இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த 40 பணியிடங்களில் மீண்டுமொரு முறை DHL Sri Lanka பெயரிடப்பட்டுள்ளதுடன், தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை இம்முறை சுவீகரித்துக் கொண்டுள்ளது. மக்களை மையமாகக் கொண்ட கலாச்சாரம் கூட்டுப் பணிச் சூழலை எடுத்துக் காட்டும் வகையில் கடந்த நான்கு தசாப்த காலமாக செயற்பட்டு வருவதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிடைக்கப் பெற்ற இந்த கௌரவ விருதுகளில் இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த 40 பணியிடங்களில் Great Place to Work 2021 இன் சான்றிதழ் வழங்கட்டுள்ளதுடன், பல்தேசிய பிரிவில் தங்க விருதும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் பிரிவில் வெள்ளி விருதும், DHL Express உலகின் சிறந்த பணியிடமாக முதலாவது இடத்தை பிடிப்பதற்கு வழங்கிய பங்களிப்பிற்கு DHL Express Sri Lanka விற்கு விசேட விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
DHL Express Sri Lanka ஆனது ஊழியர்களுக்கு செழுமையான கலாசாரம் மற்றும் பணிச் சூழலை உருவாக்குவதற்காக அளிக்கும் முக்கியத்துவத்திற்கு சான்றாக பணிபுரிய சிறந்த இடத்திற்கான விருதுகளை ஏறக்குறைய 7 வருடங்களாக தொடர்ச்சியாகப் பெற்று வருகின்றது.
நம்பிக்கை, மனித ஆளுமையை வலுப்படுத்தல், மதிப்புக்கள் மற்றும் தலைமைத்துவ வினைத்திறன் புத்தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் நிதி வளர்ச்சிகளினூடாக சிறந்த பணியிடங்களை மதிப்பீடு செய்யூம் முறை இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுநோய் நிலைமையானது ஊழியர்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்திய போதிலும், DHL Express Sri Lanka அக்கறையுள்ள கலாச்சாரத்தை கொண்ட பணியிடத்தை மேம்படுத்துவதற்கான தனது தேடலை தொடர்ந்தமையால் Great Place to Work 2021 என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
DHL Express Sri Lanka வினை பணியாற்றுவதற்கான சிறந்த பணியிடமாக மாற்றுவதற்கு எமது குழுவினர் அன்றாடம் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளை எண்ணி நான் மிகவும் பெருமையடைகின்றேன். இந்த அங்கீகாரங்களைப் பெறுவது எங்கள் நிறுவனத்திற்கான தர சான்றாக அமைவதுடன், எங்கள் ஊழியர்களின் கடின உழைப்பை மீண்டுமொரு முறை இது அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் தொற்றுநோய் சூழ்நிலையிலும், சிறந்த திறமைகளை ஈர்க்கும் எமது கலாச்சாரத்தினூடாக எதிர்வினையாற்றுவதில் எமது குழுவினர் மிகவும் அவதானமாக செயற்பட்டு வந்தனர். புத்தாக்கத்தை விரைவுப்படுத்தவும், மேலும் எமது வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவும், எமது சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” என DHL Express Sri Lankaவின் இலங்கைக்கான தலைமையதிகாரி டிமித்ரி பெரேரா தெரிவித்தார்.
DHL Express Sri Lanka ஆனது உள்நாட்டு தரப்படுத்தலில் அதன் தாய் நிறுவனத்தின் தகைமையை பிரதிபலிக்கின்றது. Fortune Magazine னுடன் இணைந்து Great Place to Work (GPTW) வெளியிட்ட வருடாந்த தரப்படுத்தல் பட்டியலின் பிரகாரம்இ உலகின் முன்னணி சர்வதேச விரைவு சேவை வழங்குனரான DHL Express உலகளவில் சிறந்த பணியிடமாக முதலிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
GPTW கணக்கெடுப்பு, 2020 இல் நிறுவனத்தின் 93% மதிப்பெண்ணை விஞ்சி, ஊழியர்களின் ஊக்கம் மற்றும் ஈடுபாடு நிலைகளில் அதிகரிப்பை காண்பிக்கின்றது. இந்த சவால் மிக்க தருணத்தில், ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் நலன்புரி குறித்து DHL Express கவனம் செலுத்தியதுடன், ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை அறிந்து ஒத்துழைப்பு வழங்கியது.
“ஊழியர்களின் திருப்தியையே நாம் DHL Express Sri Lanka இன் மனித வளக் கொள்கையின் மையமாக கருதுகின்றௌம். அவ்வாறு செய்வதனூடாக ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்குமிடையே உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு சிறந்த பணியிட கலாச்சாரத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். ஊழியர்கள் அதீத நம்பிக்கையூடனான அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் போது, அவர்கள் சிறந்த வணிக முடிவுகளை மேற்கொள்வார்கள். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் இலக்குகளை அடைய நாங்கள் உதவுவதால் அவர்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம்” என DHL Express Sri Lanka இன் மனித வளப் பிரிவிற்கான தலைமையதிகாரி தாரக டி சில்வா தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள சிறந்த பணியிடங்களை கணிப்பிட்டு அங்கீகரிப்பதில் இலங்கையின் Great Place to Work நிறுவனம் முன்னோடியாக உள்ளது. மூன்று தசாப்தங்களில் 58ற்கும் மேற்பட்ட நாடுகளில் சிறந்த பணியிடங்களை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை ஆய்வுக் கட்டமைப்பானது சர்வதேச மாதிரி மற்றும் கடுமையான வழிமுறையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா உட்பட உலகெங்கிலும் இதே போன்ற ஆய்வு முறை மேற்கொள்ளப்பட்டு கணிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.