இலங்கை மற்றும் உலகிற்கு உள்ளடக்கிய பொருளாதார சுபீட்சத்தை ஊக்குவிக்கும் போது பெண் தொழில்முயற்சி என்பது இந்த கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். இதைப் புரிந்துகொண்ட DFCC வங்கி, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் முயற்சிகளைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சியில், பெண்களுக்கான ஒட்டுமொத்த வங்கிச் சேவை, நிதி மற்றும் நிதி அல்லாத தீர்வான DFCC வங்கியின் ஆலோக தயாரிப்பு மற்றும் சேவைகள் முன்மொழிவு, சமீபத்தில் DFCC ஆலோக வின் வலுவூட்டலுடன், WCIC Prathibhabisheka பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் நிகழ்வின் பிளாட்டினம் அனுசரணையாளராக, மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்துடன் (Women’s Chamber of Industry and Commerce – WCIC) கூட்டுச் சேர்ந்துள்ளது. பரந்த பொருளாதாரத்தை மேம்படுத்தல், பங்களிப்பு செய்தல், நிலைநிறுத்துதல் மற்றும் நல்விளைவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ள பெண் தொழில்முயற்சியாளர்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. பெண்களுக்கு வலுவூட்டுதல் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பு அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்ட கட்டமைப்பில் உட்பொதிந்துள்ளது. இது DFCC ஆலோக முன்மொழிவால் வழிநடத்தப்படுவதுடன், பெண்கள் தனிநபர்களாக, தொழில் வல்லுநர்களாக மற்றும் தொழில்முயற்சியாளராக வெற்றிபெறத் தேவையான அம்சங்களையும், நன்மைகளையும் அவர்களுக்கு வழங்குகிறது.
இவ்விருதுகளுக்கான நுழைவுகள் இலங்கை மற்றும் சார்க் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பெண் தொழில்முயற்சியாளர் மற்றும் பெண் தலைமையிலான வணிகங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படும். நுழைவுகள் ஏற்கப்படுவது 2022 ஒக்டோபர் 31 அன்று நிறைவடையும் DFCC ஆலோக வின் வலுவூட்டலுடனான WCIC பெண் தொழில்முயற்சியாளர் விருதுகள் நிழ்வானது 2023 ஜனவரியில் இடம்பெறவுள்ளது. நுழைவுகளுக்கான பிரிவுகளில் தொடக்க வணிக முயற்சி, நுண், சிறிய, நடுத்தர அளவிலான மற்றும் பாரிய வணிக முயற்சிகள் ஆகியவை அடங்கும். 2021/22 க்கான ஒவ்வொரு வணிகத்தின் ஆண்டு வருமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இப்பிரிவுகளுக்கு அவை தரம் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்படும். மேலும் “பிராந்தியத்தில் மிகச் சிறந்த வணிக முயற்சிக்கான” விருதுகள் வழங்கப்படும். இது இலங்கையின் மாகாணங்களில் சிறந்த பெண் தலைமையிலான வணிகங்களை இனங்கண்டு அங்கீகரிக்கும். இளம் பெண் தொழில்முயற்சியாளர், மிகச் சிறந்த தொடக்க வணிக முயற்சி, மிகுந்த நேர்மறை திறன் கொண்ட பெண் தொழில்முயற்சியாளர், மிகச் சிறந்த ஏற்றுமதி சார்ந்த தொழில்முயற்சியாளர் மற்றும் சார்க் பிராந்தியத்தின் மிகச் சிறந்த தொழில்முயற்சியாளர் உள்ளிட்ட மதிப்புமிக்க விசேட விருதுகளும் வழங்கப்படும். “2022 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்” என்ற பிரதான விருதின் அறிவிப்பு மற்றும் அவற்றை வழங்குவதுடன் விருதுகள் நிகழ்வு முடிவடையும்.
இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த DFCC வங்கியின் துணைத் தலைமை அதிகாரியும், Pinnacle/கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான ஷேரா ஹசன் அவர்கள், “அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் வகையிலான சமத்துவம்மிக்க எதிர்காலத்தை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். பெண்களுக்கு வலுவூட்டுவது இந்த இலக்கினை யதார்த்தமாக்குவதில் ஒரு பாரிய பகுதியாகும். DFCC ஆலோக இந்த முயற்சியின் முன்னணி முகமாக உள்ளதுடன், மேலும் இந்த முன்மொழிவின் மூலம் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு பெண்களை மையமாகக் கொண்ட நிதியியல் உதவியை வழங்குவதற்காக உலகளாவிய நிதி வழங்குநர்களுடன் நாங்கள் கைகோர்த்துள்ளோம். இலங்கையில் பெண்கள் மீதான எங்கள் அர்ப்பணிப்பு தொடர்ச்சியானது மற்றும் பெண் தொழில்முயற்சியாளர் மீது இன்னும் அதிக கவனம் செலுத்த நாங்கள் எண்ணியுள்ளோம். இலங்கையின் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு இது முக்கியமானதென நாங்கள் கருதுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
“அனைவருக்கும் ஏற்ற வங்கி” என்ற கருப்பொருளின் கீழ் வாழ்க்கையில் கனவுகளை நனவாக்கி மற்றவர்களுக்கு மதிப்பை உருவாக்குவதே DFCC வங்கியின் முக்கிய நோக்கமாகும். அவர்களின் எதிர்கால கனவுகள் மற்றும் அபிலாஷைகளை அடையப்பெற DFCC ஆலோக மற்றும் ஏனைய பல முயற்சிகளின் மூலமாக நிதியியல் மற்றும் நிதியியல் அல்லாத உதவிகளை அவர்களுக்கு வழங்கி, அவர்களை வலுவூட்டி, தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் DFCC வங்கி சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. தனித்துவமான கடன் வசதிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் முறையான சான்றிதழ்கள் உட்பட, தொழில்முயற்சியாண்மை மற்றும் தலைமைத்துவம் குறித்த செயலமர்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் போன்ற தனித்துவமான பிற முயற்சிகள் இதில் அடங்கும்.
பெண்களை மையமாகக் கொண்ட, முழுமையான வங்கிச்சேவை முன்மொழிவான, DFCC ஆலோக, அபிலாஷைமிக்க இலங்கைப் பெண்களுக்கு அவர்கள் வெற்றிபெறத் தேவையான நிதிக் கருவிகளை வழங்க முற்படுகிறது. எமது 24 மணி நேர பிரத்தியேக ஆலோக துரித அழைப்பு சேவை, எங்கள் அழைப்பு மைய முகவர்களால் சிறப்பாக இயக்கப்பட்டு வருவதுடன், மேலும் தெளிவான தகவல்தொடர்பாடல் வசதியை வழங்க அழைப்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மொழியில் சேவைகள் வழங்கப்படுகின்றன. பெண்களை மையமாகக் கொண்ட வரப்பிரசாதங்கள் கொண்ட விசேட வர்த்தகநாமமிடப்பட்ட கடனட்டைக்குப் புறம்பாக, DFCC ஆலோக கணக்கு வைத்திருப்பவர்கள் பல தனித்துவமான பலன்களுடன் முழுமையான 360 வங்கிச் சேவையை அனுபவிக்கின்றனர். இதில் குறைந்த ஆரம்ப வைப்புத்தொகை வெறும் ரூபா. 1,000/-, முன்னுரிமை வட்டி வீதங்கள், நாடு முழுவதும் உள்ள DFCC அல்லது LankaPay ஏடிஎம் மையங்களிலிருந்து இலவச ஏடிஎம் பணம் மீளப்பெறல், இலவச டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் MTeller வழியாக வசதியான, பாதுகாப்பான வீட்டு வங்கிச் சேவைகள் ஆகியன இச்சேவைகளில் அடங்கியுள்ளன. அவர்கள் முன்னுரிமை வட்டி வீதங்களுடன் அடகு வைக்கும் வசதிகள், சேமிப்பு மீதித் தொகையை விட 10 மடங்கு வரை இலவச ஆயுள் காப்புறுதி மற்றும் கணக்கு வைத்திருப்பவர் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வரை Doc990 உடன் இணைந்து இலவச டிஜிட்டல் மருத்துவ சுகாதாரத் தீர்வுகளையும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த வரப்பிரசாதங்களுக்கு மேலதிகமாக, DFCC ஆலோக ஆனது மானியங்கள் அடங்கலாக, பெண் தொழில்முயற்சியாளருக்கு ஆதரவளிப்பதற்கான நிதியுதவி ஏற்பாடுகளுக்கு உதவி வருகிறது.
இடமிருந்து வலப்புறமாக – ருவானி வீரசிங்க, சிரேஷ்ட உறவுமுறை முகாமையாளர் – சில்லறை வங்கிச்சேவை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி – DFCC வங்கி, ஷேரா ஹசன், துணைத் தலைமை அதிகாரி/ தலைமை அதிகாரி – Pinnacle/கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் செயல்பாடுகள் – DFCC வங்கி, திரு. ஆசிரி இத்தமல்கொட, சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரி/ தலைமை அதிகாரி, சில்லறை வங்கிச்சேவை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி – DFCC வங்கி, இந்திராணி பெர்னாண்டோ – முன்னாள் தலைவர், WCIC, அனோஜி டி சில்வா – தலைவர் WCIC
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] A+ தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.