கடன் வளர்ச்சியை ஊக்குவிக்க கடன் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்களுக்கான நேரடி பொது அணுகலை எளிதாக்குகிறது
நாட்டின் முதன்மை கடன் தகவல் ஆணையகமான, இலங்கை கடன் தகவல் பணியகம் (CRIB), வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடனான மூலோபாய ஒத்துழைப்பு மூலம் கடன் மதிப்பெண்கள் மற்றும் அறிக்கைகளின் டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துகிறது. ஆரோக்கியமான கடன் சுயவிவரத்தை பராமரிப்பதில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, CRIB இப்போது தனிநபர்கள் தங்கள் கடன் அறிக்கைகளை CRIB இணையதளம் அல்லது அவர்களின் சொந்த வங்கி பயன்பாடுகள் மூலம் எளிதாகப் பெற அனுமதிக்கிறது.
குறிப்பிடத்தக்க சமீபத்திய வளர்ச்சியில், CRIB ஆனது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்த மக்கள் வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம், மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் CRIB அறிக்கை (MyReport) மற்றும் கடன் மதிப்பெண்களை வங்கியின் ‘People’s Pay’ டிஜிட்டல் பணப்பை மூலம் நேரடியாக அணுக முடியும். ஒரு எளிமையான பதிவு மற்றும் கோரிக்கை மூலம் செயல்முறையை நெறிப்படுத்த முடியும். மேலதிக சரிபார்ப்புகளோ ஆவணங்களோ தேவையில்லை.
இந்த விரிவாக்கப்பட்ட அணுகல்தன்மை, கடன் வழங்குபவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள தகவல் இடைவெளியை (தகவல் சமச்சீரற்ற தன்மை) குறைக்க CRIB இன் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகும், இதன் மூலம் மேம்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கடன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இலங்கையர்கள் தங்களுடைய கடன் நிலை குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள உதவுவதன் மூலம், இந்த முயற்சி பொறுப்பான கடன் வாங்குவதையும் ஊக்குவிக்கிறது. ஒரு வெற்றிகரமான டிஜிட்டல் மாற்றத்துக்கான நிகழ்ச்சி நிரலின் ஆதரவுடன், CRIB அதன் அதிநவீன கடன் தகவல் முகாமைத்துவ முறைமையை (CIMS) திறம்பட பயன்படுத்தி, தற்போதுள்ள வங்கி டிஜிட்டல் அலைவரிசைகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு மூலம் அதிக வாடிக்கையாளர் வசதியை உறுதி செய்கிறது.
வாடிக்கையாளர் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் CRIB CIMS மற்றும் வங்கி அமைப்புகளுக்கு இடையே வாடிக்கையாளர் தரவு பாதுகாப்பாக மாற்றப்படுகிறது. CRIB அனைத்து கட்டாய குறியாக்கத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது மற்றும் இலங்கையின் தேசிய கடன் தகவல் பணியகமாக அதன் கடமைகளை நிறைவேற்றுகிறது. இந்த முயற்சிகள் மூலம், CRIB இலங்கை சமூகத்திற்குள் கடன் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிறந்த கடன் வாங்கும் பழக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பணம் செலுத்தும் நடத்தைகள், கடன்பட்டமை, மக்கள்தொகை, கடன் வரலாறு மற்றும் கடன் வசதிகளின் நிலை பற்றிய ஆழமான புரிதல் என்பவற்றையும் ஊக்குவிக்கிறது. இது, சமூகத்தில் ஆரோக்கியமான கடன் கலாச்சாரத்திற்கு பங்களிக்கும், ஒட்டுமொத்த கடன் வளர்ச்சி மற்றும் உள்ளடக்கத்தை சாதகமாக பாதிக்கும்.
தங்களுடைய சொந்த கடன் அறிக்கை மற்றும் CRIB மதிப்பெண்ணை அணுகும் திறனுடன், தற்போதுள்ள வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிகளால் வழங்கப்படும் பரந்த அளவிலான நிதியுதவி தயாரிப்புகள் மற்றும் கடன் வசதிகளுக்கான கடன் தகுதி பற்றிய தெளிவான புரிதலைப் பெறலாம், பெரும்பாலும் மிகவும் சாதகமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன். CRIB மதிப்பெண் ஒரு மதிப்புமிக்க குறிப்பாக செயல்படுகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு விரைவான கடன் ஒப்புதல்கள் மற்றும் சிறந்த கடன் விதிமுறைகளைப் பாதுகாக்க உதவுகிறது.