Cinnamon Hotels & Resorts தனது பிந்திய நிலைபேறாண்மை செயற்திட்டமான “Cinnamon மழைக்காடுகள் மறுசீரமைப்பு செயற்திட்டம்” என்பதை Ruk Rakaganno (இலங்கை மரங்கள் பாதுகாப்பு சங்கம்), இலங்கை வனாந்தர திணைக்களம் மற்றும் ஜோன் கீல்ஸ் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பெருமையுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக மூன்று வருட காலப்பகுதியில் 50 ஏக்கர் சேதமடைந்த மழைக்காடுகளை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். இயற்கை வனாந்தர மீள் வளர்ச்சி என்பது சர்வதேச ரீதியில் சாத்தியக்கூறான காலநிலை மாற்ற தீர்வாக அமைந்திருப்பதுடன், இலங்கையின் உயிரியல் பரம்பல் தொடர்பில் புதிய யுகத்தில் ஆரம்பித்து வைப்பதாக அமைந்திருக்கும்.
Ruk Rakaganno அமைப்பின் தலைவர் துஷி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் “Ruk Raks” (மரப் பாதுகாவலர்கள்) இந்த கைகோர்ப்பின் பிரதான இலக்காக சிங்கராஜ வனாந்தரப் பகுதியில் ஈர வலயத்தில் சேதமடைந்த நிலையில் காணப்படும் 50 ஏக்கர் மழைக்காடுகள் பகுதியை மறுசீரமைப்பதாக அமைந்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்துக்கு ஜோன் கீல்ஸ் மையம் நிதிப் பங்களிப்பை வழங்குகின்றமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ளமைக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இந்த 50 ஏக்கர் பகுதி காணப்படுகின்றது. நாட்டில் எஞ்சியிருக்கும் சில இயற்கை வனாந்தரங்களில் ஒன்றான சிங்கராஜா வனாந்தரத்தில் UNESCO உலக மரபுரிமை பாரம்பரிய பகுதியாக கருதப்படும் உயிரியல் பரம்பல் காணப்படும் பகுதியிலிருந்து சுமார் 3.5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்து. 50 ஏக்கர் பகுதியை மறுசீரமைப்பது மற்றும் மீளமைப்பது என்பதனூடாக பல்வேறு நீர்வீழ்ச்சிகள் மற்றும் கலாசார மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ள இப்பிராந்தியத்தின் உயிரியல் ரீதியான முக்கியத்துவத்தை மேலும் வளமூட்டுவதாக அமைந்திருக்கும். “Cinnamon மழைக்காடுகள் மறுசீரமைப்பு செயற்திட்டம்” இனால் உயிரியல் பரம்பலை பாதுகாப்பது தொடர்பில் பணியாற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பணியாற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பொருத்தமான முன்மாதிரியான செயற்பாடாக அமைந்திருக்கும்.
இந்தத் திட்டம் தொடர்பில் Nature Trails இன் தலைமை அதிகாரி சித்ரால் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “Cinnamon விருந்தினர்களை, Cinnamon Nature Trails க்கு வரவேற்பதுடன், செயற்திட்டப் பகுதிக்கு விஜயம் செய்து, உரிமையாண்மையை அவர்களால் உணரச் செய்யும் அனுபவத்தை வழங்குவது இந்தத் திட்டத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தினூடாக, இந்தப் பகுதியில் காணப்படும் அரிய வகை தாவர மற்றும் விலங்கினங்களை தொடர்ந்தும் உயிர் வாழச் செய்வதற்கு அவசியமான வனாந்தரப் பகுதியை மீள நிறுவுவதாக அமைந்திருப்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் இது போன்ற மறு வனாந்தரச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிகோலுவதாக அமைந்திருப்பதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.” என்றார்.
