Colors of Courage நிதியம் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து கராப்பிட்டிய ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது – 2026 ஆம் ஆண்டு நிறைவடையும்

Share with your friend

ஜனவரி 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஆரம்பநிகழ்வைத் தொடர்ந்து, கராப்பிட்டிய ட்ரெயில்புற்றுநோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன், Colors of Courage நிதியம் அறிவித்துள்ளது.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள புற்றுநோய்ப் பிரிவின் துணைப் பிரிவாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த புதிய 10 மாடி கட்டிட புற்று நோய் சிகிச்சை வசதி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், இதில் அமைக்கப்படும் அதிநவீன கதிரியக்கப் பிரிவு, எலும்பு மச்சை மாற்று சிகிச்சை பிரிவு, குழந்தை மருத்துவப் பிரிவு, அவசர சத்திர சிகிச்சைப்பிரிவு [Surgical ICU], வேதியல் [கீமோதெரபி] பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் 160 படுக்கைகள் கொண்ட புற்றுநோயியல் வார்டுகள் ஆகிய பிரிவுகள் மூலம் இங்கு அவசர சிகிச்சை பெறுவதற்காக சுற்றியுள்ள மாகாணங்களில் இருந்து வரும் நோயாளிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கவுள்ளது.

Colors of Courage நிதியமானது (COC) – மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும் -இது நாதன் சிவகணநாதன் மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரால் 2008 இல் நிறுவப்பட்டது. நிதியத்தின் பல வெற்றிகரமான நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடர்ந்து, தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவுகள் நிர்மாணிக்கப்பட்டன.

2011 ஆம் ஆண்டு நாதன் சிவகணநாதன் மற்றும் சரிந்த உனம்பூவெட்டோ ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட COC இன் இந்த திட்டமானது பின்னர் ட்ரெயில் வைத்தியசாலை திட்டம் எனப் பெயரிடப்பட்ட நிலையில் இனப்பிளவுகள் தொடர்பான பிரச்சினைகளை மறுவடிவமைத்து, நாட்டின் புற்றுநோய் பராமரிப்பு நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட நோக்கத்திற்காக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகும். ட்ரெயில் புற்றுநோய் மருத்துவமனை திட்டம் என்பது COC, சுகாதார அமைச்சு (MOH) மற்றும் இலங்கை போஷணை மற்றும்சுதேச மருத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். இது முழு தென் மாகாணத்திற்கும் அதன் அண்டை மாவட்டங்களுக்கும் புற்றுநோய் சிகிச்சைக்கான அதிகரித்த அணுகலை உருவாக்குகிறது.

ஜூலை 2011 இல், வடக்கில் மாற்று புற்றுநோய் சிகிச்சை வசதியை உருவாக்க நிதி திரட்டும் நோக்கில், இலங்கை முழுவதும் நடைப்பயணத்தை ட்ரெயில் ஆரம்பித்தது. அந்த நேரத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய நிதியளிப்பு முயற்சியாக 27 நாட்களில் 30,000 க்கும் மேற்பட்டோர் தொன்றாமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைபயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை ட்ரெயில் புற்றுநோய் மருத்துவமனையை நிர்மாணிக்க தேவையான 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திரட்டப்பட்டது. இன்றைய நிலவரப்படி, இந்த மருத்துவமனையானது இன்று வரையில் 800,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது.

மேலும், தெல்லிப்பளை ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது முதல் COC ஆனது அதன் நீண்டகால பெருநிறுவன ஆதரவாளர்களுடன் சேர்ந்து . 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உபகரணங்களை வழங்கி இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ததுடன் மாதம் 4000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதுடன் ஒட்டுமொத்த மருத்துவமனையையும் பராமரித்து வருகிறது.

ட்ரெயில் 2011 இன் வெற்றியினாலும், 2015 ஆம் ஆண்டில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அதிகளவான புற்றுநோய் தொடர்பான மரணங்கள் பதிவாகியிருந்ததாலும், COC ஆனது தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு மேலும் உயர்தரமான அவசர சிகிச்சையின் அவசியத்தை உணர்ந்து கொண்டது. இலங்கையின் தென் பகுதியில் காலியில் அமைந்துள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை வசதியை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், Trail 2016 – மீண்டுமொரு நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது.- இதற்கிணங்க இதற்காக 750 மில்லியன் இலங்கை ரூபாவை திரட்டுவதற்காக . இம்முறை பருத்தித்துறையிலிருந்து தொன்றாமுனை வரை அக்டோபர் 6 ஆம் திகதி முதல் நவம்பர் 2 ஆம் திகதி வரை – 75250,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து அதன் ஒற்றுமை இலக்கை அடைந்த நிலையில் மற்றும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆதரவைப்பெற்றது.

