DBL விற்பனை முகவர்களை கௌரவிக்கும் DBL Night வெற்றிகரமாக நிறைவு

Share with your friend

Deen Brothers Imports (DBL) நிறுவனம் நாடெங்கிலுமுள்ள தமது விற்பனை முகவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்த DBL Night எனும் நிகழ்வு கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் DBL தமது விற்பனை முகவர்களை கௌரவிக்கும் முகமாக நடாத்திய நிகழ்ச்சிகளோடு பார்க்குமிடத்து இது மிக பிரமாண்டமான விழாவாக அமைந்ததோடு அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 500 ஐ விட அதிகமாகும். இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய மற்றும் Dongcheng நிறுவனத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜோ வென் ஆகியோர் இதில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதன் போது DBL பொறித்தொகுதிகள்,  Dongcheng விசையாற்றல் கருவிகள், உதிரிப் பாகங்கள், இதர துணைப்பாகங்கள் போன்ற பிரிவுகளின் கீழ் தமது இலக்குகளை பூர்த்தி செய்த விற்பனை முகவர்களுக்கு பரிசு வவுச்சர்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. . Dongcheng விசையாற்றல் கருவிகள் பிரிவில் தனித்துவமான விற்பனை இலக்குகளை அடைந்த 30 விற்பனை முகவர்களுக்கு 5 நாட்களுக்கு சீனா நாட்டின் ஷெங்காய் நகருக்கு சென்று தங்கியிருந்து திரும்பி வருவதற்கான டிக்கட்டுகள் வழங்கப்பட்டன. அச் சுற்றுலாவுக்கான முழுச் செலவும் நிறுவனத்தினால் ஏற்கப்பட்டது. இச் சுற்றுலாவின் போது Dongcheng தொழிற்சாலையை பார்வையிடுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இத் துறையில் முன்னோடியாக திகழும் DBL நிறுவனம் அதன் சொந்த உற்பத்திகளோடு, அமெரிக்கா, சீனா, தாய்வான், இந்தியா, ஜேர்மனி மற்றும் மேலும் பல நாடுகளுக்குரிய வர்த்தகநாமங்களின் கீழ் வரும் பல்வேறு உற்பத்திகளை சந்தைப்படுத்துகிறது. கடந்த காலங்களில் அந் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ளது. உலகளாவிய வர்த்தகநாாமான OREGON வழங்கும் பாராட்டு விருதுகள், 2024 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற வர்த்தக பங்குதாரர் சம்மேளனத்தில் வெல்லப்பட்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த சந்தைப்படுத்துநர் விருது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உச்சபட்ச செயலாற்றுகையுடன் கூடிய விநியோகஸ்தருக்காக வழங்கப்படும் Champions of All Champions விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளையும் இந் நிறுவனம் வென்றுள்ளது. தமது உற்பத்தித்துறையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கட்டுமானங்கள், வாகனங்கள், விவசாயம், கைத்தொழில், மர உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தல் DBL நிறுவனத்தின் பிரதான நோக்கங்களாகும்.


Share with your friend