FOTD விருது வென்ற OPPO INNO DAY 2021

Share with your friend

OPPO INNO DAY 2021 இணையத்தளமானது, FWA (‘Favourite Website Awards’ விருப்பமான இணையத்தள விருதுகள்) இனால் வழங்கும் FOTD (FWA of the Day) விருதை வென்றுள்ளது. டிஜிட்டல் வடிவமைப்பு மற்றும் ஊடக படைப்பாற்றல் துறையில் முன்னணி விருதுகளில் ஒன்றான, FWA ஆனது 35 நாடுகளில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட தொழில்முறை நடுவர்களை உள்ளடக்கியதாகும். இது, நிகழ்நேரத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மிகவும் முற்போக்கான மற்றும் முன்னோக்கி செல்லும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்பை இணைத்து அதிநவீன படைப்பாற்றலை அது வெளிப்படுத்துகிறது.

“‘Möbius Strip’ எனும் எண்ணக்கருவின் அடிப்படையில் ஒரு ஒன்லைன் நிகழ்வாக இடம்பெற்ற, OPPO INNO DAY 2021 ஆனது மெய்நிகர் முறையில் சீனாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். டிஜிட்டல் மற்றும் மகிழ்ச்சியான INNO WORLD நிகழ்வானது, பார்வையாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத ஒருவரோடு ஒருவர் உரையாடும் அனுபவத்தை வழங்குகிறது. ஒன்லைன் மெய்நிகர் உலகம் எம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதை இது காட்டுகிறது.” இவ்விருது வழங்கல் தொடர்பிலான FWA இனது விளக்கம் இவ்வாறு அமைகின்றது.

OPPO INNO DAY 2021 ஆனது, டிசம்பர் 14-15 இல் ஒன்லைனில் OPPO INNO WORLD இல் இடம்பெற்றது. INNO WORLD இல், பார்வையாளர்கள் தங்கள் மாயத் தோற்றத்தை (avatar) தனிப்பயனாக்கலாம் என்பதுடன், நேரடி ஒளிபரப்புகளைப் பார்வையிடவும், புகைப்படங்களை எடுக்கவும், அண்மையில் வெளியான OPPO Air Glass, OPPO Find N உள்ளிட்ட ஏனைய அதிநவீன தொழில்நுட்பங்களையும் அனுபவிக்கலாம். அதே நேரத்தில், INNO WORLD இனால் நேரம் மற்றும் பெளதீக வரம்புகளைக் கடக்க முடிந்துள்ளது. பயனர்கள் சுதந்திரமாக உரையாடலில் ஈடுபடவும், உலகம் முழுவதிலுமுள்ள ஏனைய நபர்களுடன் தொடர்பு கொள்ளவும், இமோஜிகளை அனுப்பவும் அவர்களின் ஆளுமைகளை வெளிப்படுத்தவும் அது அனுமதிக்கிறது. INNO DAY 2021 இன் போது, ​​2,500,000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் INNO WORLD இற்குள் நுழைந்து OPPO வின் புதுமைகளை அனுபவித்தனர். தற்போதுவரை ​​INNO WORLD இனை இன்னும் ஒன்லைனில் அணுகக்கூடியதாக உள்ளதுடன், மேலும் பல பயனர்களுக்கு அற்புதமான மெய்நிகர் தொடர்புகளை வழங்கத் தயாராகவும் உள்ளது.

Favourite Website Awards விருதுகளுக்கான சுருக்கமான FWA, மே 2000 இல் ஐக்கிய இராச்சியத்தின் (UK) இங்கிலாந்து நகரில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக, FWA ஆனது, உத்தியோகபூர்வமான FOTD (FWA of the day), FOTM (FWA of the month), FOTY (FWA of the year) விருப்பத்திற்குரிய இணையத்தள விருதுகள் மற்றும் மக்கள் தெரிவு விருதுகளை தினசரி, மாதாந்த, வருடாந்த அடிப்படையில் வழங்கி வருகின்றது. அந்த வகையில், டிஜிட்டல் வடிவமைப்பு மற்றும் இணையத்தள மேம்பாட்டு (design and web development) துறையில் உலகெங்கிலும் உள்ள வடிவமைப்பாளர்களை அது தொடர்ந்தும் ஊக்கப்படுத்தி வருகின்றது.


Share with your friend