DFCC வங்கி, Prime Group உடன் கைகோர்த்து இலங்கையில் வர்த்தக API வங்கிச்சேவையில் முன்னோடியாக மாறியுள்ளது

Share with your friend

API இணைப்பு வழிமுறை மூலமாக iConnect எனப்படும் தனது இலத்திரனியல் வங்கிச்சேவை தளத்தில் முதலாவது வர்த்தக வாடிக்கையாளராக Prime Group ஐ வெற்றிகரமாக உள்வாங்கி, தனது டிஜிட்டல் பரிணாம மாற்றத்திற்கான பயணத்தில் DFCC வங்கி சாதனையை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் வர்த்தக API வங்கிச்சேவையில் முதலாவது நேரலை நடைமுறைப்படுத்தலாக இது மாறியுள்ளது.

Prime Lands (Pvt) Ltd, Prime Residencies PLC, மற்றும் Prime Constructions (Pvt) Ltd ஆகிய மூன்று Prime Group நிறுவனங்களும் தற்போது iConnect API தளத்தில் நேரலையாக உள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் API க்கள் மூலமாக தமது வழங்குனவர்களுக்கான கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், நிகழ்நேர கொடுப்பனவு ஆரம்பிப்பு மற்றும் அதன் நிலவரம் குறித்த தெரிநிலை ஆகியவற்றுக்கு இடமளிக்கின்றது. API க்கள் மற்றும் மெய்நிகர் கணக்குகள் (Virtual Account) மூலமாக கணக்குக்கூற்றுக்களையும் Prime Lands செயல்படுத்தியுள்ளதுடன், ஆதனத்துறையில் (ரியல் எஸ்டேட்) முற்றிலும் தன்னியமயமாக்கப்பட்ட டிஜிட்டல் வைப்பு மற்றும் கொடுப்பனவு கண்காணிப்பு முறைமையை ஸ்தாபித்துள்ள முதலாவது நிறுவனமாக மாறியுள்ளது. வருமதிகளை வசூலித்தல், தடமறிதல், மற்றும் இணக்கக்கூற்று தொழிற்பாடுகளை மெய்நிகர் கணக்குகள் சீரமைப்பதுடன், பழமையான Host-to-Host (H2H) வழிமுறைகளைப் போக்கி, மனிதரீதியான தொடர் நடவடிக்கைகளைக் குறைத்து, உரிய காலத்தில் இணக்கக்கூற்றுக்களை உறுதி செய்து, தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்துகின்றன.

DFCC வங்கி கம்பஹா கிளை, கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவ அணி, மற்றும் DFCC தகவல் தொழில்நுட்ப அணி ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் பலனாகவே இச்சாதனை சாத்தியமாகியுள்ளது. iConnect மூலமாக நிகழ்நேர கொடுப்பனவு ஆரம்பிப்பு, கணக்குமீதி சரிபார்ப்பு, நிலவரம் குறித்த விசாரணை, மற்றும் தன்னியக்கமயமாக்கப்பட்ட இணக்கக்கூற்று என உலகளாவில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான வங்கிகளால் மாத்திரம் வழங்கப்படும் இந்த ஆற்றல்களை API வங்கிச்சேவை தற்போது வழங்குகின்றது.     

இந்த சாதனை மூலமாக இலங்கையில் நிறுவனங்கள் மத்தியில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பில் புதிய தராதரத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இந்த அதிநவீன, நிகழ்நேர தீர்வுகளை பரந்துபட்ட தொழில்துறைகள் மத்தியில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான வணிக நிறுவனங்களுக்கு நீட்டிப்பதற்கு தயராகவுள்ளது என்ற சமிக்ஞையையும் வெளிப்படுத்தியுள்ளது.  


Share with your friend