Christell குரூப் Christell சர்வதேச நிறுவகத்தை நிறுவியுள்ளது – இலங்கையில் முதன் முறையாக anti-aging age element®அறிமுகம் செய்துள்ளது

Share with your friend

இலங்கையின் நம்பிக்கையை வென்ற அழகியல்சிகிச்சை நிலையமான Christell Skin Clinic, Christell குரூப்பின் புதிய Christell சர்வதேச நிறுவகத்தை நிறுவியுள்ளது. அத்துடன், இலங்கையில் முதன் முறையாக புரட்சிகரமான mesoestetic age element® சிகிச்சையையும் அறிமுகம் செய்துள்ளது. 

ரமணி அரசகுலரட்ன சர்வதேச அகடமியின் 30 வருட கால வரலாற்றுப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், சிறந்த அழகியல் மற்றும் கலைப் பயிற்சிகளை இலங்கையின் அழகியல் கலைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் Christell சர்வதேச நிறுவகம் நிறுவப்பட்டுள்ளதுடன், இலங்கையின் அழகியல் கட்டமைப்பை முன்நோக்கி கொண்டு செல்வதில் முக்கிய பங்கையும் வகிக்கின்றது. 

ஹில்டன் கொழும்பு ரெசிடென்சிஸில் மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற பிரத்தியேக நிகழ்வில், அகடமியின் முதல் தொகுதி மாணவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, ஸ்பெய்ன் நாட்டிலிருந்து விஜயம் செய்திருந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து, புதிய anti-aging facial செய்முறைகள் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அமர்த்தப்பட்டிருந்தனர். age element® anti-aging தீர்வு, சருமம் முதிர்வடையும் அறிகுறிகளை இல்லாமல் செய்யும் வகையில் காப்புரிமை பெற்ற சிகிச்சை முறையாக அமைந்திருப்பதுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அழகை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நவீன அழகியல் மருத்துவ தொழில்நுட்பத்தின் பிரகாரம், age element® நிபுணத்துவ தெரிவுகள் இலங்கையின் சகல A-தர சலோன்களிலும் அறிமுகம் செய்யப்படும்.

Christell சர்வதேச நிறுவகத்தில் அனுபவம் வாய்ந்த துறைசார் நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற வெளிநாட்டு நிறுவகங்களின் தொழில்நுட்பத்திறன்கள் உள்வாங்கப்பட்டு, வேகமாக வளர்ந்து வரும் போட்டிகரமான தொழிற்துறையுடன் தொடர்ச்சியாக ஈடுபாட்டையும் கொண்டிருக்கும். 

ஏனைய அழகியல் பயிற்சி நிலையங்களுடன், இந்த அகடமியை வேறுபடுத்தும் காரணிகளில், இலங்கையின் மருத்துவ ஆரோக்கியம் மற்றும் அழகியல் சருமவியலில் முன்னோடிகளிடமிருந்து தொழிற்துறைசார் பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக, அழகியல் நிபுணர்களாக திகழவுள்ளவர்களுக்கு தொழில்முயற்சியாண்மை மற்றும் வியாபார அறிவு – பிரயோகத் திறன்கள் போன்ற துறையில் முன்னேற்றத்துக்கு அவசியமான விடயங்கள் பயிற்றுவிக்கின்றமை போன்றன உள்ளடங்கியுள்ளன.

Christell Skin Clinic ஸ்தாபகர் ரமணி அரசகுலரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “உயர் தரம் வாய்ந்த மற்றம் மருத்துவ ரீதியில் அனுமதியளிக்கப்பட்ட சருமப் பராமரிப்பு தயாரிப்புகளின் கிடைக்காமைக்கு மேலதிகமாக, இலங்கையில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சருமப் பராமரிப்பு சிகிச்சைகள் கிடைக்காமையையும் நாம் அவதானித்திருந்தோம். எமது பரந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் எம்மிடம் காணப்படும் சருமப் பராமரிப்பு செயன்முறையின் ஆதிக்கம் போன்றவற்றுடன், இளம் நிபுணர்களை எம்மைவிட சிறந்த திறன்களை கொண்டிருப்பவர்களாக தயார்ப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.


Share with your friend