ESOFT Metro Campus இனால் கேம்பரிட்ஜ் அங்கீகாரம் பெற்ற பரீட்சை நிலையம் அங்குரார்ப்பணம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ESOFT மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊடக மற்றும் மதிப்பாய்வு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இலங்கையின் மாணவர்களின் முன்னேற்றத்துக்காக மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக கைகோர்த்துள்ளனர்.
விசேட விருந்தினர்களில் ESOFT Metro Campus தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி. தயான் ராஜபக்ச, பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷான் செம்பகுட்டியாரச்சி, குழும வியாபார அபிவிருத்தி பிரதம செயற்பாட்டு அதிகாரி அமில பண்டார ஆகியோர் அடங்கியிருந்தனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊடக மற்றும் மதிப்பாய்வு சார்பாக முகாமைத்துவ பணிப்பாளர் தெற்காசியா அருண் ராஜாமணி மற்றும் முகாமையாளர் (ஆங்கிலம்) இலங்கை ஷப்கான் பாரிஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் கலாநிதி. தயான் ராஜபக்ச உரையாற்றும் போது, கேம்பிரிட்ஜ் அங்கீகாரம் பெற்ற பரீட்சை நிலையத்தின் அறிமுகம் என்பது, ESOFT ஐ பொறுத்தமட்டில் “வரலாற்று மைல்கல்” என குறிப்பிட்டார். இன்றைய உலகில் உறுதியான தொடர்பாடல் திறன்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை குறிப்பிட்டார்.
“இன்று முதல், ESOFT Metro Campus இனால் மாணவர்களுக்கும், அண்மையில் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்களுக்கும், ஆங்கிலம் பயில்வோருக்கும் மொழி ஆற்றலில் உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றது. உலகளாவிய ரீதியில் வெற்றிகரமாக இயங்குவதற்கு மொழி ஆற்றல் என்பது மிகவும் முக்கியம், உறுதியான தொடர்பாடல் திறன்களினூடாக, நிபுணர் ஒருவரின் தொழில் வாழ்க்கையை உயர்த்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், உலகளாவிய ரீதியில் அணுகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.” என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு ஆதரவாக அருண் ராஜாமணி தெரிவிக்கையில், “தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில் ஆங்கில மொழித் திறன்கள் என்பது பெருமளவு தாக்கம் செலுத்துகின்றது. தொழில் வாய்ப்புகளைப் பெறுவதை இரட்டிப்பாக்குவதுடன், உலகளாவிய ரீதியில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கும். இந்த புதிய நிலையத்தின் ஸ்தாபிப்பில் இணைந்த முயற்சி பங்காற்றியிருந்தது. உள்நாட்டு கல்வி வழங்கல்களை சர்வதேச தரத்தில் பெற்றுக் கொடுக்கும் ESOFT இன் அர்ப்பணிப்புடன் பொருந்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.
ESOFT Metro Campus இல் கேம்பிரிட்ஜ் அங்கீகாரம் பெற்ற பரீட்சை நிலையம் என்பது பரீட்சைக்கான நிலையம் என்பதற்கு அப்பாலானது. கல்விசார் மற்றும் நிபுணத்துவ வளர்ச்சிக்கான திறவுகோலாக அமைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆங்கில மொழி ஆற்றல் என்பது அடிப்படை ஆளுமையாக அமைந்துள்ளது. கேம்பிரிட்ஜ் வழங்கும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட Common European Framework of Reference (CEFR) அடிப்படையிலான பரிபூரண கட்டமைப்பினூடாக, மாணவர்களுக்கு முறையான மொழிசார் ஆற்றல்கள் கட்டியெழுப்பிக் கொள்வது உறுதி செய்யப்படுகின்றது.
ESOFT Metro Campus, கேம்பிரிட்ஜ் தகைமைகளை வழங்குவதனூடாக, மாணவர்களுக்கு சர்வதேச நியமங்களை பூர்த்தி செய்யும் ஆற்றல்களை வழங்குவதுடன், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொழில்நிலை மற்றும் கல்விசார் முன்னேற்றங்களுக்கு கதவு திறப்பதாக அமைந்துள்ளது.
இந்த புதிய கைகோர்ப்பினூடாக, பரந்தளவு கேம்பிரிட்ஜ் ஆங்கில கற்கைகளுக்கு பயிலல் மற்றும் பரீட்சை வசதிகளை ESOFT வழங்கும். இதில் நாடு முழுவதையும் சேர்ந்த சகல 40 கிளைகளிலும் ESOFT KET, PET, FCE, C1 மற்றும் TKT போன்றன அடங்கியிருக்கும். தரம் 1 முதல் 5 வரையான இளம் பயிலுனர்களுக்கு (YLE), Starters, Movers, and Flyers நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டு, அரச மற்றும் பகுதியளவு அரச பாடசாலை மாணவர்களுக்கு தமது ஆங்கில ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும்.
தற்போது KET மற்றும் PET கற்கைகள் ESOFT மாணவர்களுக்காக விசேடமாக திட்டமிடப்பட்டுள்ளன. TKT என்பது ஆசிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதையும் சேர்ந்த பாடசாலைகள் மற்றும் மொழி நிலையங்கள் ESOFT மற்றும் இதர எந்தவொரு நிலையத்துடனும் கைகோர்த்து கேம்பிரிட்ஜ் ஆங்கில தயார்ப்படுத்தல் நிலையமாக தகைமை பெற முடியும்.
இலங்கையில் கல்விசார் நியமங்களை மேம்படுத்துவதற்கான ESOFT இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது. பெருமளவு தொடர்புகளைக் கொண்ட உலகில் மாணவர்களுக்கு அவசியமான சாதனங்கள் மற்றும் தகைமைகளை வழங்குகின்றது. இந்த புதிய நிலையத்துடன், இலங்கையின் எதிர்கால கல்வியில் நீடித்து நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ESOFT எதிர்பார்ப்பதுடன், மாணவர்களுக்கு உலகளாவிய ரீதியில் பிரகாசிப்பதற்கு அவசியமான திறன்கள் மற்றும் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளவும் உதவுகின்றது.