Dearo Investment தனியார் நிறுவனத்துக்கு 4 People`s Excellency விருதுகள்

Share with your friend

Dearo Investment தனியார் நிறுவனம் People`s Excellency 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த சேவை நிலைய அபிவிருத்தி உயர் விருதையும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான விருதையும், சிறந்த தொழில் முயற்சி நிதி நிறுவனத்துக்கான விருதையும் வென்று சாதனை படைத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மய சேவையுடன் இணைந்து பயணிக்கும் Dearo Investment தனியார் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட தனியார் மற்றும் தொழில்முயற்சி நிதிச் சேவைகள், கடன்கள், முதலீடு என ஏராளமான சேவைகளை வழங்குகிறது. சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சிகள், கூட்டு தொழில்முயற்சிகள் மற்றும் ஆரம்ப நிலையில் காணப்படுகின்ற தொழில்முயற்சிகளுக்கு தேவையான நிதி வசதிகளை வழங்குதல், தற்போதுள்ள தொழில்முயற்சிகளின் மூலதனத்தை உயர்த்துவதற்கு தேவையான தொழில்முயற்சி கடன்களை வழங்குதல் இந் நிறுவனத்தின் பிரதான சேவைகளில் அடங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்க மற்றும் வினைத்திறன் மிக்க நிதித் தீர்வுகளை அளிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் பணியாளர்களை கொண்ட அந் நிறுவனத்தின் கீழ் 30 இற்கும் மேற்பட்ட கிளைகள் காணப்படுகின்றன. தொடக்கத்திலிருந்தே நுண் நிதி, சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து செயற்படும் Dearo Investment நிறுவனம் நிதி தொழில்முயற்சியும் சட்டமும், உணவு பானங்கள், சுற்றுலா, கல்வி, தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனங்கள், கமத்தொழில், பெருந்தோட்டத்துறை என பல்வேறு துறைகளுக்கு தமது சேவையினை விரிவுபடுத்தியுள்ளது. Dearo Investment நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவப் பணிப்பாளர் திரு பிரசன்ன சஞ்சீவவின் தலைமையில் மேற்படி நிறுவனம் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. வங்கியியல் மற்றும் நிதித் துறையில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட தொழில் வல்லுநரான அவர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் தொடர்பான இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் அவர் கடன் முகாமைத்துவம், வங்கியியல் மற்றும் நிதி தொடர்பான டிப்ளோதாரியுமாவார். பிரபாஷ் குணரத்ன, உபுல் எதிரிசூரிய, தரிந்து தனஞ்சய சமரவிக்கிரம, நெரஞ்சன் வர்ணசூரிய மற்றும் மனித வள மற்றும் நிருவாக நிறைவேற்றுப் பணிப்பாளர் திலினி கல்ஹாரி ஏக்கநாயக்க ஆகிய இதர பணிப்பாளர் சபை அங்கத்தவர்களும் நிறுவனத்தின் வளர்ச்சி கருதி அவருக்கு உறுதுணையாக செயற்படுகின்றார்கள்.


Share with your friend