Daraz Sri Lanka நிறுவனம், பாரிய தள்ளுபடிகள், மொத்தமாக ரூபா 15 மில்லியன் பெறுமதி கொண்ட வவுச்சர்கள் மற்றும் இலவச விநியோக சேவையுடன் 3.3 March Madness Sale விற்பனை நிகழ்வை ஆரம்பித்துள்ளது

Share with your friend

நாட்டில் இணையவழி சந்தையாகத் திகழ்ந்து வருகின்ற Daraz Sri Lanka, 2025 மார்ச் 3 முதல் மார்ச் 7 வரை இடம்பெறவுள்ள தனது   3.3 March Madness Sale என்ற விற்பனை ஊக்குவிப்பு நிகழ்வை ஆரம்பித்துள்ளது. 75% வரையான மிகப் பாரிய தள்ளுபடிகள், மொத்தமாக ரூபா 15 மில்லியன் பெறுமதி கொண்ட வவுச்சர்கள் மற்றும் இலவச விநியோக சேவை ஆகியவற்றுடன், பல்வேறுபட்ட தயாரிப்புக்களுக்கு மிகச் சிறந்த சலுகைகளை கொள்வனவாளர்களுக்கு கிடைக்கச்செய்து, கொண்டாட்ட பருவகாலத்திற்குத் தேவையானவற்றை இப்போது வாங்கிக் கொள்வதற்கான பொருத்தமான கொள்வனவு    வாய்ப்பாக இப்பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் சாதனங்கள், நவநாகரிகம், அழகு பராமரிப்பு, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பல அடங்கலாக, பல்வேறுபட்ட பிரிவுகள் மத்தியில் வேறு எங்கும் கிடைக்காத விலைகள் மற்றும் பிரத்தியேகமான சலுகைகளை வழங்கி, இணையவழி கொள்வனவு  அனுபவத்தை விநோதமும், விறுவிறுப்பும் நிறைந்த ஒன்றாக Daraz தொடர்ந்தும்  முன்னெடுத்து வருகின்றது. உங்களுடைய சாதனங்களை  மேம்படுத்திக் கொள்ளவோ, உங்களுடைய அலுமாரிகளில் பழையவற்றுக்குப் பதிலாக புதிய ஆடையணிகளை இடம்பெறச்செய்யவோ, அல்லது அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பேண விரும்பினாலோ என அனைத்திற்கும் இடைவிடாத, சிக்கனமான விலைகள் கொண்ட மற்றும் வியப்பூட்டும் கொள்வனவு அனுபவத்தை  3.3 March Madness Sale விற்பனை நிகழ்வு உறுதிசெய்கின்றது. இவ்விற்பனை நிகழ்வை இன்னும் வெகுமதி கொண்ட ஒன்றாக ஆக்கும் வகையில், ரூபா 15 மில்லியன் மதிப்பு மிக்க வவுச்சர்களை Daraz கொள்வனவாளர்கள் பெற்றுக்கொள்ள முடிவதுடன், ஏற்கனவே தள்ளுபடி விலைகளில் கிடைக்கும் பொருட்களுக்கு கூடுதல் சேமிப்புக்களைப் பெற்று அனுபவிப்பதற்கு இது அவர்களுக்கு இடமளிக்கின்றது. 

மட்டுப்படுத்தப்பட்ட காலத்திற்கு, உயர் மதிப்பு கொண்ட சலுகைகள் மற்றும் பிரபல வர்த்தகநாமங்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற பிரத்தியேகமான சலுகைகள் ஆகியவற்றை வழங்கும் இந்த   விற்பனை நிகழ்வின் மூலமாகக் கிடைக்கின்ற நன்மைகளை வாடிக்கையாளர்கள் தவறவிடாது பயன்படுத்திக் கொள்ள முடியும். இதை விட, தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு, இலவச விநியோக சேவை வழங்கப்படுவது, சௌகரியத்தை மேலும் மேம்படுத்துவதுடன், எவ்விதமான  மேலதிக செலவுகளுமின்றி வாடிக்கையாளர்கள் தமது வீடுகளில் இருந்தே கொள்வனவுகளை சௌகரியமாக மேற்கொள்வதை இது உறுதி செய்கின்றது.

“அனைவரும் மகத்தான சலுகைகளை  நேசிப்பதை Daraz நன்கறியும் என்பதுடன்,   3.3 March Madness Sale விற்பனை ஊக்குவிப்பு மூலமாக, இப்பருவகாலத்தில் மிகச் சிறந்த சலுகைகளை எமது வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்கின்றோம். 75% வரையான தள்ளுபடிகள், ரூபா 15 மில்லியன் மதிப்பிலான வவுச்சர்கள், மற்றும் இலவச விநியோக சேவை  ஆகியவற்றுடன், நீங்கள் விரும்புகின்ற அனைத்தையும் ஒப்பற்ற விலைகளில் வாங்கிக் கொள்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணம். எனவே, தயாராகுங்கள், வேண்டியவற்றை உங்களது கொள்வனவு கூடையில் சேர்த்துக் கொள்ளுங்கள், கொள்வனவுப் பேராசை தொடங்கட்டும்! என்று Daraz Sri Lanka  பிரதம வர்த்தக அதிகாரி ஒஷான் ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்.

3.3 March Madness Sale விற்பனை நிகழ்வானது Diamond Best Foods, Cetaphil, Hemas Consumer, Unilever மற்றும் CBL  உள்ளிட்ட இலங்கையிலுள்ள மிகவும் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் பலவற்றை ஒன்றுதிரட்டியுள்ளதுடன், மிகச் சிறந்த விலைகளில், உயர் தரம் கொண்ட தயாரிப்புக்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை உறுதி செய்கின்றது.  இச்சலுகைகள் பலவும் மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மாத்திரமே கிடைக்கப்பெறுவதால், முடிந்தவரை விரைவாக இவற்றைக் கொள்வனவு செய்து பயன்பெறுமாறு கொள்வனவாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். நியாயமான விலை, பல்வகை தயாரிப்புக்கள் மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் மீதான தனது அர்ப்பணிப்புடன், நாட்டில் இணையவழி கொள்வனவில் புதிய தராதரங்களை Daraz Sri Lanka தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.   

3.3 March Madness Sale விற்பனை நிகழ்வானது  2025 மார்ச் 3 முதல் மார்ச் 7 வரை இடம்பெறுகின்றது. இப்பருவகாலத்தில்  மிகப் பாரிய சேமிப்புக்களை வழங்கும் நிகழ்வின் நன்மைகளை அனுபவிப்பதற்கு இப்போதே Daraz app இற்குச் செல்லுங்கள்.

Daraz குழுமம் குறித்த விபரங்கள்  

2015ல் ஸ்தாபிக்கப்பட்ட Daraz, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் e-commerce தளமாகத் திகழ்ந்து வருகின்றது. 500 மில்லியன் சனத்தொகையுடன், மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பிராந்தியத்தை இலக்கு வைத்து, அதிநவீன சந்தைப்பரப்பு தொழில்நுட்பத்துடன், விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் என இரு தரப்பினருக்கும் வலுவூட்டுகின்றது. e-commerce, விநியோக வழங்கல் ஏற்பாடு, கொடுப்பனவு மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்பி, ஈர்க்கின்ற, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்கி, வர்த்தகத்தின் ஆற்றல் மூலமாக தெற்காசிய சமூகங்களை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம்.            


Share with your friend