DFCC வங்கி காகிதங்கள் எதுவுமின்றி நேருக்கு நேர் முகம் பாராது வாடிக்கையாளர்களை வங்கிச்சேவைக்காக உள்வாங்கும் முதன்முதலான வங்கி என்ற பெருமையை நிலைநாட்டியுள்ளது

Share with your friend

இலங்கையில் உள்ள மிகவும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் சேவைகளை முன்னெடுக்கின்ற நிதி நிறுவனங்களில் ஒன்று என்ற தனது சந்தை ஸ்தானத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், DFCC வங்கி, மத்திய வங்கி வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேசிய அடையாள அட்டை விபரங்களை உறுதிப்படுத்துவதற்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்கான அணுகலுடன் நேருக்கு நேர் முகம் பாராத வாடிக்கையாளர் உள்வாங்கல் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதில் முன்னோக்கி நடைபோட்டுள்ளது.

இந்த செயல்முறை 2021 மே மாதத்தில் செயல்படுத்தப்பட்டதுடன், அதன் பின்னர் பல எண்ணிக்கையான வாடிக்கையாளர்கள் இந்த முறையில் உள்வாங்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்றின் 3 ஆம் அலை நிலவும் தற்போதைய சூழலில் இந்த முயற்சி தக்க தருணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்புகின்றவாறு எந்தவொரு சாதனத்தையும் உபயோகித்து தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே வங்கியில் கணக்குகளை ஆரம்பிக்க முடிவதால் பரவல் அல்லது தொற்றுநோயின் ஆபத்தைக் குறைக்கிறது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் நேருக்கு நேர் முகம் பாராத டிஜிட்டல் வழிமுறை கணக்கு ஆரம்பிக்கும் செயல்முறை, வங்கியின் அதிநவீன மும்மொழி இணையதளத்தில் வழங்கப்பட்ட “DFCC Video Chatz” வீடியோ வங்கிச்சேவையைப் பயன்படுத்தி வீடியோ வழியாக சரிபார்ப்பை மேற்கொள்ளும் நடைமுறையை உள்ளடக்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் விளைவாக, DFCC வங்கி இந்த முழுமையான, ஒருங்கிணைந்த மற்றும் தங்குதடையற்ற வாடிக்கையாளர் உள்வாங்கல் செயல்முறையை உருவாக்கியுள்ளது, இது வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் வங்கி கிளையில் காலடி எடுத்து வைக்காமல் டிஜிட்டல் முறையில் கணக்குகளை ஆரம்பிக்க இடமளிக்கின்றது. ஆட்பதிவுத் திணைக்களத்தில் சேமிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை தரவு இந்த தங்குதடையற்ற செயல்முறையை டிஜிட்டல் முறையில் எளிதாக்குவதற்கும், சேமிப்பு கணக்குகள், வெளிநாட்டு நாணய கணக்குகள், நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் விசேட வைப்பு கணக்குகள் ஆகியவற்றை மெய்நிகர்ரீதியாக சௌகரியமாக ஆரம்பிப்பதற்கு உதவுகின்றது. இந்த செயல்முறையைப் பின்பற்றி, விண்ணப்பதாரர், இலத்திரனியல்ரீதியாக வாடிக்கையாளர்களின் விபரங்களைப் பெற்று சரிபார்க்கின்ற  செயல்முறை குறித்த இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்வதற்கான சரிபார்ப்பு செயல்முறைக்காக வங்கியின் பிரதிநிதியுடன் உரையாடுவதற்கான வீடியோ அழைப்பிற்கு தமக்கு வசதியான நேரத்தை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்ய முடியும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் வீடு அல்லது அலுவலகத்திலிருந்து கொண்டே சௌகரியத்துடன் கணக்குகளைத் திறக்க உதவும் கூடுதல் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த முயற்சி, காகிதமில்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிளைக்காத வழிமுறையை நோக்கி நகர்வதற்கான வங்கிகளின் பேண்தகமை சார்ந்த மூலோபாயங்களில் ஒன்றுக்கும் உதவுகின்றது.

