நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி, இலங்கையில் நிதித் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற First Capital நிறுவனம், முதல்முறையாக வாட்ஸ்அப் ஊடாக அலகு நம்பிக்கை நிதிய முதலீடு மற்றும் மீளப்பெறுகின்ற சேவையை அறிமுகம் செய்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. முதலீட்டுச் சேவைகளை இலகுவாக அணுகவும், பயன்படுத்துவதற்கும் இந்த புத்தாக்கமான முயற்சியானது ஒரு முக்கியமான சாதனை மைல்கல்லாக மாறியுள்ளதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தின் துணையுடன், First Capital நிறுவனம் தனது வாடிக்கையாளர் தளத்தை தொடர்ந்தும் கட்டியெழுப்பி வருகின்றது. இலங்கையில் முதல்முறையாக வாட்ஸ்அப் ஊடாக வாடிக்கையாளர்கள் தற்போது தங்குதடையின்றி அலகு நிதியங்கள் மீது முதலீடு செய்யவும், அவற்றை மீளப்பெறவும் முடிகின்றது. புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மீதான அர்ப்பணிப்புடன், நிபுணத்துவ ஆலோசனை மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றினூடாக வாடிக்கையாளர்கள் தமது நிதியியல் இலக்குகளை அடையப்பெறுவதற்கு உதவும் முயற்சிகளை First Capital முன்னெடுத்து வருகின்றது.
முதலீட்டாளர்கள் தமது ஸ்மார்ட்போன்களிலேயே இலகுவான வழிமுறைகளை பின்பற்றி, தாம் மேற்கொள்கின்ற முதலீடுகளை நிர்வகிப்பதற்கான சௌகரியத்தை அவர்களுக்கு வழங்குவதே இந்த நவீன சேவையின் நோக்கமாகும். வாட்ஸ்அப் பாவனை இலங்கையில் பிரபலமடைந்து வருகின்ற நிலையில், முதலீடுகளை அனைவரும் அணுகக்கூடியதாகவும், இலகுவான பயன்பாடு கொண்டதாகவும் First Capital மாற்றியமைத்துள்ளது. தனது சேவைகள் மத்தியில் டிஜிட்டல் தீர்வுகளை உள்ளிணைத்து, அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் முதல் புதிதாக முதலீடுகளை மேற்கொள்கின்றவர்கள் வரை அனைவருக்கும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதில் First Capital நிறுவனத்தின் தற்போதைய மூலோபாயத்தின் ஒரு அங்கமாக இந்த அறிமுகம் இடம்பெற்றுள்ளது.
BCS The Chartered Institute for IT Sri Lanka Section (BCSSL) ஆல் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த National ICT Awards 2024 (NBQSA) விருதுகள் நிகழ்வில், வாட்ஸ்அப் ஊடாக அலகு நிதியங்களில் பரிவர்த்தனைகளுக்கு இடமளிக்கும் இலங்கையின் முதலாவது தளமான First Capital Invest WhatsApp Channel இற்கு நிறுவன தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தங்க விருது அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தீர்வானது வாடிக்கையாளர்களுக்கு நிதியை நிர்வகிக்கும் திறனை கணிசமான அளவில் மேம்படுத்துகின்றது. இதற்குப் புறம்பாக, நிதியியல் சேவைகளுக்கு விரிவான டிஜிட்டல் நுழைவு வழியை வழங்குவதற்காக Epic Lanka நிறுவனத்தின் கூட்டாண்மையுடன் வடிவமைக்கப்பட்ட அதன் இணைய (ஒன்லைன்) நுழைமுகத்திற்கு சிறப்புத்தகுதி (Merit) விருதும் வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு யுகத்தில், அலகு நிதியப் பிரிவில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதில் First Capital முன்னிலை வகிக்கின்றது. வாட்ஸ்அப் போன்ற பிரபலமான தளங்களின் அனுகூலத்துடன், முதலீட்டுத் துறைக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, வாடிக்கையாளர்கள் தமது முதலீடுகளை சௌகரியமாகவும், திறன்மிக்க வழியிலும் நிர்வகிப்பதற்கு இந்நிறுவனம் அவர்களுக்கு வலுவூட்டி வருகின்றது.
