பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட்டின் சுவிஸ் ஹோட்டல் மனேஜ்மன்ட் அகடமி (SHMA) அண்மையில், இலங்கையின் மனித வளங்கள் நிபுணர்களை உருவாக்குவதில் பங்காற்றும் முன்னணி நிபுணத்துவ அமைப்பான இலங்கை பிரத்தியேக முகாமைத்துவ பட்டயக் கல்வியகத்துடன் (CIPM) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. அதன் பிரகாரம், நாட்டின் விருந்தோம்பல் துறையில் duo-blended நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்து வழங்க முன்வந்துள்ளது.
அதிகளவு விசேடத்துவம் வாய்ந்த மனித வளங்கள் கல்வியை முன்னெடுப்பதற்கு CIPM ஸ்ரீ லங்கா ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது அமைந்திருப்பதுடன், துறைசார் அனுபவத்தையும், ஆழமான அறிவையும் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. விருந்தோம்பல் துறையில் நாட்டில் அனுபவம் வாய்ந்த திறன் படைத்தவர்களுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்தப் பங்காண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளமையானது, உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக அமைந்திருப்பதுடன், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில் அதிகரித்த அணுகல், விசேடத்துவம், அறிவை மேம்படுத்தல் போன்றனவும் எய்தப்படும்.
தொழில் பழகும் பருவத்தை வழங்கும் இலங்கையின் முதலாவது விருந்தோம்பல் முகாமைத்துவ கல்வியகமாக SHMA திகழ்கின்றது. பயில்வதுடன், வருமானமீட்டல் வழிமுறையைக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தில் வாரமொன்றில் இரு நாள் பயிலலுக்கு வழங்கப்படுவதுடன், எஞ்சியிருக்கும் நாட்களில் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டல்களில் தொழில் பயிற்சிகளைப் பெறக்கூடியதாக இருக்கும். இதனூடாக மாணவர்களுக்கு தமது கற்கைகளைத் தொடர்கையில், தொழில்சார் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், நிறுவனங்களுக்கு தமது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், மீளமைத்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது.
மாணவர்களுக்கு இந்த duo-சான்றளிக்கப்பட்ட திட்டத்தினூடாக CIPM ஸ்ரீ லங்காவிடமிருந்து சான்றிதழைப் பெற்றுக் கொள்வதுடன், EHL ஹோட்டல் நிபுணத்துவ டிப்ளோமாவின் VET தகைமையையும் பெற முடியும். இந்தக் கற்கை இவ்வாண்டு ஜுலை மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. உலகின் புகழ்பெற்ற விருந்தோம்பல் முகாமைத்துவ பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள Ecole hôtelière de Lausanne ஆக ஸ்தாபிக்கப்பட்டுள்ள EHL விருந்தோம்பல் பிஸ்னஸ் ஸ்கூலினால் VET தகைமையை வழங்குவதற்கான அங்கீகாரம் பெற்ற அமைப்பாக SHMA திகழ்கின்றது.
தத்தம் துறைகளில் முன்னோடிகளாகத் திகழும் SHMA மற்றும் CIPM ஆகியவற்றினூடாக மாணவர்களுக்கு மற்றும் நிபுணர்களுக்கு தரமான மற்றும் பிரத்தியேகமான பயிலல் அனுபவம் வழங்கப்படுவதான உறுதியளிப்பு வழங்கப்படுகின்றது. SHMA மற்றும் உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் கல்வியை வழங்குவதற்கான கீர்த்தி நாமம் என்பதும் குறிப்பிடத்தக்களவு வரவேற்பைப் பெற்றுள்ளது. CIPM ஐச் சேர்ந்த கற்பித்தல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போர், இந்த கல்வியகத்தின் அங்கத்தவர்களாக அமைந்திருப்பதுடன், விருந்தோம்பல் துறையில் பல வருட கால அனுபவத்தையும் கொண்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பவர் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொல்ஃவ் பிளாசர், நிதி மற்றும் ஒழுக்கப் பிரிவின் பணிப்பாளர் பவித்ரா சமரசிங்க, SHMA அகடமியின் பீடாதிபதி டேனியலா முனசிங்க மற்றும் முகாமையாளர் சுரீகா பெர்னான்டோ ஆகியோர் பங்கேற்றிருந்தனர். CIPM ஸ்ரீ லங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் கென் விஜயகுமார், உப தலைவர் பிரியந்த ரணசிங்க, பொருளாளர் சமன் ஜயவிக்ரம, பிரதம நிறைவேற்று அதிகாரி யு.ஏ.சி. ஒபேசேகர, நிபுணத்துவ மற்றும் கல்வி விவகார பணிப்பாளர் ஜி. வீரதுங்க, செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் ஹிமாலி தசநாயக்க மற்றும் இதர சம்மேளன அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டில் மனித வளங்கள் முகாமைத்துவ பிரிவின் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபுணத்துவ அமைப்பும், மனித வளங்கள் முகாமைத்துவத்தில் முன்னணி வகிக்கும் CIPM ஸ்ரீ லங்கா, ஆசிய பசுபிக் மனித வளங்கள் முகாமைத்துவ ஆசிய பசுபிக் சம்மேளனம் மற்றும் மக்கள் முகாமைத்துவ சங்கங்களின் உலக சம்மேளனம் ஆகியவற்றின் அங்கத்துவம் பெற்ற அமைப்பாகத் திகழ்கின்றது. இலங்கையில் மனித வளங்கள் முகாமைத்துவ நிபுணத்துவத்தை மேம்படுத்துவது, கட்டியெழுப்புவது மற்றும் ஊக்குவிப்பது போன்றவற்றில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. வருடாந்தம் கற்கை நெறிகளில் மற்றும் பல்வேறு இதர செயற்பாடுகளில் 8000 மாணவர்களை உள்வாங்குகின்றது. CIPM இனால் வழங்கப்படும் முன்னணி கற்கையாக Chartered Qualification in HRM (CQHRM) அமைந்திருப்பதுடன், இதற்கு CIPD UK இனால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.விருந்தோம்பல் துறையில் அதிகளவு நாடப்படும் திறன் படைத்த பகுதியாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக உயர் தரமான பயிலல் மற்றும் நியமங்களை கட்டியெழுப்புவதற்கு SHMA எதிர்பார்க்கின்றது. Swiss Agency for Development and Cooperation (SDC) உடன் இணைந்து முன்னெடுக்கும் அதன் Skills for Sustainable Growth (SSG) திட்டமானது, இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கும். VTA ஸ்ரீ லங்கா மற்றும் நெஸ்லே லங்கா ஆகியவற்றுடன் அண்மையில் ஏற்படுத்தியிருந்த கைகோர்ப்புகளினூடாக, துறையில் பொது-தனியார் பங்காண்மைகளின் தேவை மற்றும் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவசியத்துக்கான முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருந்தது.