நேருக்கு நேர் முகம் பாராத வாடிக்கையாளர் உள்வாங்கல் நடைமுறை குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “டிஜிட்டல் வளர்ச்சி மாற்றம் சார்ந்த ஒரு சகாப்தத்தில், வங்கிச்சேவைத் தொழிற்துறை இப்போது நேருக்கு நேர் முகம் பாராத வாடிக்கையாளர் உள்வாங்கல் வசதியைத் தழுவிக்கொண்டிருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இதற்கு முன்பு அனுபவித்திராத, மிகுந்த சௌகரியத்தை வழங்குகிறது. தொழில்நுட்பவியல் புத்தாக்கங்களில் நாம் முன்னணியில் இருப்பதால், எங்கள் தீர்வு நிச்சயமாக தொழிற்துறையில் ஒரு அளவுகோலாக அங்கீகரிக்கப்படும். நேருக்கு நேர் முகம் பாராத வாடிக்கையாளர் உள்வாங்கல் வசதியை அறிமுகப்படுத்துவது இலங்கையின் மிகவும் வாடிக்கையாளர் மையமாகக் கொண்ட மற்றும் டிஜிட்டல் முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற வங்கிகளில் ஒன்றாக மாற வேண்டும் என்ற வங்கியின் ஸ்தானத்தை மேலும் வலியுறுத்துகிறது. பயனர்களுக்கு இலகுவான இடைமுகம் என்பது ஸ்மார்ட் போன்கள், டெப்லெட்டுகள் மற்றும் டெஸ்க்டொப் கணினிகள் உள்ளிட்ட எந்தவொரு சாதனத்திலிருந்தும் ஒன்லைன் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கணக்குகளை ஆரம்பிப்பதற்கான தெரிவு அளிக்கப்படுகிறது. ஆகவே, இந்த தளம் வாடிக்கையாளர்கள் எந்தவொரு கிளைக்கும் நேரடியாகச் செல்ல வேண்டிய தேவையைப் போக்கி, தங்களுக்கு விருப்பமான கிளையில் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான சௌகரியத்தை வழங்குகின்றது,” என்று குறிப்பிட்டார்.  

இந்த அதிநவீன டிஜிட்டல் வழிமுறை வாடிக்கையாளர் உள்வாங்கல் தொழில்நுட்ப அம்சத்தின் மூலம் ஆரம்பிக்கக்கூடிய DFCC வங்கிக் கணக்குகளில் வின்னர் சேமிப்புக் கணக்குகள், எக்ஸ்ட்ரீம் பணச் சந்தைக் கணக்குகள், ஃபுளோட் பணச் சந்தைக் கணக்குகள், சுப்ரீம் வாசி சேமிப்புக் கணக்குகள், மெகா போனஸ் சேமிப்புக் கணக்குகள், கருசரு சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புக்களுடன் கூடிய விசேட வைப்புக் கணக்கு சாதாரண சேமிப்புக்கள், நிலையான வைப்புக்களுடன் கூடிய சுப்ரீம் வாசி சேமிப்புக்கள், நிலையான வைப்புக்களுடன் கூடிய விசேட வைப்புக் கணக்கு எக்ஸ்ட்ரீம் பணச் சந்தை சேமிப்புக்கள் ஆகியன அடங்கியுள்ளன.

வெளிநாட்டு நாணயக் கணக்குகளைப் பொறுத்தவரை, இந்த வசதி தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள், நிலையான வைப்புக்களுடன் வெளிநாட்டு நாணய விசேட வைப்புக் கணக்கு சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புக்களுடன் வெளிநாட்டு நாணய விசேட வைப்புக் கணக்கு சுப்ரீம் வாசி சேமிப்புக்கள், நிலையான வைப்புக்களுடன் வெளிநாட்டு நாணய விசேட வைப்புக் கணக்கு எக்ஸ்ட்ரீம் பணச் சந்தைக் கணக்குகள் ஆகியவற்றை ஆரம்பிக்கவும் இவ்வசதி இடமளிக்கின்றது.  இந்த வெளிநாட்டு நாணயக் கணக்குகள் அமெரிக்க டொலர் (USD)> பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டு (GBP)> ஜப்பான் யென் (JPY)> சுவிஸ் பிராங் (CHF)> கனேடிய டொலர் (CAD)> அவுஸ்திரேலிய டொலர் (AUD)> சிங்கப்பூர் டொலர் (SGD)> யூரோ (EUR) மற்றும் சீன யுவான் (CNY) ஆகிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களில் பேண முடியும்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள் 

DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2021 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply