DFCC வங்கி கறுவா இறக்குமதி செய்யும் முக்கிய வாடிக்கையாளர்களையும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்பையும் போற்றுகின்றது

Share with your friend

இலங்கையின் முதன்மையான வர்த்தக வங்கியான DFCC வங்கி, முக்கிய கறுவா ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்களின் வழங்கல் சங்கிலியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து, நாட்டிற்குள் வரும் அந்நிய செலாவணியை அதிகரிப்பதில் அவர்களின் கடின உழைப்பை நினைவுகூரும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த அங்கீகாரமளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், DFCC வங்கி கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக சில காலம் அவர்களுடனான ஈடுபாட்டிற்குப் பிறகு பிரத்தியேகமயமாக்கப்பட்ட ஏற்றுமதி நிதியியல் தீர்வுகளை வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் கறுவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்துறையில் பல முக்கிய பங்குதாரர்களை உள்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளால் தொடர்ச்சியான ஈடுபாடுகள் அவர்களுடன் முன்னெடுக்கப்படுகின்றன. DFCC வங்கி வழங்கியுள்ள தீர்வுகள் இதுவரை நன்கு பயன்படுத்தப்பட்டு, துறையின் வணிக அளவு மட்டங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு இடமளித்துள்ளது. வங்கியின் பிரத்தியேகமயமாக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைக்கான நிதியியல் சேவை வழங்கல், சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் பலாபலனை உறுதி செய்வதற்காக, ஏற்றுமதி வாடிக்கையாளர்களின் வழங்கல் சங்கிலியை இலக்காகக் கொண்டு கறுவா தொழிற்துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏற்றுமதியாளர்கள் நாட்டின் பொருளாதாரத் துறையில் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுடன், இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கை ஆற்றி வருகின்றனர். தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், பல சவால்களுக்கு மத்தியிலும் அதிக ஏற்றுமதி அளவு மட்டங்கள் மற்றும் மதிப்புகளை அடைவதன் மூலம் ஏற்றுமதித் துறை சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. வாசனைத் திரவியங்கள் துறையின் ஏற்றுமதி வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பித்துள்ளது. இதில் கறுவா முக்கியனதொரு வாசனைத் திரவியமாக உள்ளது. அசல் இலங்கை கறுவாவுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. ஏனெனில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் அதைப் பெற்றுக்கொள்வதற்கு பங்களிக்கும் பொருட்களின் நுகர்வு ஆகியவற்றின் காரணமாகவே கேள்வி இவ்வாறாக அதிகரித்துள்ளது.

இந்த அங்கீகாரத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த DFCC வங்கியின் கடல் கடந்த வங்கிச்சேவை, வாணிபம் மற்றும் சர்வதேச வர்த்தக அபிவிருத்திக்கான துணைத் தலைமை அதிகாரியான திரு. அன்டன் ஆறுமுகம் அவர்கள், “DFCC வங்கியானது, முக்கிய கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு அதன் விரிவான ஏற்றுமதி நிதித் தீர்வுகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. அந்நியச் செலாவணி வரவை முன்னெடுப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தின் மீள் எழுச்சி மற்றும் வளர்ச்சியைப் பேணிப் பாதுகாக்க இடமளிக்கின்றது. எங்களின் இலக்கு வைக்கப்பட்ட நிதித் தீர்வுகள் மூலம் ஏற்றுமதிச் சந்தையின் வளர்ச்சியை முன்னெடுத்து, அதன் மூலம் தேசத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மதிப்பைத் தோற்றுவிக்க முடியுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த அங்கீகாரத் திட்டம் நம்முடன் தொடர்புபட்ட தரப்பினரின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்திற்குப் பங்களிக்கும் DFCC வங்கியின் நீண்டகாலப் பயணத்தின் ஒரு பகுதியாகும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்        

   

DFCC வங்கியானது 66 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 40 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.   

Photo edit (3).png

DFCC வங்கியின் கடல் கடந்த வங்கிச்சேவை, வாணிபம் மற்றும் சர்வதேச வர்த்தக அபிவிருத்திக்கான துணைத் தலைமை அதிகாரியான திரு. அன்டன் ஆறுமுகம் அவர்கள் (இடது புறமிருந்து 3 ஆவது) அடையாளச் சின்னங்களை Grupo Canela (Pvt) Ltd (இடது புறம்) மற்றும் D-Triangle (Pvt) Ltd (வலது புறம்) வழங்கி வைக்கும் காட்சி. 


Share with your friend