“Christmas Giveaway” வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்குகிறது HNB FINANCE

Share with your friend

கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வீட்டில் இருந்தவாரே கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிய இலங்கையர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில், HNB FINANCE PLC கடந்த டிசம்பரில் “Christmas Giveaway Alert”ஐ தனது இணையதளம் மற்றும் முகநூலில் அறிமுகப்படுத்தியது. இந்த மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள HNB FINANCE கிளைகள் மூலம் தற்போது பரிசுகள் வழங்கப்படுகின்றன.

டிஜிட்டல் தளங்கள் மூலம் நிதிச் சேவைகளை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ள HNB FINANCE, கடந்த கிறிஸ்மஸில் ஆரம்பிக்கப்பட்ட “Christmas Giveaway Alert” நிகழ்ச்சியின் மூலம் வழங்கப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டியாளர்கள் இதன்போது அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

HNB Finance தொடர்பில்2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 70 கிளைகளை நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE PLCஇனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சேவைகளுக்குள் சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME), லீசிங் சேவைகள், தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகின்றது.


Share with your friend