CMO ஆசிய வணிக விருதுகள் வழங்கலில் ரியல் எஸ்டேட் தலைமைத்துவ விருதுகள் வழங்கும் நிகழ்வில் Prime Lands பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கௌரவம்

Share with your friend

Prime Lands (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரன்தெனிய, அண்மையில் நடைபெற்ற பெருமைக்குரிய ஆண்டின் சிறந்த வியாபார தலைவர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ரியல் எஸ்டேட் பிரிவில் “ஆண்டின் சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரி” எனும் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வு இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் சிறந்த தலைமைத்துவம் மற்றும் உயர் பங்களிப்பு போன்றவற்றை வழங்கியிருந்தமைக்காக CMO ஆசியாவினால் வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மும்பை தாஜ் லான்ட்ஸ் என்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

துறையில் 25 வருடங்களுக்கு அதிகமான அனுபவத்தைக் கொண்ட ரந்தெனிய, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை புத்தாக்கமான செயற்பாடுகள் மற்றும் மூலோபாய தலைமைத்துவம் போன்றவற்றினூடாக மாற்றியமைப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார். Prime Lands இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Prime Group இல் Bhoomi Realty Holdings, Regent Caterers மற்றும் Regent Country Club போன்ற பல்வேறு நிறுவனங்களின் நிறைவேற்று பணிப்பாளர் எனும் வகையில், தொடர்ச்சியாக தூர நோக்குடைய தலைமைத்துவம் மற்றும் வியாபார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியிருந்தார்.

Prime Group இன் தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே மற்றும் இணை தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய கௌரவிப்பினூடாக எமது பிரதம நிறைவேற்று அதிகாரியின் சிறந்த தலைமைத்துவம் கொண்டாடப்படுவதுடன், ரியல் எஸ்டேட் துறையில் சிறப்பு மற்றும் புத்தாக்கத்துக்கான Prime Group இன் திரண்ட அர்ப்பணிப்பு போன்றவற்றுக்கான சான்றாக அமைந்துள்ளது. அவரின் வழிகாட்டலில், நாம் தொடர்ச்சியாக இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தியிருந்ததுடன், வாடிக்கையாளர் தன்னிறைவில் கவனம் செலுத்தி, துறையின் முன்னோடி எனும் Prime இன் நிலையை உறுதி செய்துள்ளோம்.” என்றார்.

திரு. ருமிந்த ரந்தெனியவின் தலைமையின் கீழ் Prime Landsஇன் முக்கிய சாதனைகளில் ஒன்று, வீட்டின் உரிமையாளராகும் கனவை நனவாக்கிக் கொள்ள முடியாதிருந்த பல இலங்கையர்களுக்கு வீட்டு உரிமையாளராவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் புரட்சிகரமான 1% இலகு கட்டண முறையை அறிமுகப்படுத்தியதாகும். மேலும், நாட்டின் முதல் ரியல் எஸ்டேட் அழைப்பு மையத்தை நிறுவியதுடன் property ஹொட்லைன் வசதியை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதிலும் இவரின் வழிகாட்டல், தொழிற்துறையில் வாடிக்கையாளர் சேவைக்கான புதிய நியமங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ், சந்தை முன்னோடி எனும் நிலையை Prime Group பேணியிருந்ததுடன், பரந்தளவு சந்தைப் பிரிவுகளுக்கு சேவையாற்றுவதற்கான புத்தாக்கங்களையும் விரிவாக்கங்களையும் மேற்கொண்ட வண்ணமுள்ளது.

ஆண்டின் வியாபார முன்னோடி விருது CMO ஆசியாவினால் முன்னெடுக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளின் சிறந்த வியாபார தலைமைத்துவம் மற்றும் கூட்டாண்மை சிறப்பு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்பாட்டு அமைப்பு எனும் வகையில் CMO Asia, தொழிற்துறையின் முன்னோடிகள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்து, வியாபார தலைமைத்துவத்தில் சிறந்த சாதனைகளை பதிவு செய்திருந்தமைக்கான கௌரவிப்பை வழங்குகின்றது. சிறந்த தலைமைத்துவ பண்புகள், புத்தாக்கமான வியாபார மூலோபாயங்கள் மற்றும் தமது தொழிற்துறைகளுக்கு மேற்கொள்ளும் சிறந்த பங்களிப்புகள் போன்றவற்றுக்காக கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


Share with your friend