Money Market Fund மற்றும் Money Plus Fund அடங்கலாக, First Capital அலகு நம்பிக்கை நிதியங்களில் முதலீடு செய்கின்ற வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைகளை சீரமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனது புதிய வாட்ஸ்அப் தளத்தை அறிமுகம் செய்வது குறித்தும் நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறியத்தந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் ஊடாக பல்வகைப்பட்ட அலகு நம்பிக்கை நிதிய பரிவர்த்தனைகளை சௌகரியமாக முன்னெடுப்பதற்கு இந்த தனித்துவமான சேவை அவர்களுக்கு இடமளிக்கின்றது. 766 656 656 என்ற இலக்கத்திற்கு “Hi” என்ற செய்தியை எளிதாக அனுப்பி, வாட்ஸ்அப் bot ஊடாக அவர்கள் மிக இலகுவாக இடைத்தொடர்பாட முடியும். இதனைத் தொடர்ந்து, அலகு நம்பிக்கை நிதியங்களில் முதலீடு செய்தல், அலகு நம்பிக்கை நிதியங்களில் மேற்கொண்டுள்ள முதலீடுகளை மீளப்பெறுதல், தமது நிதிகளின் மீதிகளை அறிந்துகொள்ளல், அலகு நம்பிக்கை நிதியத்தின் விலைப்பெறுமதிகளை அறிந்து கொள்ளல், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட First Capital Money Plus நிதி மீது தாம் மேற்கொள்கின்ற முதலீடுகளை உடனடியாக அணுகுவதற்கு டெபிட் அட்டையொன்றைக் கோருதல் போன்ற பரிவர்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தெளிவான அறிவுறுத்தல்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வர்.
தாம் மேற்கொள்கின்ற தொடர்பாடல் உண்மையானதா என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யும் வகையில், Blue Tick அடையாளத்துடன், Meta ஆல் உறுதிப்படுத்தப்பட்ட வணிகக் கணக்கின் (business account) துணையை இச்சேவை கொண்டுள்ளது.
அனைத்து பரிவர்த்தனைகளினதும் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதற்காக, பதிவு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் போது 6-இலக்க OTP (One-Time Password), பாவனையாளர்கள் தளத்தை உபயோகிக்கும் போது மோசடிகளிலிருந்து பாதுகாப்பதற்கு அவர்கள் தளத்தில் எதனையும் மேற்கொள்ளாத பட்சத்தில் 40 செக்கன்களுக்குள் தளம் முடங்கும் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வகைப்பட்ட வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளை First Capital நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர் பதிவு செய்துள்ள பிரதான கணக்கிற்கு மாத்திரமே மீளப்பெறுதல்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது.
இத்தீர்வின் அறிமுகம் குறித்து First Capital நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் அதிகாரியான மிதிலா அபேசேகர அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நிதிச் சேவைகளுடனான இடைத்தொடர்பாடல்களுக்கு தொழில்நுட்பம் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு வருகின்றது. வாட்ஸ்அப் பயன்பாட்டின் மூலமாக, எமது வாடிக்கையாளர்களுக்கு அலகு நம்பிக்கை நிதிய முதலீடுகளை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை நாம் சீரமைத்துள்ளோம். இப்புத்தாக்கமானது அவர்கள் தமது முதலீடுகளை மிகவும் சௌகரியமான வழியில் தங்குதடையின்றி, பாதுகாப்பாக, மற்றும் நவீன முறையில் நிர்வகிக்கும் வாய்ப்பினை வழங்குகின்றது. First Capital நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் அதிகாரி என்ற வகையில், புத்தாக்கம் என்பது தொழில்நுட்பத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று எனவும், இது வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி, நிதியை நிர்வகிக்கும் அணுகலை வழங்குவதுடன் தொடர்புபட்டது எனவும் நான் நம்புகின்றேன். எமது வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்துவதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் மும்மொழி உதவியுடன் கிடைக்கவுள்ள எமது சேவை, வாடிக்கையாளர்கள் தாம் விரும்புகின்ற மொழிகளில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.
