SLT-MOBITEL மற்றும் PEO SPORTS ஆகியன அண்மையில் நடைபெற்ற பெருமைக்குரிய Clifford Cup & Youth Boxing Tournament 2024 இன் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு பங்காளராக இணைந்திருந்தன. இந்நிகழ்வு அண்மையில் கண்டி, சஹஸ் உயனவில் நடைபெற்றது. இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்துடன் (BASL) இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், நாட்டின் இளம் திறமைசாலிகளை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த வீரர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த களத்தை இந்த போட்டித் தொடர் வழங்கியிருந்ததுடன், விளையாட்டு தொடர்பில் தமது ஈடுபாட்டை ஊக்குவிக்கவும், தேசிய மட்டத்தில் கௌரவத்தை பெற்றுக் கொள்ளவும் ஏதுவாக அமைந்திருந்தது.

The Clifford Cup & Youth Boxing Tournament என்பது, இலங்கையின் குத்துச் சண்டை சமூகத்தின் அதிசிறந்த திறமையை வெளிப்படுத்துவதாக மாத்திரம் அமைந்திராமல், இளைஞர்களுக்கு வலுவூட்டியிருந்ததுடன், மெய்வல்லுநர் விருத்தியையும் ஊக்குவிக்கும் SLT-MOBITEL’இன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தது. பெருமளவு எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த நிகழ்வில், 100 க்கும் அதிகமான பாடசாலைகள், 20 விளையாட்டு கழகங்கள் மற்றும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் போன்றவற்றின் 500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். இலங்கையின் வளர்ந்து வரும் குத்துச் சண்டை சமூகத்துக்கான எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்திருந்ததுடன், தேசிய குத்துச் சண்டை சிறப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
பிரத்தியேக ஒளிபரப்பு பங்காளர் எனும் வகையில் நாடு முழுவதையும் சேர்ந்த மற்றும் சர்வதேச ரசிகர்களை நிகழ்வு சென்றடைவதை PEO SPORTS உறுதி செய்திருந்தது. புத்தாக்கமான டிஜிட்டல் ஒளிபரப்பின் முன்னோடி எனும் தனது கீர்த்தி நாமத்தை உறுதி செய்யும் வகையில் பரந்த, உயர் தரம் வாய்ந்த வலையமைப்பு போன்றவற்றினூடாக இதனை மேற்கொண்டிருந்தது. இலங்கையில் முதன் முறையாக, PEO SPORTS இனால் கண்டுகளிக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் true HD தர நேரலை காட்சிகள் PEO SPORTS 1 இல் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும் குத்துச் சண்டை ரசிகர்களுக்கு நேரலை போட்டிகளை இலவசமாக PEO MOBILE App இலும் இலங்கையின் எப்பகுதியிலிருந்தும் பார்வையிடும் வசதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், போட்டித் தொடரின் விறுவிறுப்பான போட்டிகள் PEO SPORTS Facebook page மற்றும் YouTube channel போன்றவற்றிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தன. அதனூடாக உலகளாவிய ரசிகர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் கண்டுகளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக, இந்த நிகழ்வு சகல வயதுகளையும் சேர்ந்த பார்வையாளர்களுக்கு மனம் மறவாத அனுபவத்தை வழங்கியிருந்தது. பார்வையாளர்கள் போட்டிகளின் விறுவிறுப்பு மற்றும் குதூகலத்தில் முழுமையாக ஆழ்ந்திருந்தனர். பாடசாலை மாணவர்கள், குடும்பங்கள், நிபுணத்துவ குத்துச் சண்டை ஆர்வலர்கள், விளையாட்டு கழகங்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சர்வதேச குத்துச் சண்டை சமூகம் போன்ற சகல தரப்பையும் இந்தப் போட்டி ஒன்றிணைத்திருந்தது. அதனூடாக, விளையாட்டு மற்றும் மெய்வல்லுநர் ஆகியவற்றின் உள்ளடக்கமான கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
SLT-MOBITEL மற்றும் SLT PEOTV ஆகியவற்றின் ஒப்பற்ற அர்ப்பணிப்பினூடாக இளைஞர் விருத்தி மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு போன்றன போட்டித் தொடரின் பிரதான கருப்பொருளாக அமைந்திருந்ததனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இளம் வீரர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த உலகத் தரம் வாய்ந்த வாய்ப்பை வழங்கியிருந்ததனூடாக, SLT-MOBITEL மற்றும் SLT PEOTV ஆகியன அடுத்த தலைமுறை சம்பியன்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தன.
இந்த பெருமைக்குரிய நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றியிருந்த Boxing Association of Sri Lanka (BASL) க்கு விசேட பாராட்டுகள். அதன் அர்ப்பணிப்பினூடாக உலகத் தரம் வாய்ந்த இந்த போட்டித் தொடர், நாட்டின் சிறந்த திறமைசாலிகளை வெளிக் கொண்டுவர ஏதுவாக அமைந்திருந்ததுடன், இளம் வீரர்களுக்கு இலங்கையின் குத்துச் சண்டையை மேம்படுத்த பங்களிப்பு வழங்க வழிகோலியிருந்தது. விளையாட்டை விருத்தி செய்வதில் BASL இன் சிறந்த முயற்சிகளை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியிருந்ததுடன், தேசிய மட்டத்தில் வீரர்களுக்கு சிறப்பாக செயலாற்ற வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. எதிர்காலத்தில், BASL இனால் சர்வதேச குத்துச் சண்டை போட்டிகள் ஏற்பாடு செய்யவும், அதனூடாக இளம் திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், குத்துச் சண்டை தொடர்பான நிலைப்பாட்டை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் விளையாட்டுத் துறையில் The Clifford Cup & Youth Boxing Tournament 2024 என்பது முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கும். SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இனால் சிறந்த ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்ததுடன், விளையாட்டின் வலிமை மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது. இலங்கையின் குத்துச் சண்டை சமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்கான சிறந்த களமாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.