CNCI Achiever விருதுகள் 2023 இல் தொழிற்துறை சிறப்புக்காக தொடர்ச்சியாக 3 ஆவது வருடமாகவும் உயர் விருதை Christell Luxury Wellness சுவீகரித்துள்ளது

Share with your friend

தொழிற்துறை சிறப்புக்கான பெருமைக்குரிய CNCI Achiever விருதுகள் 2023 இல் Christell Luxury Wellness உயர் விருதை சுவீகரித்துள்ளது. ஒக்டோபர் 18ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்தவிருதுகள் வழங்கும் நிகழ்வில், நடுத்தரளவு சேவைகள் பிரிவில் தேசிய கிறிஸ்டல் விருதை இலங்கையின் நம்பிக்கையை வென்ற அழகுக்கலை நிலையம் சுவீகரித்திருந்தது. தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக இந்த உயர் விருதை தொழிற்துறையில் பெற்றுக் கொண்ட பெருமையையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

தொழிற்துறை சிறப்புக்கான CNCI Achiever விருதுகள் இலங்கை தேசிய தொழிற்துறை சம்மேளனத்தினால் (CNCI) தொழிற்துறை அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் தொழிற்துறையாளர்களின் சாதனைகளை கௌரவிக்கும் நோக்குடன் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உற்பத்தித்திறன், கூட்டாண்மை திட்டமிடல், ஆய்வு மற்றும் விருத்தி, ஊழியர் அனுகூலங்கள், ஊழியர் உறவுகள் போன்ற தர நியமங்களின் பிரகாரம் போட்டியிட்டிருந்த நிறுவனங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டிருந்தன. சமூக மற்றும் சூழல் கடப்பாடுகளை கவனத்தில் கொண்டு இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Christell Luxury Wellness தலைமை அதிகாரி பேராசிரியர் ரமணி அரசகுலரட்ன, பணிப்பாளர் இஹன் ஜயவர்தன மற்றும் மருத்துவ பணிப்பாளர் வைத்தியர். ஷானிகா அரசகுலரட்ன ஆகியோர் இந்நிகழ்வில் பிரசன்னமாக தமக்குரிய தேசிய கிறிஸ்டல் விருதை, கெளரவ. (கலாநிதி) ரமேஷ் பத்திரனவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்த விருதை வெற்றியீட்டியமை தொடர்பில் பேராசிரியர். ரமணி அரசகுலரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “உயர் மதிப்பிற்குரிய கிறிஸ்டல் விருதினூடாக CNCI இனால் கௌரவிக்கப்பட்டதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ஒப்பற்ற சிகிச்சைகள் மற்றும் அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதில் நாம் தொடர்ச்சியாக காண்பிக்கும் அர்ப்பணிப்பாக இவை அமைந்திருப்பதுடன், தொழிற்துறையின் சிறப்பை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது அர்ப்பணிப்பான ஊழியர்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாம் பெருமளவில் வரவேற்கின்றோம். மூன்று ஆண்டுகளாக பெருமைக்குரிய தங்க விருதுகளை சுவீகரித்திருந்தமைக்கு அப்பால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் அமைந்துள்ளது – வெற்றி என்பது இலக்கல்ல, கடின உழைப்பு மற்றும் சிறப்பான செயற்பாட்டுக்கான தொடர்ச்சியான வழியாக அமைந்துள்ளது.” என்றார்.


Share with your friend