City of Dreams Sri Lanka, NÜWA இல் “The Grand Pâtisserie Affair”ஐ அறிமுகப்படுத்துகிறது, இது ஒரு இனிமையானதிருப்பத்துடன் ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டுவருகிறது

Share with your friend

கொழும்பு நகரத்தின் அழகும் வசதியும் நிறைந்த City of Dreams Sri Lanka, அதன் புதிய விருந்தோம்பல் அனுபவமான “ The Grand Pâtisserie Affair” அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. NÜWAவின் The Crystal Lounge The Crystal Loungeஇல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான அனுபவம், சுற்றுலாத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நவீனத்துவம் கலந்த விருந்தோம்பலின் ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

கடந்த நவம்பர் 8ம் திகதி, சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு விருந்தோம்பல் அனுபவம், ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்த City of Dreams Sri Lanka நடவடிக்கைக எடுத்துள்ளது. கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட பேஸ்ட்ரிகள், ஸ்கோன்கள் மற்றும் பிற சிறப்பு படைப்புகளைக் கொண்ட ஒரு புஃபே விருந்தோம்பலை வாடிக்கையாளர்கள் சுவைக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது.

மேலும், இந்த தனித்துவமான தேநீர் விருந்தோம்பலில் பங்கேற்கும் அனைவருக்கும், கண்கவர் காட்சிகளை வழங்கும் The Crystal Loungeஇன் அழகையும் அனுபவிக்க முடியும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சிமயமான ஒரு மாலை நேரத்தைக் கழிக்கவும், NÜWAவின் உண்மையான வாழ்க்கை முறை சேவைகளை அனுபவித்து, ஐரோப்பிய வாழ்க்கை முறையின் ஒரு உண்மையான அனுபவத்தை வாழ்க்கையில் சேர்க்கவும் இது வாய்ப்பளிக்கிறது.

சுற்றுலாத்துறைக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் சேவைகளை வழங்கும் City of Dreams Sri Lanka, இந்த தனித்துவமான தேநீர் விருந்தோம்பலுக்கான நபர் ஒருவருக்கான கட்டணம் 5,000 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த மதிப்பாகும், ஏனெனில் குறைந்த தொகை ஒன்றின் பேரில் NÜWAவின் சிறந்த வாழ்க்கை முறை சேவைகளை அனுபவிக்கவும், அதன் தனிப்பட்ட சுவையான உணவுகள், பேஸ்ட்ரிகள் மற்றும் பலவற்றைக் கொண்ட ஒரு சுவையான தேநீர் அனுபவத்தை அனுபவிக்கவும் இது அவர்களை அனுமதிக்கிறது.

இந்த புதிய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த City of Dreams Sri Lankaவின் ஒரு பேச்சாளர், “கலைநயம் மற்றும் புத்தாக்க பாணியின் ஒருங்கிணைப்பான The Grand Pâtisserie Affair, இலங்கையின் தேநீர் கலாச்சாரத்தை முன்னேற்றும் வகையில், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுவையான அனுபவத்தை வழங்கும்” என்று குறிப்பிட்டார்.

City of Dreams Sri Lanka வின் 25வது மாடியில் அமைந்துள்ள Crystal Loungeல் அனுபவிக்கக்கூடிய இந்த தனித்துவமான அனுபவத்திற்கு, வெளியே தெரியும் அழகிய காட்சிகள் கூடுதல் மதிப்பை சேர்க்கின்றன. திறமையான சமையல்காரர்களின் கைத்திறனால் தயாரிக்கப்பட்ட பல்வேறு பேஸ்ட்ரிகள் மற்றும் உணவுகள் உங்கள் நாவை ரசிக்கச் செய்யும், கண்களுக்கு விருந்தாக அமையும் இந்தக் காட்சி உங்கள் மனதில் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.இப்போது, உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக “ The Grand Pâtisserie Affair” போன்ற ஒரு தனித்துவமான தேநீர் விருந்தை ஏற்பாடு செய்யும் வாய்ப்பு உங்களிடம் உள்ளது. நீங்கள் விரும்பும் நேரத்தில், உங்களுக்காக இந்த தேநீர் விருந்தைத் தயாராக வைத்திருக்க City of Dreams Sri Lanka தயாராக உள்ளது. மேலதிக தகவலுக்கு +94 76 136 5759 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். அல்லது இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் @cityofdreams_sl இல் எங்களைத் தொடரவும்.


Share with your friend