Coca-Cola அறக்கட்டளையானது தனது பணியினை மட்டக்களப்பினில் இருகக்கூடிய நீர்த்தேக்கங்களில், அதன் தட்டுப்பாட்டினை நீக்குவதாகும்

Share with your friend

Coca-Cola அறக்கட்டளையானது, தனது நடைமுறைப் படுத்தும் உதவியாளனான We Effectஇற்கு நன்கொடையினை   வழங்கீடு செய்வதன் மூலம், இலங்கையில் நிலையான நீர் முகாமைத்துவத்திற்கான அதன் அர்ப்பணிப்பினை வலுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களை வெற்றிகரமாகப் புனரமைத்தல் தொடர்பான தனது சமீபத்திய திட்டத்தினை வெளியிட்டது. திக்கனை குளம், மாணிக்கம் குளம் மற்றும் தாமரைக்குளம் ஆகிய மூன்று புனரமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களின் திறப்பு விழாவானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அன்று நடைபெற்றது, மேலும் உள்ளூர் அரசாங்க மற்றும் சமூக உறுப்பினர்களின் மதிப்பிற்குரிய பிரமுகர்கள் போன்றோர் இந்நிகழ்வினில்க் கலந்து கொண்டனர்.

“எமது செயல்களே எமது வரும்காலம்” என்ற மறுமலர்ச்சித் திட்டமானது, 2021இல் ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் இடம் பெற்றது. மேலும் இத்திட்டத்தின் கீழ், நீர் மீள்நிரப்புதல், பெண்கள் தொடர்பான அதிகாரமேம்பாடு மற்றும் கழிவுகள் தொடர்பான நிர்வாகம் போன்ற இலக்குகள் உள்ளடங்குகின்றன. அதாவது, மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 1,700 இற்கும் அதிகமான பின்தங்கிய நிலைக் குடும்பங்களுக்கு விவசாய நீர் விநியோகத்தினை உறுதி செய்வதே இத்திட்டத்தி பிரதான நோக்கமாகும். இம்முக்கிய குறிக்கோளை இலக்காகக் கொண்டு திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக, திக்கனை குளம், மாணிக்கம் குளம் மற்றும் தாமரைக்குளம் ஆகிய மூன்று நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவானது 533,400 கன மீட்டர் அளவால் அதிகரித்தது.

மேலுமாக, இத்திட்டமானது பெண் தலைமைத்துவத்தினை ஊக்குவிக்கின்றது. குறிப்பிடத்தக்க நல்விளைவுகளுடன் இவ்வொருங்கிணைந்த   நடவடிக்கைகளின் மூலம் பிரதானமாக விவசாயிகளின் ஒற்றுமையானது வலுப்பெற்றது. மேலும் மறுசீரமைக்கப்பட்ட இம் மூன்று நீர்த்தேக்கங்கள் மூலம் விவசாய நீரினைப் பெற்றுக் கொள்ளுதலானது அதிகரித்தது. 1,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதியானது கிடைத்தது. அதிகரித்த பொருளாதார வாய்ப்புகளுடன் கூடிய பெண் தொழில் முயற்ச்சியாளர் மேம்பாடானது உருவாக்கியது. மற்றும் தெரிவு செய்யப்பட்ட   சமூகங்களில் கழிவு அகற்றல்  நிர்வாக செயல்முறையும் கூட  மேம்பாடு அடைந்தது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பின் மேலதிக அரசாங்க அதிபரான சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்கள் இம் முன்முயற்சி குறித்துப் பாராட்டியதுடன், பெருநிறுவனங்களும் கூட இதே போன்ற தொலைநோக்கு உத்திகளைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்திக் கூறினார்.   மேலும் அவர் கூறுகையில்   “இன்று, நாம் நிலையான எதிர்காலத்தை நோக்கி பயணத்தில் ஓர் குறிப்பிடத்தக்க மைல்கல்லினை எட்டியுள்ளோம். இது எம் தேசத்தின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றது.  இந்நீர்த்தேக்கங்களைப் புனரமைப்பதன் மூலம் அவற்றின் நீர் தாங்குதிறனையும்   மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தையும் வலுவூட்டுவதற்கான Coca-Cola அறக்கட்டளையின் நிலையான   அர்ப்பணிப்பினைப்   பிரதிபலிக்கின்றது.  We Effect, AHAN மற்றும் Coca-Cola அறக்கட்டளை என்பனவற்றிற்கு அவர்களின் நல் நோக்கத்திற்காகவும் அவர்களின் அசைக்க முடியாத அர்பணிப்பிற்காகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  இவர்களின் முன் உதாரணத்தில் இருந்து நாம் உத்வேகம் பெறுவோம், மேலும் அனைவருக்கும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒன்று சேர மற்றவர்களையும்  ஊக்குவிப்போம்”  என்று அவர் கூறினார்.

அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக, We Effect இன் ஆசிய பிராந்திய பணிப்பாளரான Nina Larrea அவர்கள் இத்திட்டத்தின் நன்மைகளினைப் பற்றி  வலியுறுத்துகையில்: Coca-Cola அறக்கட்டளையுடனான எங்கள் ஒத்துழைப்பானது  நேர்மறையான மாற்றத்திற்கான உந்து சக்தியாக அமைந்துள்ளது, கடந்த காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி, அதற்கு சிறந்த சான்று   இப்போது  மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏற்பட்ட இவ் அபிவிருத்தியாகும். இம் முன்முயற்சியானது பரஸ்பர கூட்டுறவுகளை வலுப்பெறச் செய்யவும், யாவரும் நீரினைப் பெற்றுக் கொள்ளவும், மற்றும் பெண் தொழில் முயற்ச்சியாளர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளது.  அது மட்டும் அல்லாது, இது ஓர் நிலையான எதிர்காலத்திற்காக நிறுவனங்கள் ஒன்றுபடும்போது   ஏற்படக்கூடிய   குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு மிகச் சிறந்த சான்றாகும்.”

