Fems இனால் “நாம் பேசுவோம்” நிகழ்ச்சி, இலங்கையின் மாணவர்களை வலுவூட்டும் வகையில் முன்னெடுப்பு

Share with your friend

Fems’இன் “நாம் பேசுவோம்” தொனிப்பொருளில் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் நாடு முழுவதிலும் பல்வேறு செயற்பாடுகளுடன் 2025 ஜுலை 9ஆம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த 3500க்கு அதிகமான மாணவர்களுக்கு அறிவூட்டும் அமர்வுகளை இந்தத் திட்டம் முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த 180,000க்கு அதிகமான மாணவர்களுக்கு அறிவூட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தினூடாக, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு தொடர்பில் நிலவும் பிரதான சவால்களை நேரடியாக தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமர்வுகளிலிருந்து ஆரம்பத்தில் பயன்பெற்ற பாடசாலைகளில், ஆனமடுவ – கன்னங்கர மகா வித்தியாலயம், குருநாகல் – ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரி, புனித ஏன்ஜெல்ஸ் பெண்கள் கல்லூரி – குளியாப்பிட்டி, கன்னங்கர மகா வித்தியாலயம் – ஆனமடுவ மற்றும் புத்தளம் ஆனந்த கல்லூரி போன்றன அடங்கியுள்ளன.Fems இனால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்துடன், இலங்கை செஞ்சிலுவை சங்கம், ஒன்றிணைந்த சமூகங்கள் மற்றும் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு போன்றன கைகோர்த்து ஆதரவளித்திருந்தன. “நாம் பேசுவோம்” திட்டம், மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் பரந்த, வயதுக்கு பொருத்தமான தகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதுடன், இளம் பெண்களுக்கு வலுவூட்டி, பாடசாலைகளுக்கு சமூகமளிக்காமல் இருக்கும் காலத்தை குறைப்பது மற்றும் நாடு முழுவதிலும் மாதவிடாய் தொடர்பில் அதிகம் திறந்த மற்றும் ஆதரவான சூழலை ஏற்படுத்துவது போன்றன இலக்குகளாக அமைந்துள்ளன.


Share with your friend