அனைவருக்கும் ஏற்ற வங்கியான, DFCC வங்கி, அனுராதபுரம், பதுளை மற்றும் வவுனியா போன்ற சில பகுதிகளில் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, தனது Samata English (அனைவருக்கும் ஆங்கிலம்) என்ற நிகழ்ச்சித்திட்டத்தை 4 ஆவது ஆண்டாக இணைய வழி பாடத்திட்டமாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது. Samata English நிகழ்ச்சித்திட்டம் என்பது DFCC வங்கியின் ஒரு விசேட முயற்சி என்பதுடன், இது க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 18-25 வயதுடைய இளைஞர்,யுவதிகளிடையே ஆங்கிலப் பேச்சுத் திறன்களை மேம்படுத்துவதற்கும் பல்வேறு மென் திறன்களை மேம்படுத்துவதற்கும் அதன் விரிவான நிலைபேண்தகைமை மூலோபாயத்திற்கு அமைவாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான DFCC Samata English நிகழ்ச்சித்திட்டத்தின் பட்டதாரிகள், அவரவர் பங்குபற்றிய பிரதேசங்களில் உள்ள DFCC வங்கியின் கிளைகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இந்த வைபவங்களில் பங்கேற்பாளர்கள் பாடநெறியை நிறைவு செய்ததற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டதுடன், DFCC வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.
கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், காலி, அம்பாறை, இரத்தினபுரி, பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள இளைஞர்,யுவதிகளுக்காக 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 வருடங்களாக DFCC Samata English நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். இருப்பினும், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், உலகளாவிய தொற்றுநோயின் விளைவாக வங்கியால் இந்நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு, அனுராதபுரம், வவுனியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள இளைஞர்,யுவதிகளை மையப்படுத்தி, 50 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இந்த இளைஞர்,யுவதிகள் இப்போது வேலைக்குச் செல்வதற்குத் தேவையான ஆங்கில பேச்சு மற்றும் மென் திறன்களைக் கொண்டிருக்கிறார்கள்.
இம்முயற்சி குறித்து DFCC வங்கியின் சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும், DFCC Samata English நிகழ்ச்சித்திட்டத்தை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது என்பதை கூறுவது
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. சமூகப் பொறுப்புணர்வுள்ள வங்கி என்ற வகையில், நமது இளைஞர்,யுவதிகளுக்கு ஆங்கில மொழிப் புலமை மற்றும் மென் திறன் விருத்தியின் முக்கியத்துவத்தை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்தத் திறன்களைக் கொண்ட தனிநபர்கள் மிகவும் எளிதாக தொழிற்படையினுள் காலடியெடுத்து வைக்க முடியும் என்பதுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில் துறைகளில் முன்னேற முடியும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் தொடர்பாடல்களை சிரமமின்றி மேற்கொள்ளவும் அவர்கள் வலுவூட்டப்படுகின்றனர். மேலும், கல்வி என்பது எங்கள் விரிவான நிலைபேண்தகைமை மூலோபாயத்தின் 6 E களில் ஒன்றாகும். இது பல்வேறு கல்வி முயற்சிகளில் எங்களை ஆழமாக ஈடுபடுத்த வழிவகுத்தது. இந்த முயற்சியானது, எந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு எழக்கூடிய திறன் கொண்ட சமூகங்களை விருத்தி செய்வதற்கான எமது அர்ப்பணிப்புடன் ஒத்திசைகிறது,” என்று குறிப்பிட்டார்.
DFCC Samata English நிகழ்ச்சித்திட்டமானது ஆங்கில பேச்சுக்கான 3 மாத கால கற்கைத் திட்டத்தை உள்ளடக்கியதுடன், ஆங்கிலத்தில் தொடர்பாடும் திறன், அடிப்படை இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்புகளை மேம்படுத்துதல், கேட்கும் திறனை மேம்படுத்துதல், வாசிக்கும் திறனை மேம்படுத்துதல், தொழில் சந்தை மற்றும் செயல்பாடுகள் அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றுக்கு தேவையான எழுத்து திறன்களை மேம்படுத்துதல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. இதில் இன்னுமொருவருடன் இணைந்து ஜோடியாகவும் மற்றும் குழுப்பணியாகவும் கற்கும் செயல்பாடுகள் அடங்கியுள்ளன. இது தவிர, பங்கேற்பாளர்கள் ஒரு மாத கால மென்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இது ஒன்றுபட்ட உழைப்பில் சிறந்து விளங்குவது, நேரத்தை நிர்வகிப்பது, நேர்காணலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது மற்றும் படைப்பு விளக்கக்காட்சி மற்றும் எழுதும் திறன் போன்றவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.
DFCC Samata English நிகழ்ச்சித்திட்டத்திற்கான பாடத்திட்டங்கள், வங்கியின் சார்பாக, Gateway Language Institute கற்கை நிறுவனத்தால் நடத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகின்றன. பங்கேற்பாளர்களுக்கு இடையூறுகளின்றி நிகழ்நிலை கற்கை அமர்வுகளுக்கு சமூகமளிப்பதற்காக இலவச தரவு ஊக்குவிப்பு மற்றும் handsfree headset சாதனம் ஆகியவை வழங்கப்படுகின்றன. DFCC வங்கியின் முகநூல் பக்கத்தின் ஊடாக நிகழ்ச்சித்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் ஆரம்ப நிகழ்நிலை மதிப்பீட்டின் மூலம் பொருத்தமான விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
DFCC வங்கியானது அதன் நிலைபேண்தகைமை மூலோபாயத்தின் உந்துசக்தியுடன், கல்வியினால் கிடைக்கப்பெறும் அதிகரித்த வாய்ப்புகளின் மூலம் செழிக்கக்கூடிய எந்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீளும் திறன் கொண்ட சமூகங்களைத் தோற்றுவிக்க உறுதிபூண்டுள்ளது. DFCC
Samata English நிகழ்ச்சித்திட்டம் தவிர, வங்கி ஏனைய பல்வேறு கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளையும் முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் பங்கேற்பாளர்கள் DFCC வங்கியில் முன்னுரிமை அடிப்படையில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, பசுமை பேணும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.