HNBஇன் பண்டிகைக்கால சேமிப்பு:Happy புத்தாண்டு சலுகைகள்

Share with your friend

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் பெறுமதியான டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கான தவிர்க்க முடியாத கழிவுகள் மற்றும் ஒப்பந்தங்களின் வரிசையுடன், வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

HNB இலங்கையின் முன்னணி வர்த்தக நிலையங்கள், பேஷன் கடைகள், நகைகள் மற்றும் இ-காமர்ஸ் பிராண்டுகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பிரபலமான உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹோட்டல்களுடன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுதாரர்களுக்கு 30 ஏப்ரல் 2024 வரை இணையற்ற நன்மைகளை வழங்குவதற்காக கூட்டு சேர்ந்துள்ளது.

“நாங்கள் புத்தாண்டு பண்டிகைக் காலத்திற்கு உற்சாகமாக காலடி எடுத்து வைக்கும் போது, நாடு முழுவதிலும் உள்ள வணிகர்களின் விரிவான வலையமைப்புடன் HNB பங்காளியாகி, எங்களின் அன்பான கார்ட் அட்டைதாரர்களுக்கு இணையற்ற சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இந்த ஆண்டு, மளிகை சாமான்கள் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்கள் முதல் உயர்தர எலக்ட்ரோனிக்ஸ் மற்றும் ஆடம்பரமான உணவு அனுபவங்கள் வரை பலவிதமான தேவைகள் மற்றும் விருப்பங்களை உள்ளடக்கிய வகையில் எங்கள் சலுகைகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்டறிந்துள்ளோம்.

“எங்கள் இலக்கு விதிவிலக்கான மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாடிக்கையாளர்களின் பண்டிகை கொண்டாட்டங்களை வளப்படுத்தவும், அவர்கள் எளிதாகவும் வசதியுடனும் கொடுக்கல் வாங்கல் மகிழ்ச்சியில் ஈடுபட வாய்ப்பளிக்கிறது. ஒற்றுமையும் பாரம்பரியமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் நேரத்தில், எங்களின் புத்தாக்கமான வங்கித் தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம் இந்த தருணங்களை மேம்படுத்துவதற்கு HNB உறுதிபூண்டுள்ளது. புத்தாண்டின் உண்மையான உணர்வை ஏற்படுத்தி, மகிழ்ச்சியையும் செழிப்பையும் பரப்பும் வகையில், இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள எங்களின் அனைத்து அட்டைதாரர்களையும் அழைக்கிறோம்.” என HNB கார்ட் பிரிவின் பிரதானி கௌதமி நிரஞ்சன் தெரிவித்தார்.

பண்டிகைக் கால ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த, வங்கி வாடிக்கையாளர்களுக்கு 36 மாதங்கள் வரையிலான 0% வட்டி தவணைத் திட்டங்களின் வசதியை வழங்கும். இந்த முன்முயற்சியானது, கடைக்காரர்கள், Solar, எலக்ட்ரோனிக் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரம் முதல் நகைகள் வரை-உடனடி நிதிச் சுமையின்றி தாங்கள் விரும்பிய கொள்வனவு செய்வதில் ஈடுபட வழிவகுக்கிறது. நிர்வகிக்கக்கூடிய மாதாந்த கொடுப்பனவுகளின் மீது செலவை விரிவுபடுத்துவதன் மூலம், இந்த திட்டங்கள் விடுமுறைக்கால கொடுக்கல் வாங்கல் திட்டங்களுக்கு எளிதாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன, இந்த கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்கிறது.

HNB, ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் உள்ளவாறு சிறப்பு சூப்பர் மார்க்கெட் சலுகைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது, இதில் திங்கள் கிழமைகளில் கார்கில்ஸில் 4,000 ரூபாவுக்கும் மேற்பட்ட பில்களுக்கு பால் பொருட்களில் 20% தள்ளுபடி, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கீல்ஸில் புதிய காய்கறிகள் மற்றும் கடல் உணவுகளுக்கு 25% தள்ளுபடி, மற்றும் வார இறுதி நாட்களில் Arpicoவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இறைச்சி வகைகளுக்கு 30% தள்ளுபடி ஆகியவை அடங்கும். மேலும், Laugfs Super மற்றும் Glomark ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட திகதிகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகின்றன, Glomark வாடிக்கையாளர்கள் மொத்த பில்லுக்கு கிரெடிட் கார்டில் 25% தள்ளுபடியையும், Laugfs Super இல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடியையும் வழங்குகின்றது.

வங்கி House of Fashion, Cool Planet, Hameedia, NOLIMIT, CIB, Fashion Bug, Spring & Summer, Emerald, Arienti, Odel மற்றும் பல புகழ்பெற்ற பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதுடன், அதன் அட்டைதாரர்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்த பொருட்களில் 30% வரை தள்ளுபடி பெறலாம் மற்றும் இந்த Avurudu காலத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மேலதிக தள்ளுபடிகள் மூலம் பயனடையலாம்.


Share with your friend