 துரதிர்ஷ்டவசமாக, எதிர்பாராத தாமதங்கள் திட்டமிட்டபடி இந்த முயற்சியானது முன்னோக்கி நகர்வதை தடுத்துவிட்டன

கட்டம் I: நீண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கலர்ஸ் ஆஃப் சேஞ்ச் நிதியம் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் 2018 ஜூன் 11ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.பல்வேறு அமைச்சரவை அமைச்சுக்களின் ஒப்புதல் செயல்முறைகளில் தாமதம் ஏற்பட்டதால், திட்டத்தின் இந்த கட்டமானது எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டம் II: கட்டிட நிர்மாணம் – தடையின்றி முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், இத்திட்டம் பல தடைகளை சந்தித்தது:

– திட்டத்தை தொடங்குவதற்கு ஆரம்பத்தில் நிதி இல்லை என்று அரசாங்கம் கூறியது, இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டபோது, ​​கோவிட் -19 காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டதுடன் இந்த நேரத்தில் இராணுவத்தால் அதைச் செய்ய முடியவில்லை.

– கோவிட்-19க்குப் பிறகு, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களால் நாடு பாதிக்கப்பட்டது, மீண்டும் இந்தத் திட்டத்திற்கு இராணுவத்தால் முன்னுரிமை வழங்க முடியாத நிலையில் மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கிணங்க நிர்மாணப்பணிகளை முன்னெடுக்க முடியவில்லை .

– பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், செலவு அதிகரிப்பு, பரிமாற்று விகிதத்தின் ஏற்ற இறக்கம் மற்றும் கட்டிட நிர்மாணப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் சிரமங்கள் ஆகியவை திட்டத்தை மேலும் நீடித்தன.

எவ்வாறாயினும், ஜனவரி 30 ஆம் திகதி வியாழன் அன்று 2 ஆம் கட்டத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, சிறப்பு வாய்ந்த கராப்பிட்டிய ட்ரெயில் புற்றுநோய் மருத்துவமனையின் நிர்மாணப் பணிகள் 2026 ஆம் ஆண்டின் புதிய நிறைவுத் தேதியை சந்திக்கும் வகையில் இருக்கும் என்று COC தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

“தவிர்க்க முடியாத நிர்மாணத் தாமதங்கள் காரணமாக, திறப்பு நிகழ்வினை சில வருடங்கள் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பின்னர், இந்தத் திட்டம் தற்போது அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று Trail இன் இணை ஸ்தாபகர் நாதன் சிவகணநாதன் கருத்து தெரிவித்தார். “சுகாதார அமைச்சின் ஆதரவிற்கு மேலதிகமாக, தன்னார்வத் தொழிநுட்ப உதவிகள் மூலம் தமது முழு ஆதரவையும் உறுதியளித்தமைக்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுளோம் .”

இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகள் திட்டத்தின் நோக்கத்தைக் குறைத்தாலும், கட்டிட நிர்மாணச் செலவுகளுக்கு மிகப்பெரிய நிதி முயற்சியை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. இதுவரை திரட்டப்பட்ட 750 மில்லியன் ரூபாவானது, கட்டம் I இன் நிர்மாணப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது, மேலும் தற்போதைய செலவினங்களைக் கருத்தில் கொண்டு, COC தனது நிதிகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது. எனவே தற்போது மேலும் 2.2 பில்லியன் இலங்கை ரூபா தேவைப்படுகிறது. இதன் விளைவாக – புற்றுநோய் சிகிச்சைக்கு அதிகரித்த மற்றும் சமமான அணுகலை வழங்குவதற்கான அதன் இலக்கை அடைய COC தொடர்ந்து முயற்சித்து வருவதால், நிதியமானது மீண்டும் திட்டத்திற்கான நன்கொடைகளை திரட்டும் உத்தேசத்தில் உள்ளது..

கராப்பிட்டிய ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிர்மாணத்திற்கான பணப் பங்களிப்புகள் நேரடியாக COC இன் வங்கிக் கணக்கிலோ அல்லதுநிதியத்தின் இணையத்தளத்திலோ செலுத்தலாம். இதேவேளை நிர்மாணப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் நன்கொடைகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .


Share with your friend