Cinnamon Hotels & Resorts ஐச் சேர்ந்த ஊழியர்களை தன்னார்வ அடிப்படையில் இந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்கான ஊக்குவிப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஜோன் கீல்ஸ் மையத்தின் சார்பாக சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “சிங்கராஜ வனாந்தரப் பகுதியைச் சூழவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சூழல்கட்டமைப்புகளை பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். நிதியளிப்பு எனும் எமது அர்ப்பணிப்புக்கு மேலதிகமாக, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஊழியர்களை தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுத்துவதற்கு நாம் எதிர்பார்ப்பதுடன், சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்த எதிர்பார்க்கின்றோம். அவர்களினூடாக சேதமடைந்த தாவரங்களை அகற்றுவது மற்றும் தாவரச் செய்கையை மேற்கொள்வதற்கு மண்ணைத் தயார்ப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையினூடாக செயற்திட்டத்தின் உரிமையாண்மை தொடர்பான உணர்வு தூண்டப்படுவதுடன், மறுசீரமைப்பு தொடர்பில் ஊழியர்களுக்கு தன்னிறைவை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.
செயற்திட்டத்தின் ஈடுபாட்டு திட்டங்களின் அங்கமாக, Cinnamon properties இன் விருந்தினர்களை பயிற்றுவிக்கப்பட்ட இயற்கை செயற்பாட்டாளர்களால் இந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் நோக்கம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும். மரமொன்றை நட விரும்பும் விருந்தினர்களுக்கு கையிருப்பிலுள்ள தாவரங்கள் மற்றும் அவற்றின் விலைகள் பற்றி அறிவிக்கப்படும். அதற்கான செலவை குறித்தி விருந்தினர் ஏற்க வேண்டும். சிறிய குன்று ஒன்றில் ஏறியதும், அவர்களுக்கு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும் பிரதேசத்தை 360 பாகையில் பார்வையிடக்கூடியதாக இருக்கும். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பகுதியில் விருந்தினர்கள் கொள்வனவு செய்த தாவரக் கன்றை பயிரிடுவதற்கும், நீர் ஊற்றுவதற்கும் மற்றும் தாவரக் கன்றில் முத்திரை பொறிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதனூடாக காலப்போக்கில் குறித்த தாவரத்தின் வளர்ச்சியை பார்வையிடக்கூடியதாக இருக்கும். காலப்போக்கில் இந்தத் திட்டத்துக்கு உலகளாவிய ரீதியில் காணப்படும் சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களை கவர்ந்திழுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
செயற் திட்டத்தின் தலைமை அதிகாரியும், உயிரியல் நிபுணர்கள் அணியைச் சேர்ந்தவருமான விமுக்தி வீரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “பிரயாணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாப் பயணங்கள் மீண்டும் வழமைக்கு திரும்பும் நிலையில், இலங்கைக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. ஆர்வமுள்ள விருந்தினர்களை இந்தத் திட்டத்தை பார்வையிடுவதற்கு அழைத்து வருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு தகைமை வாய்ந்த, ஆர்வமுள்ள உயிரியல் நிபுணர்களுக்கு தலைமைத்துவமளிப்பதையிட்டு நான் பெருமை கொள்கின்றேன்.” என்றார்.
Cinnamon மழைக்காடுகள் செயற்திட்டம் என்பது Ruk Rakaganno (இலங்கை மரங்கள் பாதுகாப்பு சங்கம்), இலங்கை வனாந்தர திணைக்களம் மற்றும் Cinnamon Hotels & Resorts ஆகியன இணைந்து, Ruk Rakaganno அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி. காமனி மீதெனிய விதாரனவின் நினைவாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்துக்கு ஜோன் கீல்ஸ் மையம் அனுசரணை வழங்குவதுடன், அதனூடாக 2024 மார்ச் மாதமளவில் இலங்கையின் ஈர வலயத்தைச் சேர்ந்த 50 ஏக்கர் சேதமடைந்த காணியை மறுசீரமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு உயிரியல் பரம்பலை பாதுகாத்து பேணி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.