ACTED மற்றும் We Effect என்பனவற்றுடன் இணைந்து, Coca-Cola அறக்கட்டளையானது   ஆனது இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நீர் நிர்வாகம், தொடர்பான திட்டங்களை ஆரம்பித்துள்ளது. ACTED மற்றும் Coca-Cola அறக்கட்டளை இணைந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மொனராகலை மாவட்டத்தின் கலஹிட்டிய கிராமத்தில் உள்ள சமுர்த்தி குளத்தினை   புணருத்தாரனம் செய்தன.  இத்திட்டமானது கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் மற்றும் 1,700 உள்ளூர் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதோடு, சுமார் 250 ஏக்கர் விவசாயப் பயிற்சசெய்கை  நிலங்களை ஆண்டு  முழுவதும்  விவசாயத்தினை  மேற்கொள்ள  திறந்துவிடப்பட்டுள்ளது.  இது குறிப்பாக உள்ளூர் பெண் விவசாயிகளுக்கு மிகச் சிறந்த  பயனளிக்கின்றது. அவ்வருடத்தில் We Effect ஆனது The Coca-Cola அறக்கட்டளையிடம் இருந்து பெற்றுக்கொண்ட நன்கொடை வழங்கீட்டினை உபயோகித்து அநுராதபுரத்தில் இருக்கக்கூடிய தம்மன்னாவ மற்றும் எல்பத்வெவ நீர்த்தேக்கங்களில் திருத்தப் பணிகளினை மேற்கொண்டது.

We Effect மற்றும் The Coca-Cola அறக்கட்டளை என்பன அநுராதபுரத்தில் இருக்கக்கூடிய தம்மன்னாவ மற்றும் எல்பத்வெவ நீர்த்தேக்கங்களில் திருத்தங்களினை மேற்கொண்டு புனரமைத்தன. 

இம் முயற்சியானது தரமான  நீர் கிடைப்பது மட்டும் அல்லாது தம்மன்னாவ கிராமத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு அதிகார மேம்பாட்டினையும் அளித்தது.  இதன் பயனாக 180 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திகள் பல் மடங்கானது, வருமானம் அதிகரித்தது மற்றும் உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கைத் தரமும்  மேம்பட்டது.

இம்முன்னேற்றத்தினை அங்கீகரித்து, Coca-Cola அறக்கட்டளையின் தலைவரான Saadia Madsbjerg அவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்புத் தொடர்பாகக் கூறுகையில், “இப்பூமியில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நீரானது எவ்வளவு அத்தியாவசியம் என்பதனை நாம் நன்கு புரிந்துகொள்கிறோம். Coca-Cola அறக்கட்டளையானது மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் We Effect இக்கும், நீர் பாதுகாப்பு தொடர்பாக அவைகளின் ஒத்துழைப்பிற்கு, தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கின்றது. அதே போல் எதிர்காலதில் வழங்கப்படக்கூடிய சகல ஒத்துழைப்புகளும், அனைத்து மக்களும்   எதிர்காலத்திலும் கூட தொடர்ச்சியாக நீர் வசதி கிடைப்பதனை இலக்காகக் கொண்ட எமது பயணம் அபிவிருத்தி அடையும் என்பதில் நாம் உறுதியாக  நம்புகிறோம்.”

இலங்கைவாழ் சமூகத்தின் தாக்கம் மற்றும் அபிவிருத்திக்கான Coca-Cola அறக்கட்டளையின் அர்ப்பணிப்பானது, சூழல், சமூகம் மற்றும் நாம் சேவை வழங்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடம் பெற்ற இம் மூன்று நீர்த்தேக்கங்களின் புனரமைப்பானது அனைவரின் நிலையான  எதிர்காலம்  தொடர்பாக  அர்ப்பணிப்புக்கு  ஓர் மிகச் சிறந்த  சான்றாகும்.

Coca-Cola அறக்கட்டளை  தொடர்பாக.

Coca-Cola அறக்கட்டளையின் நோக்கமானது உலகெங்கிலும் இருக்கக்கூடிய Coca-Cola நிறுவனங்களின் தொழில்பாடு மற்றும் எமது ஊழியர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் தொழில் புரியும் சமூகங்களில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகும். சிக்கல் மிகுந்த உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் அளவிடக்கூடிய மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தினை உருவாக்க கூடிய யோசனைகள் மற்றும் நிறுவனங்களை நாம் ஆதரிக்கின்றோம். பாதுகாப்பான நீர், காலநிலை தாங்கும் தன்மை மற்றும் பேரிடர் ஆபத்துக்கான தயார்நிலை மற்றும் அதனை சமாளிப்பது, தொழில்துறைப் பொருளாதாரம், பொருளாதார வலுவூட்டல் மற்றும் நமது சொந்த ஊரின் சமூகத்தை பாதிக்கும் காரணங்களில் நிலையான அணுகல் ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். 1984 ஆம் வருடத்திலிருந்து, சர்வதேசத்திலும் இருக்கக்கூடிய சமூகங்களை வலுப்படுத்தும் முகமாக Coca-Cola அறக்கட்டளையானது அதன் உறுதியான சேவைக்காக $1.5 பில்லியனுக்கும் அதிகமான    நன்கொடை வழங்கீடினை மேற்கொண்டுள்ளது.


Share with your friend