Daraz 11.11 2021 இற்காக OPPO உடன் உடன்படிக்கையை ஏற்படுத்திய Daraz.lk

Share with your friend

இலங்கையின் முன்னணி ஒன்லைன் ஷொப்பிங் தளமான Daraz.lk, உலகில் பெயர்பெற்ற மொபைல் நாமமான OPPO உடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வான Daraz 11.11 தொடர்பில் கூட்டாண்மையைப் புதுப்பித்துள்ளது.

நவம்பர் 11 முதல் நவம்பர் 17 வரையான sale காலப் பகுதியில் அனைத்து OPPO ஸ்மார்ட்போன்கள் மற்றும் IOT உற்பத்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இலவசமான ஷொப்பிங்கிற்கான அனைத்து ஓடர்களுக்கும் 30% வரை விலைக்கழிவு கிடைக்கும். இதற்கு மேலதிகமாக Daraz 11.11 ஊடாகக் கொள்வனவு செய்யப்படும் அனைத்து OPPO மொபைல் போன்களுக்கும் OPPO இடமிருந்து இலவச பரிசுகள் மற்றும் வவுச்சர்களைக் பெற்றுக் கொள்ளலாம்.

ஏராளமான மொபைல் கருவிகள் மற்றும் இலத்திரனியல் பொருட்களுக்கு இணையற்ற விலைக் கழிவுகள், தள்ளுபடிகள் மற்றும் நெகிழ்வான கொடுப்பனவு முறைகள் என்பவற்றை Daraz 11.11 வழங்குகிறது. இந்த sale  இல் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களில் மொபைல் போன்கள், லப்டொப்ஸ், வீட்டுப் பாவனைப் பொருட்கள், கமராக்கள், கேமிங் கருவிகள், இலத்திரனியல் கருவிகள், ஹெட்போன்ஸ் மற்றும் அணியக்கூடிவை என்பன உள்ளடக்கியுள்ளன.

Sale தொடர்பில் கருத்துத் தெரிவித்த Daraz Sri Lanka இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ரக்கில் பெர்னான்டோ குறிப்பிடுகையில், “சிறந்த ஷொப்பிங் அனுபவத்தில் எமது வாடிக்கையாளர்கள் எந்தக் குறையையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான Daraz பெருமையை எடுத்துள்ளது. என்பது உலகின் பாரிய ஒன்லைன் sale ஆகும். இது பல நாடுகளில் ஈ-வர்த்தகத் துறையை உயர்த்தியிருப்பதுடன், உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தியமையை நிரூபித்துள்ளது. OPPO வர்த்தக நாமத்தையும் உள்ளடக்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

நவம்பர் 11 -17 வரையான காலப்பகுதியில் தமக்கான பொருட்கூடையை உருவாக்க முடியும். மூன்று பொருட்களைக் கொள்வனவு செய்து 5% தள்ளுபடியைப் பெற்றுக் கொள்வதுடன், ஐந்து பொருட்களைக் கொள்வனவு செய்து 7% தள்ளுபடியைப் பெற்றுக் கொள்வதுடன் அல்லது ஏழு பொருட்களைக் கொள்வனவு செய்து 10 % தள்ளுபடியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

“ OPPO, Daraz இன் சிறந்த பங்காளராகும் என்பதுடன், Daraz 11.11 இல் பங்காளராக இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். குறைந்த செலவில் அதிநவீனத் தன்மையைக் கொண்டிருப்பதால் OPPO  இலங்கையில் அபரிவிதமான ஆற்றலைக் காண்கிறது. இது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது” என OPPO Lanka இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவித்தார்.

###

                                  ###


Share with your friend