது. உரிமைகள், தேவைகள் ஆகியவற்றின் முன்னேற்றம் மற்றும் பெண்கள் மற்றும் யுவதிகளின் நிறுவனம்; பொருளாதார வலுவூட்டல்; தரமான கல்வியை பெற்றுக் கொள்வதற்கான வழி மற்றும் ஆதரவு; பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்; காலநிலை மீள்தன்மை; மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகிய பகுதிகள் அதன் திட்டத்தில் உள்ளடங்கி உள்ளன. இந்தத் திட்டங்கள் பெண்களும், குழந்தைகளும் செழிப்பாக வாழ வழியமைப்பதுடன், அவர்களின் முழு திறனையும் அடையக் கூடிய ஆதரவான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தேசத்தின், குடும்பத்தின் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை பெண்களில் முதலீடு செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் என்பதனை அறிந்த ChildFund பெண்களையும் அவர்களது திட்டத்தில் உள்ளடக்கிய விதத்தில் விரிவுபடுத்துகிறது. இம் மேம்படுத்தப்பட்ட திட்டம் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பொருளாதார அதிகாரமளித்தல், சுகாதாரம், ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் கல்வி வாய்ப்புக்களையும் வழங்குவதன் மூலம் முறையான மாற்றத்திற்கான ஓர் அலையை உருவாக்கின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் ChildFund வலுவான, மீள்தன்மை மிக்க சமூகங்களை உருவாக்கி, அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.
நீண்ட கால், முறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் முழு சமூகங்களுக்கும் பயனளிக்கும் விதத்திலாக அதன் திட்டங்கள் நடைமுறைபடுத்துவதற்கு ChildFund உறுதிபூண்டுள்ளது. புதுமையான மற்றும் பயனுள்ள திட்டங்களை வடிவமைத்து, செயற்படுத்துவதற்கு உள்ளூர் சமூகங்கள், அரச அமைப்புகள், பங்குதாரர்களுடன் நெருங்கிய விதத்தில் இணைந்து செயலாற்றுகிறது.
பங்காளர்கள் மற்றும் அனைவரையும் உள்வாங்கி செயற்படுவது ChildFund இன் பணியின் ஓர் முக்கிய கருப்பொருளாகும். இதனை நிரூபிக்கும் விதமாக மாற்றுத் திறனாளிகள் உட்பட குழந்தைகள் மற்றும் பெண்கள் அனைத்து விதமான வாய்ப்புக்களையும் மற்றும் வளங்களையும் அணுகுவதை உறுதி செய்ய பாடுபடுகிறது. ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் முன்னேறுவதை தடுக்கும் தடைகளை நிவர்த்தி செய்யும் விதத்திலும், சமமான பங்கேற்பை ஊக்குவிக்கும் விதத்திலும் ChildFund இன் திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கிய விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதன் மூலம் ChildFund தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகங்களின் சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சமமான மற்றும் நியாயமான சமுதாயத்திற்கு வழிவகுக்கிறது. அதன் திட்டங்களை நோக்குமிடத்து, ChildFund அதன் விரிவான திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் 1 மில்லியன் முகங்களில் புன்னகையைக் கொண்டுவரும் இலக்கை நிர்ணயித்துள்ளது. 1938 இல் நிறுவப்பட்ட ChildFund International உலகம் முழுவதும் உள்ள குழுந்தைகள் மற்றும் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.