Fems, Baby Cheramy, Diva ஆகிய தனது பலம் மிக்க வர்த்தகநாமங்களுக்காக SLIM Brand Excellence Awards 2024 நிகழ்வில் சாதனை வெற்றியை பதிவு செய்த Hemas Consumer Brands

Share with your friend

மதிப்புமிக்க SLIM Brand Excellence Awards 2024 நிழ்வில் வெற்றியீட்டியுள்ளதன் மூலம், இலங்கையின் மிக வேகமாக நுகரப்படும் (FMCG) பொருட்கள் துறையில் தனது தலைமைத்துவத்தை Hemas Consumer Brands (HCB) நிறுவனம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபெம்ஸ், பேபி செரமி, தீவா (Fems, Baby Cheramy, Diva) ஆகிய அதன் 3 உள்நாட்டு வர்த்தகநாமங்களுக்காக 6 விருதுகளை முடிசூடியதன் மூலம், முக்கிய சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பில் செலுத்தி வரும் இடைவிடாத கவனம் மற்றும் மாற்றம் ஆகியன தொழில்துறையில் புதிய வரையறைகளை அமைத்துள்ளன. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவ்விருது நிழ்வில், ‘CSR Brand of the Year’ (வெள்ளி), ‘Innovative Brand of the Year’ (வெள்ளி), மிகவும் பெருமைக்குரிய 2023/24 ஆண்டிற்கான சிறந்த தயாரிப்பு வர்த்தகநாமமாக ‘Product Brand of the Year’ (தங்கம்) எனும் விருதுகளை Fems பெற்றுக் கொண்டது. Baby Cheramy ஆனது, ‘Product Brand of the Year’ (Merit), ‘CSR Brand of the Year’ (வெண்கலம்) ஆகிய விருதுகளை பெற்றுக் கொண்டது. Diva Diriya வர்த்தகநாமத்திற்கு ‘Best New Entrant of the Year’ (வெண்கலம்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பெண்களின் சுகாதாரம் முதல் குழந்தை பராமரிப்பு, வீட்டுப் பாவனைப் பொருட்கள் வரையான பல்வேறு தயாரிப்பு வகைகளில் சிறந்து விளங்குவதற்காக Hemas Consumer Brands கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த விருதுகள் யாவும் எடுத்துக் காட்டுகின்றன.

SLIM Brand Excellence Awards 2024 நிகழ்வில் நிறுவனம் பெற்ற சக்திவாய்ந்த 6 விருதுகள் தொடர்பில் தனது உணர்வுகளை வெளிப்படுத்திய, நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர, “ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தனது தலைமைத்துவம் மூலம், தனிநபர் பராமரிப்பு மற்றும் வீட்டுப் பராமரிப்பு பிரிவுகள் ஊடாக இலங்கை குடும்பங்கள் சிறந்த வாழ்க்கை வாழ Hemas Consumer Brands வலுவூட்டி வருகின்றது. முக்கிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட எமது அணுகுமுறையானது, இலங்கையர்களின் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைந்துள்ள ஃபெம்ஸ், பேபி செரமி, தீவா போன்ற நம்பகமான வீட்டுப் பயன்பாட்டு வர்த்தகநாமங்களை உருவாக்கியதன் மூலம், இந்த பாராட்டுகளை வெல்ல எம்மால் முடிந்துள்ளது.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புத்தாக்கத்திற்கான எமது அர்ப்பணிப்பானது, நிலைபேறான நடைமுறைகளை மேம்படுத்தும் அதே வேளையில், நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளை எமது வர்த்தகநாமங்கள் தொடர்ச்சியாக பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றன. எமது ஒவ்வொரு வர்த்தக நாமமும் இலங்கை முழுவதிலும் உள்ள சமூகங்களிடையே சாகதமான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் மூலம், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பயணத்தை முன்னெடுத்து வருகின்றன. ” என்றார்.

