இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் இசுரு உதானாவின் பிரத்தியேக விளையாட்டு உடற்பயிற்சி ஆடை வர்த்தக நாமமான IZY> Daraz Mall உடன் உத்தியோகபூர்வமாக கூட்டு சேர்ந்து, இலங்கையின் முன்னணி இலத்திரனியில் வர்த்தக தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சிசார் ஆடைகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
ஆண்களுக்கான ஜிம் T-Shirகள் மற்றும் ஆர்ம்கட்கள் மற்றும் பெண்களுக்கான ஜிம் க்ராப் டொப்களின் தனித்துவமான வடிவமைப்புகளை உள்ளடக்கிய இத் தொகுப்பு, 2022 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்று கொழும்பு ஹில்டனில் ரம்மியமிக்க உற்சாகமான ஒரு மாலைப்பொழுதில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இக் கூட்டாண்மை பற்றி Daraz Sri Lanka முகாமைத்துவ பணிப்பாளர் ரக்கில் பெர்னாண்டோ பகிர்ந்துக் கொள்கையில்,: “இலங்கையின் புகழ்பெற்ற, சகலதுறை வீரர்களில் ஒருவரான இசுரு உதானாவின் விளையாட்டு உடற்பயிற்சிசார்; ஆடை வரிசையில் IZY ஐ வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Daraz இன் உயர்தர பிராண்ட் சேனலாக, Daraz Mall எங்கள் நம்பிக்கைமிகு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்குகிறது. IZY உடனான எங்கள் கூட்டாண்மை மூலம், வாடிக்கையாளர்களுக்கான எங்கள் தயாரிப்பு வழங்கல் மற்றும் தெரிவுகளை விரிவுபடுத்தியுள்ளோம்.” எனக் குறிப்pபட்டார்.
உயர்தர துணி மற்றும் கவனத்துடன் தயாரிக்கப்படும் IZY ஆடைகள், சமூகத்தை உயர்த்தி பங்களிப்புக்களையும் வழங்கும்; Daraz இன் நோக்கத்துடன் இணையும் முகமாக, விற்பனையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இருதய மற்றும் தீவிர பராமரிப்பு வளாகத்தை உருவாக்க லிட்டில் ஹார்ட்ஸ் தேசிய நிதி திரட்டும் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.
IZY ஸ்தாபகரும் கிரிக்கெட் வீரருமான இசுரு உதானா குறிப்பிடுகையில்: “IZY என்பது தனித்துவமான மற்றும் சமூக பொறுப்புடன் ஒன்றை மக்களுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பிறந்த ஒரு விளையாட்டு உடற்பயிற்சிசார் ஆடை நாமமாகும். இவ்வியாபாரக்குறி வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளை முன்னுரிமைப் பட்டியலில் இருந்து வெளியே தள்ளுகிற பரபரப்பான வேகமான உலகத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் சுறுசுறுப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கின்றது. எங்கள் வியாபாரக்குறிகள் வளர்ச்சியடையும் போது சமூகத்திற்கும் தங்களது பங்களிப்பினை வழங்கும் நோக்கத்தினை பகிர்ந்துக்கொள்வதால், Daraz உடன் பங்காளர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” எனக் கூறினார்.