இலங்கையின் தொழில்முயற்சியாண்மை எதிர்காலத்துக்கான திறவுகோல்
JXG (ஜனசக்தி குரூப்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழுமையான சேவைகள் முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, First Capital Startup Nation by Hatch எனும் நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக கைகோர்த்துள்ளது. முதலீட்டாளர்களை இலங்கையின் வளர்ந்துவரும் ஆரம்பநிலை நிறுவனங்களுடன் இணைக்கும் நிகழ்ச்சித் திட்டமாக இது அமைந்திருக்கும்.


இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் பொதுவான நோக்கை First Capital மற்றும் Hatch ஆகியன கொண்டுள்ளன. தொலைநோக்குடைய சிறந்த சிந்தனைகளுக்கு வலுவூட்டல் மற்றும் இலங்கைக்கும், அதற்கு அப்பாலும் புத்தாக்கமான தீர்வுகளை கட்டியெழுப்பிக் கொள்வதற்காக தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதனூடாக உண்மையான முன்னேற்றத்தை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதில் இரு நிறுவனங்களும் நம்பிக்கை கொண்டுள்ளன. Hatch ஐப் பொறுத்தமட்டில் இந்தச் செயற்பாடு இயற்கையான அடுத்தகட்டமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக, இலங்கையின் ஆரம்பநிலை வர்த்தக செயற்பாட்டாளர்களின் முதல் இல்லமாக அமைந்திருப்பதுடன், சிந்தனைகள் வியாபாரமாக கட்டியெழுப்பப்படும், தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளாக முன்னேற்றம் காண்பதற்கு பாதுகாப்பான பகுதியை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. ஸ்தாபகர்களுடன் Hatch இணைந்து செயலாற்றி, அவர்களுக்கு அவசியமான நிதி வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு, சந்தைகளை அணுகுவதற்கு மற்றும் எல்லைகளுக்கு அப்பாலான எதிர்காலத்தை சிந்திப்பதற்கு உதவும். First Capital க்கு இந்தப் பங்காண்மையினூடாக அதன் மரபின் நீடிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் நான்கு தசாப்த காலத்துக்கு அதிகமான காலப்பகுதியை கொண்டு, இலங்கையின் நிதிச் சந்தைகளின் முன்னேற்றத்துக்கு வலுவூட்டியவண்ணமுள்ள நிறுவனம், தற்போது முதலீட்டை மனிதருடன் நேரடியாக தொடர்புபடுத்துவதற்கு முன்வந்துள்ளது. தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்களிப்பு வழங்கும் புத்தாக்க செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அமைந்திருக்கும்.
183 க்கு அதிகமான விண்ணப்பங்களிலிருந்து இலங்கையின் சிறந்த 10 ஆரம்பநிலை நிறுவனங்களை இனங்காணும் வகையில் First Capital Startup Nation by Hatch வடிவமைக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு, USD 100,000 நிதி வசதியை பெற்றுக் கொள்வதற்கு வசதியளிக்கப்படும் என்பதுடன், நிதிவசதியளிப்பு வாய்ப்புகளை பின்தொடர்வதற்கும் ஆதரவளிக்கப்படும். மூலதனத்திற்கு அப்பால், இந்தத் திட்டத்தினூடாக, சர்வதேச முதலீட்டாளர் வலையமைப்புகளுக்கான வெளிப்படுத்தல், ஆலோசனை வழங்கல் மற்றும் அணுகும் வாய்ப்பு போன்றனவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உள்நாட்டு சவால்களை நிவர்த்தி செய்யும் வகையிலமைந்த தீர்வுகளில் கவனம் செலுத்துவதுடன், வேகமாக வளர்ந்து வரும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு வருமானத்திற்கு பின்னரான நிலையை ஏற்படுத்தல் மற்றும் சர்வதேச மட்டத்தில் விரிவாக்கம் செய்யக்கூடிய வாய்ப்பைக் கொண்ட B2C மாதிரிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தும் திட்டத்தினூடாக, இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவனங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று, உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் நிலைக்கு உயர்த்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆரம்பநிலை நிறுவனங்களை இணைத்துக் கொள்ளல், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் செப்டெம்பர் 16 முதல் 25 வரை போட்டிகள், முதலீட்டாளர் சந்திப்புகள், கொள்கை கலந்துரையாடல்கள் மற்றும் செப்டெம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வட்டமேசை சந்திப்புகள் போன்றவற்றை இந்த நிகழ்ச்சித் திட்டம் கொண்டிருக்கும். அத்துடன், மாபெரும் காட்சிப்படுத்தல் நிகழ்வு, முதலீட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் தினம் மற்றும் நிறைவு செய்யும் கொண்டாட்டம் ஆகியன ஒக்டோபர் 1 ஆம் திகதி முன்னெடுக்கப்படும்.