முன்னணி பெண்கள் சுகாதார வர்த்தகநாமமான Fems, பேசப்பட கூடாத ஒரு வார்த்தையாக இருந்து வந்த மாதவிடாய் சுகாதார பிரிவில் புரட்சியை ஏற்படுத்தி, அது தொடர்பான அறிவூட்டல், வலுவூட்டல் மற்றும் உரையாடல்களை ஏற்படுத்தி அதனை மாற்றியமைத்ததன் மூலம், ‘Product Brand of the Year’ எனும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. காலாகாலமாக அத்தியாவசியமற்ற ஒன்றாகக் கருதப்பட்ட ஒரு துறையான மாதவிடாய் பற்றிய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து இலங்கை முழுவதும் உள்ள பெண்களுக்கு அறிவூட்டுவதில் Fems முன்னணியில் திகழ்கின்றது. வழக்கமாக கொள்வனவு செய்யும் ஒரு செயற்பாடு என்பதை மாற்றி, செயற்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் தயாரிப்பாக மாறியதன் மூலம், வசதி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க Fems பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. நுகர்வோரை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம், இந்த வர்த்தகநாமமானது, மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, மாதவிடாய் தொடர்பில் காணப்பட்ட மௌனம் மற்றும் களங்கம் போன்றவற்றை தகர்த்த்துள்ளது. தனது முயற்சிகளின் மூலம் புத்தாக்கம், அறிவூட்டல், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மூலம் தொழில்துறையை மாற்றியமைக்க முடியும் என்பதை Fems நிரூபித்துள்ளது. இது இலங்கையில் பெண்களின் ஆரோக்கியத்தில் மாதவிடாய் பராமரிப்பு இன்றியமையாத பகுதியாக மாற்றியுள்ளது. பாடசாலைகள், பணியிடங்கள், உணவகங்களில் சுகாதார நப்கின் அலுமாரிகளை (dispensers) நிறுவுதல் மற்றும் இலங்கையின் முதலாவது மும்மொழியிலான மாதவிடாய் கணிப்பு செயலியான Fio செயலியை வெளியிட்ட H.E.R அறக்கட்டளை போன்ற திட்டங்கள் மூலம் இவ்வர்த்தகநாமத்தின் தூரநோக்கு உணரப்படுகிறது. இந்த அறக்கட்டளையானது பாடசாலை மாணவிகள் மற்றும் பெருந்தோட்டத்திலும், ஆடைத் தொழிற்சாலை துறைகளிலும் உள்ள பெண்கள், மருத்துவச்சிகள் உள்ளிட்ட 300,000 பேருக்கு மாதவிடாய் பற்றி அறிவூட்டியுள்ளதுடன், பெண் சிறைக் கைதிகளுக்கு சுகாதார நப்கின்களையும் விநியோகித்துள்ளது.

சிறுவர்களுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதிலான அர்ப்பணிப்புக்காக, ‘Best CSR Brand’ வெண்கல விருது வழங்கி பேபி செரமி கௌரவிக்கப்பட்டமை தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பான குழந்தை வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் தடுக்கக்கூடிய விபத்துகளால் ஏற்படும் அதிகரித்து வரும் குழந்தை இறப்பு விகிதங்களை குறைப்பதில் வர்த்தகநாமமானது கவனம் செலுத்தி வருகின்றது. கடந்த 17 வருடங்களாக, சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான அத்தியாவசிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக பெற்றோர் அறிவூட்டல் கிளினிக்குகளை பேபி செரமி முன்னெடுத்து வருகிறது. அத்துடன். இந்த வர்த்தக நாமமானது, இலங்கை சிறுவர் நல மருத்துவர்கள் கல்லூரியுடன் இணைந்து வீட்டில் ஏற்படும் விபத்துகளை தடுப்பது தொடர்பான நூலை வெளியிட்டுள்ளதுடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் சமூக வைத்தியர் கல்லூரியுடன் இணைந்து சிறுவர் பாதுகாப்பில் அவசியமான தாக்கத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது. ‘Best Product Brand,’ பிரிவில் மெரிட் விருது வென்ற Baby Cheramy வர்த்தயாகநாமம் குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளில் பாதுகாப்பை ஒரு முக்கிய கொள்கையாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இவ்வர்த்தகநாமம் அதன் அனைத்து தயாரிப்புகளுக்கும், பெற்றோருடன் இணைந்து உருவாக்குதல் மற்றும் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பாதுகாப்பான செயன்முறையை உறுதி செய்தல் ஆகியன உள்ளிட்ட 8 படிமுறை கொண்ட பாதுகாப்பு செயன்முறையை செயற்படுத்தியுள்ளது. அத்துடன் அனைத்து Baby Cheramy தயாரிப்புகளும், சிறுவர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தோல் மருத்துவ நிபுணர்களால் பாதுகாப்பானவை என சான்றளிக்கப்பட்டவையாகும். அது மாத்திரமன்றி, இலங்கை தரநிலைகள் (SLS), NMRA பதிவு உள்ளிட்ட ஏனைய தரச் சான்றிதழுக்கு அவசியமான தர நிலைகளை அவை பூர்த்தி செய்கின்றன. இந்த முன்முயற்சிகள் யாவும் வெறுமனே தயாரிப்புகளை வழங்குவதற்கு அப்பால், குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான தெளிவான நோக்கத்தையும், வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன.