First Capital Asset Management நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கவின் கருணாமூர்த்தி அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்கள் சௌகரியமாகவும், இன்னும் இலகுவாக வழிமுறையிலும் அலகு நம்பிக்கை நிதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு உதவுவதில் First Capital நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் ஒரு முன்னோடி நகர்வாக, வாடிக்கையாளர்கள் தமக்கு சௌகரியமான தளமொன்றில் சிரமங்களின்றி தமது முதலீடுகளை நிர்வகிப்பதற்கு அவர்களுக்கு இடமளித்து, பரிவர்த்தனைகளுக்காக வாட்ஸ்அப் ஊடகத்தை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை கிடைக்கச் செய்வதில் எமது அர்ப்பணிப்பை இப்புத்தாக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
நிறைவாக, இலங்கையில் பாரிய மாற்றத்திற்கு வித்திடும் ஒரு முயற்சியாக, வாட்ஸ்அப் ஊடாக அலகு நம்பிக்கை நிதியங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவும், மேற்கொண்டுள்ள முதலீடுகளை மீளப்பெறவும் உதவுகின்ற ஆற்றலை அறிமுகப்படுத்தி, நிதிப் புத்தாக்கத்தில் முன்னின்று செயற்படுவதில் First Capital பெருமை கொள்கின்றது. இப்புதிய சிறப்பம்சமானது, முதலீட்டு நடைமுறையை இலகுபடுத்துவது மாத்திரமன்றி, வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய விரல் நுனிகளில் முதலீடுகளை தங்குதடையின்றி அணுகுவதற்கும் வலுவூட்டுகின்றது. மேலும், மூலதனச் சந்தைகளை ஊக்குவித்து, நிதியியல் அறிவை மேம்படுத்துவதில் சந்தை இடைத்தரகராக செயற்பட வேண்டும் என்ற எமது நோக்கத்தை அடைவதற்கு இந்த முயற்சிகள் எமக்கு இடமளிக்கின்றன.
முற்றும்.
First Capital நிறுவனம் குறித்த விபரங்கள்
ஸ்திரத்தன்மையைக் கட்டிக்காத்து, போட்டி அனுகூலத்தை வளர்த்து, மற்றும் தலைசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் வலுவான கவனத்தைச் செலுத்தியுள்ள First Capital, அதன் “பெறுபேற்றுத்திறனுக்கு முதலிடம்” என்ற நெறிமுறையை உண்மையாக கட்டிக்காப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. வலுவான அடிப்படைகள், அர்ப்பணிப்புமிக்க அணிகள், மற்றும் ஜனசக்தி குழுமத்தின் பக்கபலம் ஆகியவற்றுடன் வலுவாகத் திகழ்ந்து வரும் First Capital, எதிர்வுகூற முடியாத சந்தை நிலைமைகளின் சவால்களை திறம்பட கையாண்டு வருகின்றது. தனது டிஜிட்டல் ஆற்றல்களை மேம்படுத்தி, அவற்றை தனது தொழிற்பாடுகளில் ஒருங்கிணைத்து தனது அடைவுமட்டம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்நிறுவனம் தீவிரமாக விஸ்தரித்து வருகின்றது. வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மாற்றியமைத்து, தொழிற்பாட்டுத் திறனை வளர்த்து மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றை முன்னெடுப்பதில் இம்முயற்சிகள் கவனம் செலுத்தியுள்ளன.
First Capital Holdings PLC நிறுவனம் ஒரு முதன்மை வணிகராகவும், நிறுவன நிதி ஆலோசகராகவும், செல்வ முகாமையாளராகவும் மற்றும் பங்குத்தரகராகவும் இயங்கி வருகின்றது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதலீட்டு வங்கிச்சேவைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க நுகர்வோர் வர்த்தகநாமம் என்ற அங்கீகாரத்தை Brand Finance இடமிருந்து First Capital சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலதன சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தத்திற்கு மேலான நிபுணத்துவத்துடன், இலங்கையில், பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள முழுமையான சேவைகளை வழங்கும் முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்ந்து வருகின்றது. First Capital Holdings PLC நிறுவனத்துக்கு LRA இடமிருந்து Positive outlook உடன் [SL] A கடன் தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
First Capital Holdings PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் வருமாறு: இராஜேந்திரா தியாகராஜா (தலைவர்), மஞ்சுளா மத்தியூஸ் (பிரதித் தலைவர்), டில்ஷான் வீரசேகர (முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி), ரமேஷ் ஷாஃப்டர், குடா ஹேரத், இனோஷினி பெரேரா, ரச்சினி ராஜபக்ச, மற்றும் திலேந்த்ர விமலரசேகர.