இந்த அனுசரணை தொடர்பில் First Capital Holdings PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் தில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “First Capital இல் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியன நாம் யார் என்பதில் மத்திய கருவம்சங்களாக அமைந்துள்ளன. 40 வருடங்களுக்கு மேலாக, நம்பிக்கையை கட்டியெழுப்பி, அணுகலை ஏற்படுத்தி இலங்கையின் நிதிச் சந்தைகளுக்கு நாம் வாய்ப்பளித்துள்ளோம். First Capital Startup Nation இல் Hatch உடன் கைகோர்த்துள்ளமையினூடாக, எமக்கு அந்த மரபை ஆரம்பநிலை வர்த்தக கட்டமைப்பினுள் கொண்டு வந்து, எமது பொருளாதாத்திலும், சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த சிந்தனைகளைக் கொண்ட தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க வாய்ப்பளித்துள்ளது. அனுசரணை வழங்குவதற்கு மாத்திரம் நாம் எம்மை அர்ப்பணிக்கவில்லை, இந்த ஆரம்பநிலை நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து வருவதுடன், அவை வளர்ச்சியடைகையில் அவற்றுடன் இணைந்து பயணிக்கவும் எதிர்பார்க்கிறோம். எமது ஸ்தாபகர் சி.ரி.ஏ. ஷாப்ட்டர் அவர்களின் நோக்கான, அர்த்தமுள்ள முன்னேற்றத்தை முன்னெடுப்பது மற்றும் இலங்கையின் புத்தாக்க கதையின் அடுத்த அத்தியாயத்தை கட்டியெழுப்புவது என்பதைப் பற்றியதாக அமைந்துள்ளது.” என்றார்.
Hatch இன் இணை ஸ்தாபகர் ஜீவன் ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு அவசியமான நிதிவசதிகள் மற்றும் சந்தை அணுகலை ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றின் வளர்ச்சிக்கு அவசியமான வளங்கள், ஆலோசனைகள் மற்றும் சர்வதேச வெளிப்படுத்தல்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் First Capital Startup Nation வடிவமைக்கப்பட்டுள்ளது. Hatch ஐ பொறுத்தமட்டில் நாம் எப்போதும் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் இயற்கையான தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஸ்தாபகர்களுக்கான முதல் இல்லமாக அமைந்திருப்பது, மூலதனத்தை திரட்டிக் கொள்ள உதவுவது, சந்தைகளை கண்டறிவது மற்றும் எல்லைகளுக்கு அப்பால் வியாபிப்பதற்கான கனவுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றை நாம் மேற்கொள்கிறோம். First Capital உடன் கைகோர்த்துள்ளமை என்பது அடுத்த படியாக அமைந்துள்ளது. அவர்களின் நிதிசார் நிபுணத்துவம், வலையமைப்பு தொடர்புகள் மற்றும் பல தசாப்த கால நம்பிக்கை போன்றன இலங்கையின் ஆரம்பநிலை நிறுவனங்களை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான சிறந்த கைகோர்ப்பாக இருக்கும். ஒன்றிணைந்து நாம் நிகழ்ச்சியை முன்னெடுப்பது மட்டுமன்றி, இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு முயற்சியுடன் திகழ்ந்து, சர்வதேச மட்டத்தில் போட்டியிடுவதற்கு உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கை அதன் தொழில்முயற்சியாண்மை ஆற்றலை வெளிப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் காணப்படும் சூழலில், First Capital Startup Nation by Hatch என்பது ஒரு போட்டி என்பதற்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. நீண்ட கால வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சர்வதேச போட்டிகரத்தன்மை போன்றவற்றுக்கான திறவுகோலாக அமைந்திருக்கும். First Capital மற்றும் Hatch ஆகியன கைகோர்த்துள்ளதனூடாக, முன்னேற்றத்தின் பங்காளர்கள் எனும் தமது நிலையை உறுதி செய்து, ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி, இலங்கையின் தொழில்முயற்சியாண்மைகளுக்கு உலக மட்டத்தில் இயங்குவதற்கு வாய்ப்பளிப்பதாக அமைந்துள்ளது.