2022 இல் சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட Diva Diriya, தரம் மற்றும் கட்டுப்படியான விலைக்காக கொண்டுள்ள அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக ஒப்பிட முடியாத நற்பெயரைப் பெற்றுள்ளது. குடும்பங்களுக்கு பலமாகவும் ஆதரவாகவும் இருத்தல் எனும் Diva வர்த்தகநாமம் கொண்டுள்ள நோக்கத்தின் அடிப்படையில் இயங்கும் Diva Diriya சலவைத் தூளை அறிமுகப்படுத்தியமையானது, இவ்வர்த்தகநாமத்தின் நோக்கத்தின் கீழான ஒரு முக்கிய முயற்சியாகும். இலங்கை நுகர்வோருக்கு நம்பகமான மற்றும் நிலையான வீட்டுப் பராமரிப்புத் தெரிவாக இருத்தல் எனும் வாக்குறுதியின் அடிப்படையிலான இவ்வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான விநியோகமானது, வளர்ந்து வரும் சந்தை நிலைமைகள் மற்றும் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப அதன் திறனைப் பிரதிபலிக்கிறது. இக்கட்டான காலங்களிலும், அதன் பின்னரும் நுகர்வோருடன் இணைந்திருந்த அதன் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், Diva Diriya வர்த்தகநாமத்திற்கு ‘New Entrant Brand of the Year’ பிரிவில் வெண்கல விருது வழங்கப்பட்டது. Diva கொண்டுள்ள செழுமையான பாரம்பரியம் மற்றும் கொள்வனவு செய்யும் பணத்திற்கு மதிப்புள்ள பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்தியதன் மூலம், Diva Diriya அதன் வளர்ச்சி மற்றும் புத்தாக்கப் பயணத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கத் தயாராக உள்ள அதே நேரத்தில், இலங்கையர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வாழ வலுவூட்டலில் உறுதியாக உள்ளது.

Hemas Consumer Brands ஆனது, வரலாற்று ரீதியாக பல்வேறுபட்ட உயர்மட்ட விருது விழாக்களில் கௌரவிக்கப்பட்டுள்ளது. Baby Cheramy 2007 ஆம் ஆண்டில் Product Brand of the Year (தங்கம்) விருதை வென்றது. 2014 ஆம் ஆண்டில், Velvet சவர்க்காரம் Local Brand, Product Brand, Brand of the Year (தங்கம்) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றது. இந்நிறுவனம் வாய்ச்சுகாதார பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, அழகுப் பராமரிப்பு ஆகிய பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வகிக்கிறது. உயர்தரம், கொள்வனவு செய்யும் பணத்திற்கு உயர் பெறுமதியை வழங்கும் தயாரிப்புகளை வழங்குதல் போன்ற அதன் மூலோபாய அணுகுமுறையானது, இலங்கையின் FMCG துறையில் Hemas Consumer Brands இனை முன்னிலையில் திகழச் செய்கிறது.

Hemas Consumer Brands பற்றி

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.


Share with your friend